தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடிகளை காட்ட

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிடங்கள் மட்டுமே காட்டும். மேலும் குறிப்பிட்ட தேதியினையும் காட்டும் விநாடி காட்டப்பட மாட்டது. இந்த விநாடியினை காட்ட ஒரு சிறிய மென்பொருள் வழிவகை செய்கிறது.மென்பொருளை தரவிறக்க சுட்டி 
மென்பொருளை தரவிறக்கம் செய்து அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் Clock என்னும் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். உங்கள் கணினி 64 பிட் என்றால் Clock64 என்ற அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். சிறிது நேரத்தில் டாஸ்க்பார் கடிகாரத்தில் விநாடியானது ஓடத் துவங்கி விடும்.  இந்த மென்பொருள் விண்டோஸ் 7 / 8.1 / 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

ஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பயனர்பெயரை தெரிவு செய்ய

சமூக வலைதளங்களின் வருகையும் செயல்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இணையத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலும் உலாவுவது அதிகம். ஒரு பயனர் ஒரே ஒரு சமூக வலைதளத்தில் மட்டும் கணக்கு வைத்துகொண்டு இருப்பார் என்று கூற முடியாது. பல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் போது ஒவ்வொரு தளத்திலும் ஒரு பயனர் பெயர் என்றால், கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. 

ஒரே பயனர் பெயரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பயனர்பெயரை மட்டும் பயன்படுத்தும் போது தனியொரு அடையாளம் கிடைக்கும். மேலும் நம்முடைய நண்பர்களும் எளிதாக நம்மை கண்டறிய முடியும். 

அனைத்து சமூக வலைதளங்களிலும் குறிப்பிட்ட பயனர்பெயர் இருக்கிறதா என்று தனித்தனியாக தேடிச்சென்றால் கண்டிப்பாக அது தோல்வியில் தான் முடியும். இதற்கு என்று ஒரு தளம் உள்ளது இந்த தளத்தின் மூலமாக 150+ மேற்பட்ட சமூக வலைதளங்களில் உங்கள் பெயர் பயனர்பெயராக தெரிவு செய்ய முடியுமா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். எந்தெந்த சமூக வலைதளங்களில் பெயர் இருக்கிறதோ அவை பச்சை நிறமிட்டு Available என்றும். பயனர்பெயர் இல்லாத தளங்களில் வெளிர் சிகப்பு நிறமிட்டு taken என்றும் இருக்கும். இந்த வசதியை பயன்படுத்தி குறிப்பிட்ட பயனர்பெயரை அனைத்து சமூக வலைதளங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


தளத்திற்கான சுட்டி

Facebook வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,,
எந்த ஒரு மூன்றாம் தர மென்பொருள் உதவியும் இல்லாமல் முகநூலில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது. முகநூலில் உலாவும் போது நாம் பல வீடியோக்களை காண்போம் அதனை இணையத்தில் உதவியுடன் மட்டுமே காண முடியும். அதனை கணினியில் தரவிறக்கம் செய்ய முயன்றால் வீடியோவினை தரவிறக்கம் செய்ய முடியாது.  இதற்கு ஒரு எளிய முறை உள்ளது.

முகநூல் தளத்தில் நீங்கள் ஒரு வீடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில், முகவரியில் (URL)  WWW என்பதனை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக m என்று உள்ளிட்டு Enter பொத்தானை அழுத்தவும். இப்போது முகநூல் பக்கமானது மொபைல் சாதனத்தில் தோன்றுவதை போல் தெரியும். நீங்கள் வீடியோவினை ப்ளே செய்து விட்டு, வீடியோவின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Save video as... என்னும் தெரிவினை தேர்வு செய்து வீடியோவினை எளிமையாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


கணினியில் முகநூல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இது ஒரு எளிய முறை ஆகும்.

