தமிழில் கணினி செய்திகள்

ட்ரைவர் அப்டேட்

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய ஏற்கனவே என்னுடைய வலைப்பூவிலேயே இரண்டு மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மற்றுமொரு ட்ரைவர் அப்டேட் மென்பொருள் உங்களுக்காக Smart Driver Updater இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக்கொள்ள முடியும். மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.


பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பேக்அப் செய்து கொள்ளவும் முடியும்.


இந்த மென்பொருள் மூலம் பேக்அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

சிகிளினருக்கு மாற்று மென்பொருள் - AppCleaner

♠ Posted by Kumaresan R in
கணினியில் உள்ள குப்பைகளை நீக்க பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுவது சிகிளினர் மட்டுமே ஆகும். ஏன் இந்த மென்பொருள் மட்டும்தான் கணினியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க பயன்படும் மென்பொருளா என்றால் இல்லை, இன்னும் இதுபோன்ற பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்கிளினர் இந்த மென்பொருள் சிகிளினரை விட சிறந்த மென்பொருள் என்று கூறமுடியாவிட்டாலும். அதனுடன் போட்டி போடும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் ஆப்கிளினர்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இதுஒரு இலவச மென்பொருள் ஆகும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து Analyze என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள குப்பைகளை முன்னோட்டம் பார்த்து பின் Clean என்னும் பொத்தானை அழுத்தி குப்பைகளை நீக்கி கொள்ளவும்.


மேலும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் நிறுவிய மென்பொருளையும் நீக்கி கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கவும் தனியே இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பிடிஎப் பைல்களை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய - Able2Doc லைசன்ஸ் கீயுடன் பெற

♠ Posted by Kumaresan R in ,,
பிடிஎப் பைல்களில் எதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை வேர்ட் பைலாக மாற்றி பின்புதான் மாற்றங்கள் செய்ய வேண்டும். பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கிறன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை. முறையாக பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கிறன. எந்த வித குறைபாடும் இல்லாமல் பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது. தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகிறனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை  குறித்துவைத்துக்கொள்ளவும். பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் பைலை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் பைல்கள் மட்டுமே வேர்ட் பைல்களாக மாற்ற முடியும்.


பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து, Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே கன்வெர்ட் ஆகும்.


பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக்கொள்ள முடியும். பின் Convert to word என்னும் தேர்வில் Standard (Recommended) என்பதை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு. பைலில் பெயரையும் குறிப்பிடவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில், நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில் டாக்குமெண்ட் கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளில் சந்தை மதிப்பு $49.95 ஆகும்.

பிடிஎப் பைல்களை இணைக்க மற்றும் பிரிக்க - Hexonic PDF Split and Merge

♠ Posted by Kumaresan R in ,
பிடிஎப் கோப்புகளை கன்வெர்ட் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை கன்வெர்ட் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் பிடிஎப் பைல்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் பைல்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் பைல்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் பைலை தேர்வு செய்யது இணைத்துக்கொள்ளவும். பிடிஎப் பைலை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் பைல்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ள முடியும்.


வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும், இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை தனித்தனியாகவும் பிரித்துக்கொள்ள முடியும். ஒரு பிடிஎப் பைலில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் பைலை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.

DVD சீடிக்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ் இயங்குதளத்தின் புகழ்பெற்ற இமேஜ் பைல் பார்மெட் ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இந்த பைல் பார்மெட்டை உருவாக்க இணையத்தில் இலவச மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கிறன. ஆனால் இவையாவும் கணினியுடைய வன்தட்டில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் கோப்புகள் இருந்தால் மட்டுமே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டிவீடியில் இருந்தே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். இந்த மென்பொருள் டிவீடி வீடியோ மற்றும் ஆடியோக்களை பிரித்தெடுக்கவும். காப்பி செய்யவும், மற்றும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்யவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இறுதியாக BU-UPTTUXZZ-IXFXRX என்னும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருள முழுமையாக நிறுவிக்கொள்ளவும். ஜீன் 30வரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக பெற முடியும்.


பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும். டிவீடி ட்ரேயில் ஆடியோ அல்லது வீடியோ டிவீடியை உள்ளிடவும். பின் BDlot DVD Clone மென்பொருளை பயன்படுத்தி மேலே கூறிய அனைத்து செயல்களையும் செய்ய முடியும். கூடுதலான் செய்தி என்னவெனில் நேரிடையாக வன்தட்டிலையும் கன்வெர்ட் செய்து கோப்புகளை சேமிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள் இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இந்த மென்பொருளுடைய சிறப்பம்சமே ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாக கோப்புகளை கன்வெர்ட் செய்வது ஆகும்.

Youtube திரையை மாற்றியமைக்க-Youtube Embeded Code

♠ Posted by Kumaresan R in ,,
நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாகநாடிம்தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் என்னற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம். யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஆன்லைனில் இருந்தபடியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும். பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.


வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக்கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML  பைலை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும். மாணவர்கள் புராஜெக்ட் செய்யும் போது அதில் யூடியூப்  வீடியோவினை உள்ளினை இந்த வழிமுறை மிகவும் உதவியாக இருக்கும்.

MP3 பாடல்களில் தரத்தை உயர்த்த

♠ Posted by Kumaresan R in ,
நாம் சாதரணமாகவே பாடல்களை கேட்டும் போது அதனுடைய தரத்தை கண்டுபிடிக்க முடியும். MP3 பாடல்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒன்று அதிகஅளவுடைய பைல் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். மற்றொன்று அதனுடைய அளவு குறைவாகவும் பாடல்களின் தரம் குறைவாக இருக்கும். பாடல்களில் அளவினை வைத்தே அதனுடைய தரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய பாடல்களே சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு குறைவாக அளவுடைய பாடல்களை வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். குறிப்பாக செல்போன்களில் பாடல்களை வைத்திருப்பவர்கள் குறைவான அளவுடைய பாடல்களையே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுபோன்றவர்களுக்கும் சிறிய அளவுடைய பாடலை பெரிய அளவாக்க நினைப்பவர்களுக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு பேர்ட்டபிள் மென்பொருள் ஆகும். பின் பாடலை தேர்வு செய்யவும். மொத்தமாகவும் ட்ராக் அண்ட் ட்ராப் செய்து கொள்ளவும் முடியும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து விட்டு இறுதியாக Process என்னும் பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் பாடல் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இரண்டு பைல்களுக்கும் இடையேயான வேறுபாட்டை உங்களால் காண முடியும். இந்த மென்பொருள் பல நேரங்களில் நமக்கு உதவியாக இருக்கும்.

வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புகளை சுருக்க

♠ Posted by Kumaresan R in ,
வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அளவில் சிறியதாகவே இருக்கும். டெக்ஸ்ட் பைல்களாக இருந்தால் மட்டுமே அளவில் சிறியதாக இருக்கும். படங்களை உள்ளடக்கிய கோப்பாக இருப்பின் அளவில் பெரியதாகவே இருக்கும். அதுபோன்ற கோப்புகளை சிறியதாக்க நாம் தனியே கோப்பறையில் இட்டு சுருக்க (Zip) கோப்பறையாக உருவாக்குவோம், அப்போதும் குறிப்பிட்ட அளவே குறையும். இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க PocoDoc Lite என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்களில் அளவை மிக எளிமையாக குறைக்க முடியும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பினை சுருக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Optimize என்னும் பொத்தானை அழுத்தவும். 


சில நொடிகளில் உங்களுடைய கோப்பானது சுருக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வரும். பின் நீங்கள் கோப்பினை தெரிவு செய்த இடத்தில் மற்றொரு கோப்பு சேமிக்கப்பட்டு இருக்கும். இரண்டு கோப்புகளுக்கும் உள்ள அளவு முற்றிலும் மாறுபடும். இந்த மென்பொருள் வேர்ட் மற்றும் பிடிஎப் பைல்களின் அளவை சுருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் மூலம் எம்.எஸ். ஆப்பிஸ் டாக்குமெண்ட்களையும் சுருக்க முடியும். பவர்பாயின்ட், எக்சல் போன்ற பைல்களின் அளவையும் சுருக்க முடியும்.

பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய - Simpo PDF

♠ Posted by Kumaresan R in ,,
முக்கியமான தகவல்களை நாம் பிடிஎப் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம், மேலும் முக்கிய அலுவல்கள் யாவும் பிடிஎப் கோப்பாகவே இருக்கும். அவற்றில் எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை நாம் வேர்ட் கோப்பாக மாற்றிய பின்புதான் மாற்றங்கள் செய்ய முடியும். இவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றம் செய்ய இணையத்தில் மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் தற்போது Simpo PDF மென்பொருளை இலவசமாக தருகிறனர். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Send me Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது லைசன்ஸ் கீயானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டிருக்கும். மேலும் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அனுப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின் Simpo PDF மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து ADD PDF(s) என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை உள்ளினைத்துக்கொள்ளவும். கன்வெர்ட் செய்யப்படவேண்டிய பைல்பார்மெட்டை தேர்வு செய்யவும். வேர்ட் மற்றும் டெக்ஸ்ட் பைல் பார்மெட்கள் ஆகும். அடுத்து கன்வெர்ட் செய்து சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்யவும். சில மணி நேரங்களில் உங்களுடைய பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

செஸ் விளையாட்டு

கணினியில் அனைத்து விளையாட்டுளையும் இலவசமாக இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பயன்படுத்துவோம். அதுபோல செஸ் விளையாட்டும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் நாம் இதனை அப்ளிகேஷனாக பயன்படுத்தபோவது இல்லை. குரோம் உலவியின் துணையுடன் இந்த விளையாட்டை விளையாட போகிறோம். செஸ் விளையாட்டில் அனைவரும் விஸ்வனாதன் ஆனந்தனாக இருக்கவே ஆசைப்படுவோம். ஏனெனில் செஸ் விளையாட்டில் கொடிகட்டி பறக்க கூடியவர் அவரே. அவருக்கு நிகரானவர் யாரும் இல்லை என்றுதான் கூறமுடியும். வீட்டில் போரடிக்கும் போது அனைவரும் விளையாட நினைப்பது செஸ், கேரம் ஆகும். இதில் புகழ்பெற்ற விளையாட்டு செஸ் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டை நாம் குரோம் உலவியில் இணைத்து விளையாட முடியும்.

செஸ் விளையாட்டிற்கான சுட்டி


இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் குரோம் உலவியை ஒப்பன் செய்து தோன்றும் விண்டோவில் Spark Chess என்னும் ஐகானை அழுத்தி விளையாட்டை ஒப்பன் செய்யவும்.


பின் விளையாட்டை விளையாட துவங்கவும். நீங்கள் இதில் நான்கு பேருடன் விளையாட முடியும். கணினியும் நீங்களும் விளையாடும் விளையாட்டு ஆகும். செஸ் விளையாட்டில் நான் ஒன்றும் புலி கிடையாது. எலி என்று வேணுமானால் சொல்லிக்கொள்ள முடியும். விளையாட்டை விளையாட்டாக விளையாடி பாருங்கள். இதனை நீங்கள் குரோம் உலவியில் பதிந்து பயன்படுத்த முடியும்.

கணினியில் இருக்கு Junk பைல்களை நீக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in
கணினியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பைல்கள் கணினியில் குப்பையாக தேங்கி நிற்கும். இதுபோன்ற பைல்களை கணினியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். நாம் அனைவரும் அறிந்த கிளினர் என்றால் அது சிகிளினர் மட்டுமே ஆகும். இது தவிர இன்னும் சில மென்பொருள்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன. அவற்றில் ஒன்றுதான் Sys Optimizer ஆகும். இது கணினியில் உள்ள தேவையற்ற Junk பைல்களை கணினியை விட்டு அகற்ற பயன்படுகிறது. மேலும் இணையம் பயன்படுத்தும் போது Temp மற்றும் Junk பைல்கள் கணினியில் அதிகம் தேங்கும் இவற்றை கணினியை விட்டு அழிக்க இந்த Sys Optimizer மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் Sys Optimizer மென்பொருளை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Analyse என்னும் பொத்தானை அழுத்தவும் பின் Delete என்னும் பொத்தானை அழுத்தி பைல்களை நீக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலமாக கணினினுடைய செயல்பாட்டில் மாற்றத்தை காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.

ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 யை இலவசமாக மூன்று மாத லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்க

♠ Posted by Kumaresan R in ,
ஆண்டிவைரஸ்களில் பல்வேறு விதமான பதிப்புகள் உள்ளன. குறிப்பாக சாதரண கணினிகளில் ஆண்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்துவோம். இணைய இணைப்பு உள்ள கணினிகளில் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை நிறுவி பயன்படுத்தினால் மட்டுமே நம்முடைய கணினிக்கு பாதுகாப்பு ஆகும். பல்வேறு இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்களை நாம் பணம் கொடுத்தே பெற வேண்டும் ஆனால் தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை இலவசமாக தருகிறனர். இந்த ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது சென்ற வருடம் வெளியிடப்பட்டது ஆகும். ஆனால் தற்போது இந்த மென்பொருளை இலவசமாக தருகிறனர். இதற்கு முன் ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை வெளியிட்ட போது ஆறு மாதம் இலவசமாக தந்தனர். தற்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011யை மூன்று மாதம் இலவசமாக தருகிறனர். உடனே சென்று பதிவிறக்கம் செய்யுங்கள்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய தகவல்களை உள்ளிடவும். படத்தின் மீது கிளிக் செய்து படத்தை பெரிதாக்கி பார்க்கவும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது Hasło z czasopisma என்ற செக் பாக்சில் Zima z AVG என்றும் Email என்ற செக்பாக்சில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடவும். பின் ஒகே பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். பின் அதை ஒப்பன் செய்து உங்கள் கணக்கை உறுதி படுத்திக்கொள்ளவும். அடுத்து ஒரு மின்னஞ்சல் அனுப்பபடும் அதில் நீங்கள் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும், லைசன்ஸ் கீயும் அனுப்பி வைக்கப்படும்.


பின் இணைய உதவியுடன் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கட்டாயமாக ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது ஏவிஜி இண்டர்நெட் செக்யூரிட்டி - 2011 மென்பொருளானது மூன்றுமாத லைசன்ஸ் கீயுடன் நிறுவப்பட்டிருக்கும். இணைய இணைப்பு இருந்தால் மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளவும்.

கணினியில் நிறுவிய மென்பொருள்களை அகற்ற

♠ Posted by Kumaresan R in ,
நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில்  குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம். அவ்வாறு கணினியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணினியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணினியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணினியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அது ஒரு சில மென்பொருள்களை சரியாக கணினியை விட்டு நீக்கம் செய்யாது. இவ்வாறு கணினியை விட்டு நீக்க முடியாத மென்பொருள்களை கணினியை விட்டு நீக்கம் செய்ய மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் Ainvo Uninstall Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Programs என்னும் சுட்டியை அழுத்தி கணினியில் நிறுவப்பட்ட மென்பொருள்களை ஆராயவும். Remove Programs என்னும் சுட்டியை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை தேர்வு செய்து, பின் Uninstall என்னும் சுட்டியை அழுத்தி கணினியை விட்டு அப்ளிகேஷனை நீக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தால் நீக்க முடியாத மென்பொருள்களையும் இந்த மென்பொருள் மூலமாக நீக்கம் செய்ய முடியும்.

பிகாசா தளத்தில் இருந்து படங்களை தரவிறக்கம் செய்ய

பிகாசா தளமானது போட்டோக்களை பரிமாறிக்கொள்ள உதவும் தளம் ஆகும். இந்த தளத்தை முதலில் ஐடியாலேப் என்னும் நிறுவனம் 2002ம் ஆண்டு வடிவமைத்தது. பின் கூகுள் நிறுவனம் 2004ம் ஆண்டு பிகாசா நிறுனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. கூகுள் அக்கவுண்டில் இருக்கும் உங்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் பிகாசாவில் இருக்கும். நம்முடைய கூகுள் கணக்கில் பதிவேற்றும் படங்களும் பிகாசாவிலேயே இருக்கும். வேண்டும் போது  இந்த படங்களை காண முடியும், வேண்டுமெனில் இந்த படங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும். நம்முடைய கூகுள் கணக்கில் பல்வேறு படங்கள் இருக்கும், அவைகளை பதிவிறக்கம் செய்ய முற்படும் போது பலர் தோல்வியினையே சந்திப்பார்கள், கூகுள் கணக்கில் உள்ள படங்களை எளிமையாக தரவிறக்கம் செய்ய முடியும். 

முதலில் உங்களுடைய கூகுள் கணக்கை ஒப்பன் செய்யவும், பின் Photo என்னும் தேர்வை அழுத்தவும். பின் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் போட்டோவினை தேர்வு செய்யவும். 


