தமிழில் கணினி செய்திகள்

தேவையற்ற சுருக்குவிசைகளை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in at June 12, 2011
கணினியில் மென்பொருளை நிறுவும்போது சேர்ந்தே டெஸ்க்டாப், ஸ்டார்ட் மெனு சுருக்குவிசைகள் சேர்ந்தே நிறுவப்படும். கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம், தேவையில்லையெனில் அவற்றை கணினியை விட்டு நீக்கிவிடுவோம். அவ்வாறு நீக்கும் போது முழுமையாக அந்த மென்பொருளானது கணினியை விட்டு நீங்காது. ஸ்டார்ட் மெனு சுருக்குவிசை, டெஸ்க்டாப் சுருக்குவிசை போன்றவை கணினியிலேயே தங்கிவிடும் அவற்றை நீக்க முயற்ச்சித்தால் கோளாருச்செய்தியே காட்டும். இவ்வாறு கணினியிலேயே தங்கிவிடும் சுருக்குவிசைகளை நீக்க ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Bad Shortcuts என்னும் பொத்தானை அழுத்தவும். பின் தேவையில்லாத சுருக்குவிசைகளை தேர்வு செய்து. Delete Selected Shortcuts என்னும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும். இதன் மூலம் தேவையில்லாத சுருக்குவிசைகளை எளிமையாக நீக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

3 Comments:

நல்ல தகவல் நன்றி நண்பரே

நல்ல தகவல்...இவ்வாறான மென்பொருள்களை protable ஆகவும் தாருங்கள்.

ESET NOD32 is showing virus Win32/Toolbar.Zugo potentially unwanted application

Post a Comment