கணினியில் மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய / விண்டோஸ் இயங்குதளத்தில் மறைந்துள்ள கோப்புகளை தேட

♠ Posted by Kumaresan R in ,,
விண்டோஸ் இயங்குதளத்தில் மறைந்துள்ள கோப்புகளை தேடி கண்டறியவும், கணினியை பற்றி முழு விவரங்களை அறியவும். மேலும் குறிப்பிட்ட கோப்பினை முழு விவரத்தை தெரிந்து கொள்ளவும். உலாவிகளின் வழியாக தேடிய வலைதள முகவரியை மீண்டும் தேடி பெறவும் PCFerret  மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் PCFerret  மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் பல டேப்கள் இருக்கும். திறந்தவுடன் கணினியின் தகவல்களை பார்க்க முடியும். அடுத்த டேப்பினை  (Full System Details) கிளிக் செய்தவுடன் கணினியில் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.


ADS என்னும் டேப்பினை அழுத்தி தோன்றும் விண்டோவில், மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய முடியும். அடுத்த டேப்பினை (Find Files By Type) அழுத்தவும். தோன்றும் விண்டோவில்  குறிப்பிட்ட கோப்பினை தேர்வு செய்து கோப்பின் முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.உலாவியின் வழியாக தேடிய முகவரிகளை பெற முடியும். மொசில்லா பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், ஒபேரா , ஆப்பிள் சபாரி, சீ மன்ங்கி போன்ற உலாவிகளின் முகவரிகளை எளிதாக இந்த PCFerret  மென்பொருள் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.மிகவும் பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கவும், இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Tools டேப்பினை கிளிக் செய்து, Generate Password  என்னும் தேர்வினை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட தேர்வுகளை தெரிவு செய்து கொண்டு Generate New Password  என்னும் பொத்தானை அழுத்தவும். புதிது புதிதாக கடவுச்சொல்லை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் Hash  மதிப்புகளையும் உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் வழியாக கணினியை பற்றியும், கணினியின் முக்கியமான அம்சங்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

SecretFolder - போல்டர் லாக்

♠ Posted by Kumaresan R in ,,
கோப்புகளை இரகசியமாக பூட்டி வைக்கவும், முக்கியமான சில தகவல்களை பாதுகாத்து கொள்வதற்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கு என பல்வேறு மென்பொருள் உள்ளன. அதில் ஒன்றுதான் SecretFolder .


மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போதே கடவுச்சொல் கேட்கும் அதனை உள்ளிட்டு கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து Add பொத்தானை அழுத்தி எந்தெந்த கோப்புகளை லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்யவும். பின் Lock என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் தெரிவு செய்த கோப்புகள் லாக் செய்யப்பட்டு விடும். 

மீண்டும் லாக் செய்த கோப்பினை அன்லாக் செய்ய, SecretFolder  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்தெந்த கோப்புகளை அன்லாக் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து பின் Unlock பொத்தானை அழுத்தவும். 


நீங்கள் SecretFolder ன் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதற்கு Preferences என்னும் பொத்தானை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் Change password என்னும் பொத்தானை அழுத்தி கடவுச்சொல்லை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 

கோப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.

கோப்புகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட (Kryptelite)

♠ Posted by Kumaresan R in ,,,
அனைத்து விதமான கோப்புகளையும் நாம் நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளும் போதும், அலுவலக சம்பந்தமான முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை பாதுகாப்பாக வைக்கவும் மேலும் அதனை மற்றவர்களுக்கு தெரிந்து விடாமல் பாதுகாப்பாக மின்னஞ்சல் அனுப்பவும். மென்பொருளை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாகவே மென்பொருள் ஒன்று கிடைக்கிறது. இந்த மென்பொருள் மூலம் கோப்புகளை Encrypt மற்றும் Decrypt செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் எந்த கோப்பினை கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Encrypt என்னும் தேர்வினை தெரிவு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK என்ற பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் கோப்பானது மாற்றப்பட்டு விடும். 

Encrypt செய்து பூட்டப்பட்ட கோப்பினை  திறக்க , கோப்பின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Decrypt  என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். கோப்பானது மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிதாக கோப்புகளை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும். 