பின் Actions என்னும் தேர்வினை அழுத்தி Download photo என்பதை கிளிக் செய்யவும். தற்போது போட்டோவானது பதிவிறக்கம் செய்யப்படும். இதே போல அனைத்து படங்களையுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

டெஸ்க்டாப் ஐகான்களை மறைக்க

♠ Posted by Kumaresan R in ,
அப்ளிகேஷன்களை விரைவாக அணுகுவதற்காக டெஸ்க்டாப்பில் சாட்கட் ஐகான்களை உருவாக்கி பயன்படுத்தி வருவோம். பிடிக்கவில்லையெனில் ஐகான்களை நீக்கி விடுவோம். ஒருசிலரது கணினியில் பார்த்தால் டெஸ்க்டாப் முழுவதும் வெறும் ஐகான்களாக மட்டுமே இருக்கும். இந்த டெஸ்க்டாப் ஐகான்களால் ஒரு சில நேரங்களில் நாமே குழம்பிவிடுவோம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சாட்கட் ஐகான்களை மட்டுமே டெஸ்க்டாப்பில் வைப்பது பயன்படுத்துவதே என்னை பொறுத்தவரை சிறந்தது ஆகும். அவ்வாறு நாம் பயன்படுத்தும் ஐகான்களை மறைத்து வைக்கவும் முடியும். இதனால் கணிணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. டெஸ்க்டாப் ஐகான்களை மறைத்துவைக்க விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதைவிட இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். அதில் நேரத்தை தெரிவு செய்து கொள்ளவும். பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் டெஸ்க்டாப் ஐகான்கள் மறைக்கப்படும். பின் மெளசால் கிளிக் செய்வதன் மூலமாக டெஸ்க்டாப் ஐகான்களை உங்களால் காண முடியும். மேலும் டாஸ்க்பாரையும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமெனில் Disable என்பதை தேர்வு செய்யவும். அப்போது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் நிறுத்தி வைக்கப்படும். இதுவும் ஒரு சின்ன ட்ரிக்தானே.

தேவையற்ற சுருக்குவிசைகளை நீக்க

♠ Posted by Kumaresan R in
கணினியில் மென்பொருளை நிறுவும்போது சேர்ந்தே டெஸ்க்டாப், ஸ்டார்ட் மெனு சுருக்குவிசைகள் சேர்ந்தே நிறுவப்படும். கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம், தேவையில்லையெனில் அவற்றை கணினியை விட்டு நீக்கிவிடுவோம். அவ்வாறு நீக்கும் போது முழுமையாக அந்த மென்பொருளானது கணினியை விட்டு நீங்காது. ஸ்டார்ட் மெனு சுருக்குவிசை, டெஸ்க்டாப் சுருக்குவிசை போன்றவை கணினியிலேயே தங்கிவிடும் அவற்றை நீக்க முயற்ச்சித்தால் கோளாருச்செய்தியே காட்டும். இவ்வாறு கணினியிலேயே தங்கிவிடும் சுருக்குவிசைகளை நீக்க ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Bad Shortcuts என்னும் பொத்தானை அழுத்தவும். பின் தேவையில்லாத சுருக்குவிசைகளை தேர்வு செய்து. Delete Selected Shortcuts என்னும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும். இதன் மூலம் தேவையில்லாத சுருக்குவிசைகளை எளிமையாக நீக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

விண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ்7 இயங்குதளத்தை நிறுவும் போது கூடவே லைசன்ஸ் கீயையும் சேர்த்தே நிறுவுவோம். இல்லையெனில் நிறுவிய பின் தனியாக விண்டோஸ்7 யை ஆக்டிவேஷன் செய்வோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு முறையும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை நிறுவும் போது ஆக்டிவேட் செய்வோம். ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்லைன் ஆக்டிவேஷன் அளவு இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆக்டிவேஷன் செய்ய இயலாது. இதனை சரி செய்யவும் ஒருவழி உள்ளது. ஏற்கனவே நம்முடைய கணினியில் நிறுவியிருக்கும் ஆக்டிவேஷன் கீயை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிகொள்ள முடியும். இதனால் நாம் ஒவ்வொரு முறையும் தனித்தனியே ஆன்லைன் ஆக்டிவேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேக்அப் செய்த லைசன்ஸ் கீயை எத்தனை முறை வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் ஒப்பன் செய்யவும். பின் Backup என்னும் பொத்தானை அழுத்தி பேக்அப் செய்யவும். பேக்அப் செயத கோப்பானது, பேக்அப் கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். பின் அதை வேண்டும் போது மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இவ்வாறு பேப்அப் செய்வதால் உங்களுடைய இயங்குதளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. டோக்கன்ஸ், லைசன்ஸ் அனைத்தையுமே பேக்அப் செய்ய எளியவழி ஆகும்.

VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்க

♠ Posted by Kumaresan R in ,
விஎல்சி மீடியா பிளேயரானது ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும். விஎல்சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை விஎல்சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது விஎல்சி வீடியோவானதுஇப்போது வீடியோவினை நேரடியாகவே விஎல்சி பிளேயரில் காண முடியும். கணினியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த விஎல்சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

ஆப்பிஸ் 2007 உதவியுடன் இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற ஒரு எளிய வழி

♠ Posted by Kumaresan R in ,,
நம்முடைய சான்றிதழ்களையோ அல்லது முக்கியமான கோப்புகளையோ ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்டில் வைத்திருப்போம், அவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் இமேஜ் டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றியும் அதில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இதற்கு ஆப்பிஸ் 2007 வழிவகை செய்கிறது. இதன் மூலம் எந்த வித மூன்றாம் தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் இமேஜ் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய கணினியில் ஆப்பிஸ் 2007 நிறுவியிருக்க வேண்டும்.

ஆப்பிஸ் 2007 யை கணினியில் நிறுவிய பின் Start > Control Panel > Programs and Features என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவானது கணினியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை மாற்றம் செய்வதற்கான விண்டோ ஆகும். அதில் Microsoft Office Professional Plus 2007 என்ற தேர்வின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Change என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add or Remove Features என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Continue என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் தேர்வு ஆகாமல் உள்ள ஆப்பிஸ் பயன்பாடுகளை தேர்வு செய்யவும். அதற்கு தேர்வு ஆகாமல் உள்ள ஆப்பிஸ் பயன்பாடுகளின் மீது கிளிக் செய்து Run from my Computer என்பதை தேர்வு செய்யவும். பின் Continue பொத்தானை அழுத்தவும்.


சிறிது நேரத்தில் ஆப்பிஸ் பயன்பாடுகள் உங்கள் கணினியில் நிறுவப்படும். பின் Start > All Programs  > Microsoft Office Office > Microsoft Office office Tools > Microsoft Office Document Imaging என்பதை தேர்வு செய்யவும்.


பின் உங்களுடைய படத்தினை ஒப்பன் செய்யவும். சாதரண படங்களை ஒப்பன் செய்ய முடியாது. .tif பைல் பார்மெட்டுடைய படங்களை மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். வேறொரு பைல் பார்மெட்டில் உள்ள படங்களை விண்டோஸ் பெயிண்ட் உதவியுடன் .tif பைல் படமாக மாற்றிக்கொள்ளவும். பின் படத்தை ஒப்பன் செய்யவும். அடுத்து Tools என்னும் தேர்வு மெனுவினை தேர்வு செய்து தோன்றும் தேர்வு வரிசையில் Recognize Text Using OCR என்பதை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படமானது டெக்ஸ்டாக மாற்றப்படும். பின் Send Text to Word என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் கோப்பாக மாற்றிகொள்ளவும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.

மின்னஞ்சல்களை இணைய இணைப்பு இல்லாமல் அணுக

♠ Posted by Kumaresan R in
மின்னஞ்சல் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே உள்ளது, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை இலவசமாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். என்னத்தான் இலவசமாக மின்னஞ்சல் சேவையினை பெற்றாலும் இதனை நாம் இணைய உதவியுடன் மட்டுமே அணுக முடியும். தினமும் பல்வேறு மின்னஞ்சல்களை பரிமாற்றம் செய்வோம் ஆனால் இவற்றை நாம் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே காண முடியும். அவ்வாறு இல்லாமல் இணைய வசதி இல்லாமல் மின்னஞ்சல்களை காண முடியும். இதற்கு ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். Archive E-mail என்னும் பொத்தானை அழுத்தி உங்களுக்கான அக்கவுண்ட்டை தேர்வு செய்து, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். ஜிமெயிலுக்கு இருப்பியல்பாகவே உள்ளது. மற்ற மின்னஞ்சல்களுக்கு தனியே கணக்கு உருவாக்கி கொள்ளவும். பின் சிறிது நேரம் உங்களுடைய மின்னஞ்சல்கள் நகல் எடுக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படும்.


