தமிழில் கணினி செய்திகள்

போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in at March 02, 2011
தற்போதைய நிலையில் எந்த ஒரு விழாவாக இருப்பினும் வீடியோ கவரேஜ் மூலம் படம் எடுத்து அதனை பின் காண்போம். ஆனால் முன்பு வெறும் புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்ததது. அவ்வாறு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வரலாற்று சுவடுகளாக உள்ளது. அந்த புகைப்படங்களை பெரும் பொக்கிஷமாக தற்போது சேமிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் நாளடைவில் பெருகிவிடும். இவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பயன்படுத்தினால், அது காலத்துக்கும் அழியாமல் இருக்கும்.  புகைப்படங்களை வீடியோவாக மாறம் செய்து வைத்துக்கொள்வதால் அதை அழியாமல் பார்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செயத பிறகு Add என்ற பொத்தானை அழுத்தி போட்டோக்கள் கணினியில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தேர்வு செய்யவும். வேண்டுமெனில் வீடியோ பேக்ரவுண்ட் சவுண்டையும் இணைத்துக்கொள்ள முடியும். Video Output என்ற பட்டியை அழுத்தி Convert Now என்றபொத்தானை அழுத்தவும்.


அடுத்து சில நொடிகளில் வீடியோ பைல் உருவாகிவிடும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைலானது சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளின் கூடுதல் வசதி என்னவெனில், நீங்கள் உருவாக்கும் வீடியோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் எளிதாக போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது MPEG பைல் பார்மெட்டில் சேமிக்கப்படும்.

4 Comments:

பகிர்வுக்கு நன்றி சார் :)

இந்த மென்பொருள் என் கணிணியில் சரியா வேலை செய்யலைங்க சார். "Pinnacle"-னு ஒரு மென்பொருள் அது நல்லா இருக்கு. கூகிள் சர்ச்ல Pinnacle creak download னு தேடி டவுன்லோடு செஞ்சுபாருங்க.

//ஆர்.சண்முகம்
இந்த மென்பொருள் என் கணிணியில் சரியா வேலை செய்யலைங்க சார். "Pinnacle"-னு ஒரு மென்பொருள் அது நல்லா இருக்கு. கூகிள் சர்ச்ல Pinnacle creak download னு தேடி டவுன்லோடு செஞ்சுபாருங்க.//


நான் இந்த மென்பொருளானது சரியாக வேலை செய்கிறதா, இல்லையா என்பதை சரிபார்த்த பிறகே பதிவு செய்துள்ளேன்.

Pinnacle மென்ப்ரொருளை நானும் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றாகவே இருக்கும். அதற்கான ஒரு மாற்று மென்பொருள் தான் இந்த மென்பொருள்.

i like this website sir thank you saravanan.s

Post a Comment