தமிழில் கணினி செய்திகள்

MS Word ல் இந்திய நாணயங்களின் அடையாளத்தினை (Symbol) இணைக்க

ரூபாய்களின் மதிப்பினை குறிப்பிடும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி நாணயங்களின் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறன. இந்திய அரசாங்கம் ஜீலை 15 2010 அன்று நாணயங்களுக்கு புதிய அடையாளத்தினை கொண்டு வந்தது. முதலில் இந்த நாணய அடையாளத்தினை இமேஜ் வடிவத்திலேயே பயன்படுத்துமாறு இருந்தது. இவ்வாறு சேர்க்கும் போது அளவு வித்தியாசம் ஏற்படும், அப்போது நாம் உருவாக்கும் கோப்பு அழகின்றி காணப்படும். இந்த குறையை போக்கும் விதமாக தற்போது வரும் மடிக்கணினி தட்டச்சு பலகை மற்றும் சாதாரண தட்டச்சு பலகையில் இந்திய நாணய அடையாளம் இருப்பியல்பாகவே உள்ளது. இதனால் தற்போது வெளிவரும் கணினிகளில் மட்டுமே இந்த அடையாளத்தினை பயன்படுத்துமாறு உள்ளது.

 
பழைய மடிக்கணினிகளிலும், தட்டச்சு பலகையிலும் இந்த நாணய அடையாளத்தை கொண்டு வரவும் ஒரு வழி உள்ளது. யுனிகோட் முறையினை பயன்படுத்தி இந்த அடையாளத்தை ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட்டில் இணைக்க முடியும். 

முதலில் 20B9 என்று தட்டசு செய்து பின் Alt + X கீகளை ஒருசேர அழுத்தவும் தற்போது இந்திய நாணய அடையாளமாக மாற்றப்பட்டிருகும். அதனை கொண்டு அனைத்து கோப்புகளிலும் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இந்திய நாண்ய அடையாள்த்தை கோப்புகளில் இணைக்க இதுவும் ஒரு வழிமுறை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.


Dailymotion தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan R in ,
ஏதாவது ஒரு வீடியோ கோப்பு வேண்டுமெனில் நாம் முதலில் நாடுவது யூடுப் தளம் ஆகும். மேலும் ஒரு சில வீடியோக்கள் இந்த தளத்தில் கூட கிடைக்காது அதுபோன்ற வீடியோக்களும் மற்ற வீடியோ தளங்களில் கிடைக்கும் இதில் புகழ்பெற்ற தளம்தான் Dailymotion ஆகும். இந்த தளத்தில் தினமும் என்னற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன. அன்றாடம் ஒளிபரப்பபடும் சின்னத்திரைகளின் உயிர்நாடியான சீரியல்களும் தினமும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்றால் அவ்வளவு எளிதான செயல் இல்லை. இந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

 நீட்சிக்கான சுட்டி

முதலில் நெருப்புநரி உலாவியினை திறந்து கொள்ளவும் பின் சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள நீட்சியினை நெருப்புநரி உலாவியில் இணைத்துக்கொள்ளவும். 


பின் நெருப்புநரி உலாவியினை மறுதொடக்கம் செய்துகொண்டு, Dailymotion தளத்தில் உள்நுழையவும். பின் வீடியோக்களின் கீழ் தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி இருக்கும் அதை பயன்படுத்தி வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Mp4 பார்மெட்டில் பதிவிறக்கி கொள்ள முடியும். தனித்தனி அளவுகளில் பதிவிறக்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது.

எழுத்துக்களை தலைகீழாக திருப்ப

♠ Posted by Kumaresan R in ,
தற்போது பெரும்பாலான ஷோசியல் நெட்வொர்க் தளங்களிலேயே கணினி பயன்படுத்துபவர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறனர். இதற்கு முக்கிய காரணம் அரட்டை, சினிமா, அரசியல் போன்ற செய்திகளை அதிகமாக பகிர்ந்துகொள்வதனால் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. தினமும் புதிது புதிதாக குறிபிட்ட தளங்களின் வசதிகளை மெறுகேற்றி கொண்டே வருகிறனர். இதற்குகேற்ப பயனாளர்களும் தங்கள் கணக்கினை அழகுபடுத்த விரும்புவார்கள். குறிப்பாக பயனர் பெயர்களை அமைத்தலில் இருந்து அனைத்திலும் புதுமைகளை விரும்புகிறனர் அந்த வகையில் இப்போது நாம் எழுத்துக்களை எவ்வாறு தழைகீழாக திருப்புவது என்று பார்ப்போம் இதனை கொண்டு நம்முடைய பயனர் பெயரை தழைகீழாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு சில தளங்கள் உதவி செய்கிறன.

