தமிழில் கணினி செய்திகள்

Torch உலாவி - யூடுப் வீடியோ மற்றும் டோரன்ட் நேரடியாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,, at June 22, 2013
இணைய பக்கங்களை வலம்வர உலாவிகள் பயன்படுகிறன. முன்னனியில் உள்ள இணைய உலாவிகளான நெருப்புநரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், சபாரி மற்றும் ஒபேரா போன்றவை அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது மென்பொருள் சந்தைக்கு புதிய வரவான உலாவி டார்ச் மிகவும் பயனுள்ளதாகவும் பல்வேறு வசதிகள் நிறைந்துள்ளதாகவும் உள்ளது. இந்த டார்ச் உலாவியின் துணையுடன் இணைய பக்கங்களை மிக வேகமாக வலம் வர முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த டார்ச் மென்பொருளை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இன்ஸ்டாலராக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். பின் இந்த டார்ச் உலாவியினை ஒப்பன் செய்யவும்.


பின் இந்த டார்ச் உலாவியை பயன்படுத்தி யூடுப் தளத்தை திறக்கவும், அப்போது அட்ரஸ் பார் எதிரே உள்ள Video என்னும் ஐகானை கிளிக் செய்து, குறிப்பிட்ட வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். யூடுப் தளம் மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு தளங்களில் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள டார்ச் உலாவி உதவி செய்கிறது.


பின் இந்த உலாவியின் துணைகொண்டு டோரன்ட்களை நேரிடையாக பதிவிறக்கம் செய்ய முடியும். முதலில் டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் அட்ரஸ்பார் எதிரே உள்ள Torrent என்னும் ஐகானை கிளிக் செய்து டோரன்ட் கோப்பினை இணைக்கவும்.




டோரன்ட் பைலை இணைத்து பின் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும், பதிவிறக்கம் செய்த டாக்குமெண்டை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். சிறப்பான கிராப்பிகல் இடைமுகப்பினை கொண்டதாக இந்த உலாவி அமைந்துள்ளது.

1 Comments:

டோரன்ட் ஃபைல்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது எனக்குக் கிடைத்த உண்மையான லட்டும் ஜிலேபியும்.

நன்றி குமரேசன் அவர்களே....

Post a Comment