தமிழில் கணினி செய்திகள்

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,, at February 26, 2011
வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு. நம்முடைய சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம். இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011- மார்ச் 22வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


JPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Compress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக  சேமித்து கொள்ளவும். இமேஜ்களை  பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும்.

2 Comments:

i want the free software for photo to video converting

மிக மிக வேளையை எளிதிலும், சீக்கிரமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி

Post a Comment