தளத்திற்கான சுட்டி


தளத்திற்கான சுட்டி1


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய வார்த்தையினை தட்டச்சு செய்யவும். பின் Flip Text என்னும் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் வார்த்தை தலைகீழாக மாறும் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனை வேர்ட், முகநூல், ஜிமெயில் போன்ற தளங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

PDF கோப்பின் அளவை மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan R in ,,
ஒரு கோப்பின் அளவு எவ்வளவு வேண்டுமானலும் இருக்கலாம், அதே போன்றுதான் பிடிஎப் கோப்பின் அளவும் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கும். மிக அதிகம் அளவுடைய பிடிஎப் கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக அனுப்ப முடியாது. குறிப்பிட்ட அளவுடைய மின்னஞ்சல் கோப்பினை மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் அந்த கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறு பிரித்து அனுப்பும் போது அந்த குறிப்பிட்ட கோப்புகளை மீண்டும் சேர்க்க மென்பொருளினை பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பும் போது சில பகுதி கோப்புகளை தவறுதலாக இழக்க நேரிடலாம். இதனால் முழு கோப்பும் மின்னஞ்சல் வாயிலாக சென்றடைய வாய்ப்பில்லை. 

அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அந்த கோப்பின் அளவை சுருக்கி அனுப்பினால் அனுப்ப முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மெபொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். திறக்கும் விண்டோவில் அளவு குறைக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பினை தேர்வு செய்யவும்.  பின் கன்வெர்ட் செய்து சேமிக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து பின் எந்த விருப்ப தேர்வில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு பின் Compress என்னும் பொத்தானை அழுத்தவும்.சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு , நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

கணினியின் வேகத்தை கூட்ட மற்றும் தேவையற்ற பைல்களை நீக்க

♠ Posted by Kumaresan R in ,
கணினி மந்தமாக செயல்படுகிறது என்றால் இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முறையாக கணினியை பராமரிக்கவில்லையெனில் கணினி மந்தமாகவே செயல்படும். முறையாக மென்பொருள் நிறுவாமை இணையம் பயன்படுத்துகையில் தேங்கி கிடக்கும் பைல்கள் மற்றும் ரிஸிஸ்டரி பைல்கள் போன்றை ஆகும். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் இதே நிலைதான் கணினி முழுவதுமாக மந்தமாகவே செயல்படும். இது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய YAC - Yet Another Cleaner என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவவும். மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவைப்படும்.


மென்பொருளை முழுவதுமாக கணினியில் நிறுவிய பின் Yet Another Cleaner அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


கணினியில் நிலை, பராமரிப்பு, நீட்சி பராமரிப்பு, தரவுகளை நீக்குதல், தேவையற்ற ஜங்க் கோப்புகளை நீக்குதல், கணினியை வேகப்படுத்துதல் மேலும் மென்பொருள்களை நீக்குதல் போன்ற செயல்களை இந்த மென்பொருள் வாயிலாக செய்ய முடியும். 
கணினியில் எவ்வளவு வேகத்தில் தரவு (Data) பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் ஆகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. 


எவ்வளவு நேரத்தில் கணினி பூட் ஆக தொடங்குகிறது என்பதனை அறிந்து கொள்ளவும் முடியும். மிக விரைவாக பூட் ஆக வேண்டுமெனில் நீட்சி மற்றும் அப்ளிகேஷன்களை டிசேபிள் செய்து கொண்டால் கணினியானது மிக விரைவாக பூட் ஆகும்.

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan R in ,,,
பிடிஎப் கோப்பு என்ற ஒன்று முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் பிடிஎப் கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Convert To என்பதை தெரிவு செய்து எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.


 சிலமணி நேரங்களில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும். பின் அந்த கோப்பினை வழக்கம் போல்  பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பிடிஎப் கோப்பினை உருவாக்க குறிப்பிட்ட கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Create PDF என்பதை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது பிடிஎப் கோப்பாக கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும்.


பின் அந்த பிடிஎப் கோப்பினை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே நிறுவனம் ஆன்லைனிலும் இந்த வசதியை வழங்குகிறது.

தளத்திற்கான சுட்டி
  
குறிப்பிட்ட சுட்டியினை கிளிக் செய்யவும். ஒப்பன் ஆகும் தளத்தில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் வேண்டிய பைலை தெரிவு செய்து பின் கன்வெர்ட் செய்து கொள்ளவும். 2ஜிபி அளவு வரை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 

தேவையற்ற மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்க

♠ Posted by Kumaresan R in
கணினியில் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் குறிப்பிட்ட மென்பொருள் கணினிக்கு தேவையில்லையெனில் அதனை கணினியில் இருந்து நீக்கி கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கன்ட்ரோல் பேனல் வழியாக சென்று தேவையற்ற மென்பொருள்களை நீக்கி கொள்ள முடியும். ஒருசில நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருள்களை இதன்வழியாக நீக்கம் செய்ய முடியாது. மேலும் ஒருசில கணினியில் வைரஸ் பாதிக்கப்பட்டால் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகாது. இதனால் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க மூன்றாம் தர மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பின் அதனை ஒப்பன் செய்யவும். கணினியில் நிறுவிய அனைத்து மென்பொருள்களும் பட்டியலிடப்படும் அதில் தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து பின் அதனை நீக்கி கொள்ள முடியும்.

