தமிழில் கணினி செய்திகள்

ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at March 17, 2013


சாதரணமாக மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க வேண்டுமெனில் நாம் அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களின் இணைய இணைப்பு மென்பொருளை பயன்படுத்தி இணைப்போம். ஆனால் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் எந்தவித மென்பொருளும் இன்றி இணையத்தை இணைக்க முடியும். ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு இணையத்தை இணைக்க USB கேபிள் வேண்டும், இல்லையெனில் ஆன்ட்ராய்ட் பொபைல் போனிலும், உங்களது கணினியிலும் Wifi வசதி இருந்தால் அதை கொண்டும் இணையத்தை இணைக்க முடியும். USB கேபிள் மூலம் இணையத்தை இணைக்க அந்தந்த குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை கணினியில் நிறுவ வேண்டும்.

ஆன்ட்ராய்ட் மொபைல் போன் கொண்டு இணையத்தை இணைக்க முதலில் மொபைல் போனில் Setting செல்ல வேண்டும்.




பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Wireless & networks என்பதை தேர்வு செய்யவும்.

 


பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Tethering & portable hotspot என்பதை தேர்வு செய்யவும்.



பின் அடுத்து தோன்றும் விண்டோவில் USB கேபிள் மூலமாக  இணைக்க USB tethering என்பதை தேர்வு செய்யவும். Wifi மூலமாக இணைக்க Portable Wi-Fi hotspot என்பதை தேர்வு செய்யவும். 

 
 
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது சில நெடிகளில் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும். முக்கியமான ஒன்று முதலில் உங்கள் மொபைல் போனில் இணைய சரியாக இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். மொபைல் போனில் இணையப்பக்கம் ஒப்பன் ஆகிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும்.



இவ்வாறு செய்யும் போது உங்கள் கணினி இணைய இணைப்பில் இணைக்கப்படவில்லையெனில் அதற்கு முக்கிய காரணம் USB ட்ரைவர் சரியாக நிறுவப்பட்டிருக்காது. USB ட்ரைவர்களை கணினியில் நிறுவிய பிறகுதான் இணையம் இணைக்கப்படும். கீழே இருக்கும்  சுட்டியை பயன்படுத்தி ஆன்ட்ராய்ட் USB ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.  

23 Comments:

இந்தப் பதிவை ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்கக் கூடாதா, சார்? இந்த வசதியைப் பற்றித் தெரிந்திராததால், தனியாக பிராட்பென்ட் வாங்கி மாதா மாதம் நுறு (மலேசிய) ரிங்கிடை விரையமாக்கியிருக்கிறேன்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் தட்டுத் தடுமாறி சுயமாகக் தட்டுத் தடுமாறிக் கற்றுக் கொண்டேன்.

இப்பதிவில் ஒரு சிறு குறிப்பையும் சேர்த்துக கொள்வது நலம். அதாவது, இப்படி கைப்பேசி மூலம் கணினியில் இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, file transfer, h/p mobile internet போன்றவை இயங்காமல் போகலாம். அதாவது கைப்பேசியில் எடுக்கப்பட்ட நிழல் படங்களைக் கணினியில் யுஎஸ்பி மூலம் transfer செய்ய முடியாது.

இன்னொரு காரியம் யாதெனில், Wi-Fi மூலம் குறைந்தது 10 கணினிகளுக்கு இப்படிப்பட்ட இணையத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாம். இதற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்து, அதிர்ந்தே போனேன்.

கடைசியா, ஓர் அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

//Johnson Victor

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி, தாங்கள் கூறியபடி Wifi மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளுக்கு இணைய இணைப்பினை ஆன்ட்ராய்ட் மொபைல் போன் மூலமாக கொடுக்க முடியும். இது சாதரணமாகவே Wifi வசதியில் உள்ள சிறப்பம்சம் ஆகும்.

மேலும் தாங்கள் கூறியது போல் மொபைல் போன் கொண்டு இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் போது FTP சரியாகத்தான் வேலைச் செய்கிறது. மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணினிக்கு USB மூலம் எளிதாக தரவேற்றிக்கொள்ள முடியும்.

இரண்டு வருடமாக ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டுதான் நாம் இணையத்தை வலம் வருகிறேன். நீங்கள் கூறியப்படி பிரச்சினை இதுவரை எனக்கு வரவில்லை.

