தமிழில் கணினி செய்திகள்

ட்ரைவர்களை இலவசமாக அப்டேட் செய்ய - DriverMax இலவச கணக்கு

♠ Posted by Kumaresan Rajendran in , at April 10, 2011
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு உயிர்நாடி ட்ரைவர் ஆகும். இதனை நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய உடனே ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வாறு நிறுவினால் மட்டுமே நம்முடைய கணினியில் முழுமையாக பனியாற்ற முடியும். இல்லையெனில் பல தொந்தரவுகள் ஏற்படும் ஆடியோ இயங்காது, வீடியோ பைல்களை சரிவர பார்க்க இயலாது. போன்ற பல்வேறு பிரச்சினைகள் நமக்கு ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகள் ட்ரைவர்கள் புதுப்பிக்கபடாமல் இருந்தாலும் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில், ட்ரைவர்களை மேம்படுத்த வேண்டும். ட்ரைவர்களை புதியதாக விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ட்ரைவர்களை மேம்படுத்த வேண்டும். இணையத்தில் இருந்து நாம் ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கும் பணம் செலுத்த வேண்டும். தற்போது DriverMax என்ற நிறுவனம் ட்ரைவர்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு நாம் ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இலவச கணக்கை உருவாக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Activare full version என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே உங்கள் மின்னஞ்சலை ஒப்பன் செய்யவும். புதியதாக ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து கணக்கை உறுதிபடுத்தும் சுட்டியை அழுத்தி கணக்கை உறுதிபடுத்தவும். அந்த மின்னஞ்சலிலேயே DriverMax Pro  க்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் இருக்கும். அதனை குறித்துக்கொள்ளவும். இந்த இலவச கணக்கை நீங்கள் 11 ஏப்ரல் 2011 வரை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது. அடுத்து DriverMax மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Driver downloads and info என்னும் வரிசையில் உள்ள Check online for driver updates என்னும் தேர்வினை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Yes I agree என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் படிமுறைகளில் விவரங்களை உள்ளிடவும். கடைசியாக மின்னஞ்சலில் இருக்கும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அவ்வளவுதான் DriverMax கணக்கு முழுமையாக உருவாக்கப்பட்டு விடும்.


இப்போது உங்களுடைய கணினி சோதிக்கப்பட்டு ட்ரைவர்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய ட்ரைவர்களை இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். ட்ரைவர்களை அப்டேட் செய்ய முன்பெல்லாம் பணம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அப்டேட் செய்ய முடியும். ஆனால் இனி அவ்வாறு இல்லை, இந்த முறையை பயன்படுத்தி இலவசமாக விரும்பிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment