தமிழில் கணினி செய்திகள்

லைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,, at July 26, 2011
இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் பலவும், ஐஎஸ்ஒ (ISO) பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த ஐஎஸ்ஒ (ISO) பைல்களை நாம் போர்ட்டபிள் பைல்களாக மாற்றிய பின்புதான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் பைலாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ பைலின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் பைலாக மாற்றிய பின்புதான் முடியும். நேரடியாக ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும். மேலும் இவற்றை கணினியில் நிறுவிய பின்புதான் பயன்படுத்த முடியும். பூட்டபிள் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க ஒரு இலவ்ச போர்ட்டபிள் மென்பொருள் உள்ளது. இது அளவில் சிறியது ஆகும். லைவ் சீடிக்களை நேரடியாக விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே பயன்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கொள்ளவும். பின் அந்த போர்ட்டபிள் மென்பொருளின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் Right-Click menu என்பதை கிளிக் செய்யவும். தற்போது MobaLiveCD முழுமையாக நிறுவப்படும்.


பின் உங்கள் விருப்ப முறைகளை தெரிவு செய்யவும். Run the LiveCD அல்லது Run the LiveUSB என்பதை தெரிவு செய்யவும். 


பின் ஐஎஸ்ஒ பைலையோ அல்லது, லைவ் சீடியினையோ தேர்வு செய்யவும். தற்போது MobaLiveCD பைல் சேமிக்கப்படவேண்டிய இடத்தை தெரிவு செய்து கொள்ளவும்.



அவ்வளவுதான் தற்போது நீங்கள் குறிப்பிட்ட பைல் இயங்க தொடங்கும். நீங்கள் சீடியில் உள்ள பைலை தேர்வு செய்வதே சிறந்தது.


இனி நீங்கள் இதை எளிகையாக பயன்படுத்த முடியும். Ctrl + Alt கீகளை அழுத்துவதன் மூலம் QEMU விண்டோவில் உங்களால் பயணிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். இயங்குதளத்தை நிறுவ கற்றுகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

4 Comments:

தகவலுக்கு நன்றி பாஸ் , தேவை ஏற்ப்படும் போது உங்க பதிவு எனக்கு உதவும்.

தகவலுக்கு நன்றி பாஸ் , தேவை ஏற்ப்படும் போது உங்க பதிவு எனக்கு உதவும்.

நன்றி
கந்தசாமி,
நண்பன்.

if u want to just extract the iso or if u want to see what are all files located inside that iso file then u can use winrar,by right clicking that iso file and choose extract... :)

(NOTE:this is for iso file which is not need to be bootable to use)

Post a Comment