தமிழில் கணினி செய்திகள்

Movavi Video Suite 11 யை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,, at 9:57 PM
வீடியோ, இமேஜ் மற்றும் ஆடியோ பைல்களை விரும்பிய பைல் பார்மெட்டிற்கு மாற்றம் செய்ய நாம் அந்த குறிப்பிட்ட பைலை கன்வெர்ட் செய்து ஆக வேண்டும்.வீடியோ, ஆடியோ மற்றும் இமேஜ் பைல்களை கன்வெர்ட் செய்ய தனித்தனி மென்பொருள்களை நாடிச்செல்வோம் அப்படி இல்லாமல் இந்த ஆடியோ, வீடியோ மற்றும் இமேஜ் கன்வெர்ட் வேலைகளை ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். அதுவும் Movavi Video Suite மென்பொருள் தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது. மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பல்வேறு மல்டிமீடியா பணிகளை எளிதாக செய்ய முடியும்.

லைசன்ஸ் கீயை பெறுவதற்கான சுட்டி1   சுட்டி 2

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட்டு பின் Get Movavi Video Suite SE என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும். சில நேரங்களில் மின்னஞ்சலானது நேரிடையாக இன்பாக்ஸ் வராது, ஸ்பேம் மெயில் சென்றிருக்கும் அங்கு சென்று மின்னஞ்சலினை திறந்து கீயினை எடுத்துக்கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Movavi Video Suite 11 மென்பொருளை ஒப்பன் செய்யவும்.


இந்த அப்ளிகேஷனுடைய உதவியுடன் ஆடியோ,வீடியோ மற்றும் இமேஜ் கோப்புகளை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் எடிட் செய்யவும் முடியும். மேலும் தரவுகளை குறுவட்டுகளில் தரவேற்றம் செய்யவும் முடியும். 2டி மற்றும் 3டி வீடியோக்களை எடிட் செய்யவும் மற்றும் பார்க்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

0 comments:

Post a Comment