தமிழில் கணினி செய்திகள்

வலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற

♠ Posted by Kumaresan Rajendran in , at July 23, 2011
இணைய உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ ஆகும். இதன் மூலம் மிக விரைவாக நம் நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த வசதி முகநூல் சேவைக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆகும். இந்த வசதி இவ்வளவு பெரிய வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. அந்த அளவிற்கு கூகுள்+ சேவை பிரபலம் அடைந்துள்ளது.  இந்த சேவையின் மூலம் நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும். இதற்கு நாம் நம்முடைய நண்பர்களின் கூகுள்+ டன் இணைந்திருத்தல் அவசியம். நம்முடைய நண்பர்களையோ வாசர்களையோ விரைவாக நம்முடைய கூகுள்+ல் கணக்கில் இணைக்க ஒரு எளிமையான வழிதான் கூகுள்+ விட்ஜெட் ஆகும். கூளுள்+ விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் இணைக்க வேண்டும். 

கூகுள்+ விட்ஜெட்டை இணைக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get widget என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய கூகுள்+ ஐடினை கொடுக்கவும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளவும். அகலம், உயரம், நிறம் போன்றவற்றை நம்முடைய விருப்பபடி மாற்றிக்கொள்ளவும். பின் Get Code என்னும் பொத்தானை அழுத்தவும்.

உங்களுடைய கூகுள்+ ஐடியினை பெற சுட்டி


பின் உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி செய்து, வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும். வலைப்பூவில் சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும். பின் Dashboard > Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும். தற்போது உங்களுடைய வலைப்பூவினை பார்க்கவும். 


உங்களுடைய கூகுள்+ இணைந்திருக்கும். அதை பயன்படுத்தி உங்கள் நண்பர்களோ, வாசகர்களோ உங்கள் கூகுள்+ல் எளிதில் சேர முடியும். இந்த பதிவு பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்.

6 Comments:

நல்ல தகவல் நண்பரே

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.
கந்தசாமி
மதுரன்
பிரகாஷ்

hi sir you have google+ invite pls send my mail - tharikpiya@gmail.com

Tharik
tharikpiya@gmail.com//

கூகுள்+ பயனாளர் பெயரை குறிப்பிடுங்கள்

Post a Comment