தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலில் திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்ளன என்பதை அட்ரஸ்பாரில் உள்ள Favicon-ல் அறிய ஒரு Labs

♠ Posted by Kumaresan Rajendran in at January 28, 2011
ஈ-மெயிலில் அதிகமான சேவையினை வழங்கி வருவது கூகிள் நிறுவனம் ஆகும். கூகிள் நிறுவனத்துடைய ஈ-மெயில் சேவையான ஜிமெயில் மூலமாக அவ்வபோது கூகிள் நிறுவனம் புதுப்புது சேவைகளை வழங்கி வருகிறது, அதை போல அண்மையில் கூகிள் நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது, இதன் மூலம் நம்முடைய அட்ரஸ்பாரில் உள்ள Favicon ஐகானிலேயே திறக்கப்படாமல் எத்தனை ஈ-மெயில்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக நாம் வேறு தளத்தில் உலவும்போது நம்முடைய ஈ-மெயிலுக்கு புதியதாக ஈ-மெயில்கள் வந்தால் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த சேவையினை உங்களுடைய ஈ-மெயிலில் இணைத்துக்கொள்ள முதலில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொலைக் கொடுத்து உள் நுழையவும். பின் Setting என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின் அதில் Labs பட்டியினை தேர்வு செய்யவும். அதில் Unread message icon என்னும் Labsயை  எனேபிள் செய்யவும். பின் Save Change என்னும் பட்டியை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும். 


இப்போது ஜிமெயிலானது மறுதொடக்கம் ஆகும், இப்போது பார்த்தால் உங்களுடைய அட்ரஸ்பாரில் உள்ள  Favicon ஐகானில் எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும்.


இப்போது எத்தனை ஈ-மெயில்கள் திறக்கப்படாமல் உள்ளது, என்பதை உங்களுடைய ஈ-மெயில் திறக்கப்பட்ட அட்ரஸ்பாரிலும், டேப் ஐகானிலும் காண முடியும்.

1 Comments:

அறிந்த தகவல்களாயினும்.. அறியதந்தமைக்கும் மிக்க நன்றி.. புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள இடுகை..! வாழ்த்துக்கள்..!

Post a Comment