//திண்டுக்கல் தனபாலன்

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..,

உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் வாசிப்பேன். ஆனால், எல்லாவற்றிலும் இதுதான் மிக முக்கியமான பதிவாகத் தோன்றுகிறது. அதுவும் இணையத் தொடுப்புக்கு மாதா மாதம் 300 ரிங்கிட் செலவழிக்கும் நிலைமையில் இந்தத் தகவல் முன்பாகவே கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில்தான் பின்னூட்டம் வழங்கினேன்.

தொடர்ந்து பதிவுகள் வழங்க உற்சாகப்படுத்துகிறேன்.

ஜான்சன் விக்டர்
ரவாங், சிலாங்கூர், மலேசியா.

அன்பு நண்பரே ஒன்று மட்டும் புரியவில்லை.தங்களது இந்த பதிவு மொபைல் போனில் உள்ள இணையத் தொடர்பை கொண்டு கணிணி உடன் இணைத்து கணிணியில் பயன்படுத்துவதா? அல்லது கணிணியில் உள்ள இணையத்தொடர்பைக் கொண்டு ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்துவதா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

//devadass snr

மொபைல் போனில் உள்ள இணைய தொடர்பை கணினியில் இணைத்து பயன்படுத்துவது ஆகும்.

அன்பு நண்பரே கணிணியில் உள்ள இணையத் தொடர்பைக்கொண்டு ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்த இயலுமா?இருந்தால் தயவுசெய்து ஒரு பதிவாக தருமாறு வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

கண்டிப்பாக முடியும் நண்பரே, Wifi இணைப்பை பயன்படுத்தி இணையத்தை இணைக்க முடியும்.

அடுத்த பதிவில் தெளிவாக எழுதுகிறேன்.

//devadass snr

http://tamilcomputerinfo.blogspot.in/2013/03/blog-post_24.html

பயனுள்ள தகவல் நன்றி நண்பா

இதில் wifi யில் பயன்படுத்துவது தான் மிக சுலபமான வழி மற்றும் அருமையான சேவையும் கூடா

ஆண்டராய்ட் கைபேசியில் wifi வழி இணைய இணைப்பு தொடர்பு கொள்ளுவது தான் மிக சுலபமான வழி

Tamil fonts not working in my android. Iball andi 3.5i kke 2.3.8. How to view Tamil fonts clearly. Help me. Reply my mail dhakshina.2020@yahoo.com

எனது மொபைல் sony ercson wt19i இதற்கு தகுந்த கிடைக்க வில்லை driver problum not found என்று வருகிரது...இனயத்திலும் கானவில்லை.உதவுங்கல் னன்பரே.எதிர்பார்ப்புடன்,இரா.ஹிதாயத்...னன்றி...!

சோனி எரிக்சன் PC SUITE னை முதலில் உங்கள் கணினியில் நிறுவிவிட்டு பின் கணினியுடன் மொபைல் போனினை இணையுங்கள் கண்டிப்பாக பிரச்சினை ஏற்படாது.

இல்லையெனில் Wi-Fi வழியாக இணைத்துக்கொள்ளுங்கள்.

friends china mobile phone kana USB Driver gal irunthal sollunga pa!!!!!!!!!

hai frds, china mobile USB Driver irunthal sollunga pa!!! ithu yellorukum Use a irukkum.
illai yendru sollamal muyarchithu parungal Nanbargalea!!!!!!!!!

ater read this itried to connect my tablet through wifi hot spot,it ask mac address and device name.both input done but unable to browse in tab.in bothinsrument Wi-Fi swiched on.

HTC HD window Mobil. La anraedaka mathalama

HTC HD window Mobil. La anraedaka mathalama

நான் மொபைலில்தான் நெட் யூஸ்பண்ணுரேன். கம்ப்யூட்டரில் வருவதுபோல ஸைட் பார் எல்லாம் மொபைலில் வருவது இல்ல. கம்ப்யூட்டரில் வருவது போல மொபைலிலும் வலைப்பூ& இ.மெயில் இன் பாக்ஸ் மொபைலிலும் வர வைக்க முடியுமா சொல்லித்தர முடியுமா என் மெயில் echumi@gmail.com

வணக்கம். என் X1S GIONEE, SAMSUNG GALAXY S111 போன்களிலிருந்து எதுவும் கணினிக்கு மாற்றமுடியவில்லை. இதை வாசித்ததும் ஏதோ புரிந்ததுபோல் உள்ளது. மீண்டும் வாசித்து புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.வேறு எளியமுறை இருந்தால் கூறவும். நன்றி.

Post a Comment