இணைய பயன்பாட்டு அளவுகளை கணக்கிட

♠ Posted by Kumaresan R in ,
மொபைல் போனில் இரண்டு வகையான சிம் கார்டுகளை பயன்படுத்துவோம் பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு இவற்றில் பிரிபெய்டு சிம்கார்டில் இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல் போஸ்ட்பெய்டு சிம்கார்டில் எவ்வளவு தொகைக்கு பேசுகிறமோ அதனை பார்த்துக்கொள் வசதியும் உள்ளது. அதேபோன்று மீதமுள்ள இணைய பயன்பாட்டு அளவுகளையும் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. மொபைல் போன் கொண்டு இணையத்தை பயன்படுத்தும் போது இதுவரை எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துகொள்ளும் வசதி மொபைல் போன் நிறுவன புரவைடர்களிடம் உள்ளது. அதுபோன்று டேட்டாகார்டு மூலம் இணைய இணைப்பினை பயன்படுத்தும் போதும் எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரே கணினியில் நாம் பல்வேறு இணைய இணைப்புகளை மாற்றி மாற்றி இணைத்து பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம். 

நம்முடைய கணினியில் எவ்வளவு இணைய பயன்பாட்டு அளவுகளை பயன்படுத்தி உள்ளோம் என்று முழுமையாக அறிந்து கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழி இல்லை, இதற்கு ஒரு மாற்று மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். 32பிட் மற்றும் 64பிட் என தனித்தனியாக மென்பொருள் உள்ளது.


மேலும் தனிப்பட்ட ஒரு பயனர் பயன்படுத்தும் இணைய இணைப்பு அளவுகளையும் அறிந்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உண்டு. மேலும் எக்சல் கோப்பு வடிவில் பயன்படுத்திய அளவுகளை பிரதி எடுத்துக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

Send to தேர்வில் புதிய ஆப்ஷனை கொண்டுவர

♠ Posted by Kumaresan R in ,,
கணினியின் வேலைகளை மிக விரைவாக செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. சுருக்குவிசைகளை பயன்படுத்தியும் சாளர மெனு தேர்வுகள் (options) கொண்டும் கணினியில் பணிகளை விரைந்து செய்ய இயலும். கணினியில் உள்ள தரவுகளை நகலெடுக்கவோ (Copy), நகர்த்தவோ (Cut) சுருக்கு விசைகளை பயன்படுத்துவோம் இல்லையெனில் சுட்டெலியால் வலது கிளிக் தோன்றும் பாப்அப் மெனுவில் Send to தேர்வில் குறிப்பிட்ட ஆப்பஷனை தேர்வு செய்தும் காப்பி செய்து கொள்ள முடியும்.

புளுடூத் மூலமாக தகவலை பகிர விரும்பும் போது பெரும்பாலும் Send to ஆப்ஷனை பயன்படுத்திதான் பகிர்ந்து கொள்வோம். இந்த Send to ஆப்ஷனை தெரிவு செய்யும் போது அதில் குறிப்பிட்ட சில ஆப்ஷன் மட்டுமே இருக்கும். நமக்கு ஏற்றவாறு இதில் பல்வேறு ஆப்ஷன்களை இணைத்துக்கொள்ள முடியும். 

முதலில் விண்டோஸ் கி மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் shell:sendto என்று தட்டச்சு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் Send to ஆப்ஷனில் கொண்டு வர நினைக்கும் அப்ளிகேஷனிற்கோ, கோப்பறைக்கோ அல்லது ஏதாவது ஒரு டிவைஸ்கிற்கோ சுருக்குவிசை ஐகானை உருவாக்கவும்.


இதற்கு வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New > Shortcut என்பதை தெரிவு செய்யவும். அடுத்து குறிப்பிட்ட கோப்பறையினையோ, டிவைஸ்னையோ அல்லது அப்ளிகேஷனையோ தெரிவு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Browse பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட சுருக்குவிசை ஐகானுக்கான தொடர்பினை தேர்வு செய்யவும். பின் Ok பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் Next பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது இப்போது சுருக்குவிசை ஐகான் உருவாக்கப்பட்டு இருக்கும்.

இப்போது Send to பாப்அப் மெனுவில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஆப்ஷன் இருக்கும், அதனை பயன்படுத்தி தரவுகளை நகர்த்திக்கொள்ள முடியும்.