தமிழில் கணினி செய்திகள்

டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan R in
கணினியில் தினமும் பல்வேறு விதமான கோப்புகளை கையாளுவோம். பெரும்பான்மையானோர் பல முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலேயே வைத்து விடுவார்கள், பல்வேறு விதமான கோப்பு அடைவு கொண்ட பைல்கள் டெஸ்க்டாப்பிலேயே வைத்திருப்போம் இது கணினியின் அழகினை பாதிக்கும். மேலும் ஒரு சில நேரங்களில் சில முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலிருந்து நீக்கி விடுவோம். இதற்கு பதிலாக டெஸ்க்டாப் ஐகான்களை குறிப்பிட்ட தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்த தனித்தனி பகுதிகளாக பிரிப்பதனால் வேர்ட், பிடிஎப், உலாவி, படங்கள் என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும். இதற்கு FENCES என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே செய்யவும். பதிவிறக்க சுட்டியானது மின்னஞ்சலுக்கு வரும் அதை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். 

பின் டெஸ்க்டாப்பில் வெற்றிடத்தில் சுட்டியால் ட்ராக் செய்து இழுக்கவும். அப்போது தோன்றும் துணை விண்டோவில் Create Fence Here,  Create Folder Portal Here என்று இருக்கும். இதனை தெரிவு செய்து உருவாக்கி கொள்ள முடியும்.


முதலில் ஒரு கோப்பறையினை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஐகான்கள் அனைதையும் இட்டுவிடவும். பின் Create Folder Portal here என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட கோப்பறையினை தெரிவு செய்யவும். அப்போது டெஸ்க்டாப்பில் தனியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.


இதை வேண்டுமெனில் நீக்கி கொள்ளவும் முடியும்.

கோப்பறையின் நிறங்களை மாற்ற

♠ Posted by Kumaresan R in
வீட்டில் எப்படி தனித்தனி அறைகளாக  சமையல் அறை, பூஜை அறை என்று வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியிலும் பாட்டு, படம், வீடியோ என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கோப்பறைகள் வைத்திருப்போம். பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்பறையினை உருவாக்கும் போது அது மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் நாம் விரும்பினால் அதனை வேறு ஒரு நிறத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Colorize! என்பதை தெரிவு செய்யவும். தோன்றும் துணை வரிசையில் குறிப்பிட்ட நிறத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் குறிப்பிட்ட நிறத்தில் கோப்பறையின் நிறம் மாற்றப்படும்.

இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan R in ,
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான கோப்புகளை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே கோப்பாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும்.


Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை கடவுச்சொல்லை உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது கடவுச்சொல் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல் உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

பிடிஎப் கோப்புகளை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan R in
பிடிஎப் கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு
மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.