பின் நீங்கள் மின்னஞ்சல்களை வழக்கம்போல் எளிமையாக கையாள முடியும். இந்த மூலம் சீடி/டிவீடி, ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் வன்தட்டுகளில் மின்னஞ்சல்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மின்னஞ்சல்களை பேக்அப் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் ஆப்லைனில் மின்னஞ்சல்களை கையாள மிகவும் உதவியாக இருக்கும்.

துப்பாக்கி விளையாட்டு - குரோம் உலவியில்

இணைய பயன்பாடுகள் பெருகிகொண்டு வரும் இந்த நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து கொண்டே உள்ளன. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறன. அதேபோல் கூகுள் நிறுவனமும் குரோம் உலவியின் மூலமாக விளையாட்டுகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக குரோம் உலவியின் துணையுடன் விளையாட்டுகளை விளையாட முடியும். கூகுள் நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளை இலவசமாக தருகிறனர். அந்த வகையில் நாம் தற்போது பார்க்க இருக்கும் விளையாட்டுதான் Private Joe.

விளையாட்டிற்கான சுட்டி


இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது தோன்றும் விண்டோவில் Private Joe ஐகானை கிளிக் செய்து செய்து விளையாட்டை திறக்கவும். அல்லது இந்த சுட்டியை கிளிக் செய்து ஒப்பன் செய்யவும்.


இந்த விளையாட்டானது எதிரிகளை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது ஆகும். இந்த விளையாட்டில் மொத்தம் 8நிலைகள் உள்ளன. கீழே காணும் படத்தை போல ஒவ்வொரு நிலையை முடித்தவுடன் தோன்றும்.


இந்த விளையாட்டில் சுடுவதற்கு C பொத்தானையும், தாவுவதற்கு X யையும் நகர்ந்து செல்ல வலது மற்றும் இடது திசை பொத்தான்களையும் பயன்படுத்தவும். இந்த விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன அதனை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் துப்பாக்கி மட்டும் தான். இந்த விளையாட்டு அருமையாக உள்ளது. விளையாடி பாருங்கள்.

250 மேற்பட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
இன்றைய இணைய உலகில் நூற்று கணக்கான வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. அவை யாவும் வீடியோக்களை இணையம் மூலமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறன. இதில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம் யூடியூப் தளம் ஆகும். இது தவிர இன்னும் பல்வேறு வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே குறிப்பிட்ட வீடியோ தரவிறக்கம் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடியோ பகிர்வு தளங்களில் இதுபோன்ற வசதி எதுவும் இருக்காது. இதுபோன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய All Video Downloader என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. 

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த வீடியோவை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த வீடியோவின் URLயை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தி வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் மூலமாக நமக்கு விருப்பமான பைல்பார்மெட்டில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். .avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod, iPad, iPhone, Psp, Ps3  போன்ற பைல் பார்மெட்களில் வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். பல்வேறு தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இந்த ஒரே மென்பொருள் பயன்படுகிறது.

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை லாக் செய்ய

♠ Posted by Kumaresan R in ,,
கணினி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை சார்ந்தே உள்ளது. இதற்கு காரணம் கணினி பயனாளர்கள் பெருமளவில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை பயன்படுத்துவதே காரணம் ஆகும். இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை லாக் செய்யும் வசதி இல்லை. பொதுவாக பயனர் கணக்கு துவங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும். அந்த கணினியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணினிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணினிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம் சில நேரங்களில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம். அதுபோன்று ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை லாக் செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது போர்டபிள் அப்ளிகேஷன் ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளடவும். 


கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் எந்த பார்மெட்டில் இயங்குதளத்தை லாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.  கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் லாக் செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது லாக் செய்யப்படும்.


நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை லாக் செய்தால், கடவுச்சொல் இட்டால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். USB மூலமாக லாக் செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை லாக் செய்வதன் மூலமாக பிறர் நமது கணினியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே லாக் செய்ய முடியும்.