பைல்களின் அளவை குறைக்க / கோப்புகளை (Folder) ஜிப் மற்றும் அன்ஜிப் செய்ய

மிகப்பெரிய அளவுடைய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது தனித்தனி பைல்களை ஒன்று சேர்க்கவோ நாம் அதனை கம்ப்ரஸ் செய்து ஒரே கோப்பாக மாற்றுவோம். விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை கம்ப்ரஸ் மற்றும் அன்கம்ப்ரஸ் செய்ய Ashampoo-ZIP-Free என்ற மென்பொருள் வழிவகை செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி 

மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் வழக்கம் போல் நாம் ஜிப் பைல்களை எப்படி உருவாக்குவோமோ அதே முறையினை பின்பற்றி Ashampoo-ZIP-Free  னை பயன்படுத்தி உருவாக்கி கொள்ள முடியும். 

ஒரு கோப்பறையின் மீது வலது கீளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி எளிமையாக உருவாக்கி கொள்ள முடியும்.


அதே போல அன்ஜிப் செய்து கொள்ளவும் முடியும். ஜிப் செய்யப்பட்ட கோப்பினை வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Ashampoo-ZIP-Free னுடைய ஆப்ஷன்கள் தோன்றும் அதை பயன்படுத்தி அன்ஜிப் செய்து கொள்ளலாம். 

மேலும் ஜிப் செய்யப்பட்ட பைலை டபுள் கிளிக் செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Extract பொத்தானை கிளிக் செய்து, எந்த இடத்தில் பைல்களை சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து அன்ஜிப் செய்து கொள்ளமுடியும்.இந்த மென்பொருள் அனைத்து விதமான ஜிப் பார்மெட்களையும் ஆதரிக்க கூடிய வகையில் உள்ளது. ZIP, CAB, 7-ZIP, LHA, TAR (TAR,TAR.XZ,TAR.BZ2 and TAR.GZ)
இந்த மென்பொருள் விண்டோஸ்7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும்.

இணையம் இல்லாமல் கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள

♠ Posted by Kumaresan R in ,
தகவல் பரிமாற்றம் என்பது அத்தியாவசியமான ஒன்று. மொபைல் போனை எடுத்துக்கொண்டாலும் சரி கணினியை எடுத்துக்கொண்டாலும் சரி தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மொபைல் சாதனங்களுக்கு இடையே பரிமாறிக்கொள்ள புளூட்டுத், வைபை போன்றவைகளும் தற்போது இணைய இணைப்புடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள  வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பலவிதமான மென்பொருள்கள் சந்தையில் கிடைகிறன.  இதைப் போன்று கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு வழிகள் உள்ளன. நெட்வொர்க் சேரிங் மூலமாக தகவல்களை கணினிகளுக்கிடையே பரிமாறிக்கொள்ள முடியும். இவ்வாறு பரிமாற்றம் செய்யும் நேர விரயம் அதிகம் ஆகும். கணினிகளுக்கிடையே தகவல்களை பரிமாற்றிக்கொள்ள அற்புதமான மென்பொருள் உள்ளது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்க கூடியது ஆகும். மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த ஐபிமெஜேஞ்சர் மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த மெபொருள் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியில் ஐபிமெஜேஞ்சர் நிறுவப்பட்டு தற்போது ஒப்பன் செய்யப்பட்டு இருந்தால் பட்டியலிட்டு காட்டும்.  நீங்கள் தகவல் அனுப்ப நினைக்கும் கணினியிலும் ஐபிமெஜேஞ்சர்  மென்பொருள் நிறுவப்பட்டு இருக்க  வேண்டும்.

சர்வர், கிளையன்ட் என தனித்தனி மென்பொருள் இல்லை ஒரே ஒரு மென்பொருள் மட்டுமே இதனை அனைத்து கணினியிலும் நிறுவி பயன்படுத்திக்கொள்ள முடியும். 

எந்த கணினிக்கு நீங்கள் தகவல்களை பரிமாற நினைக்கிறீர்களோ அந்த கணினியை தெரிவு செய்து பின் சதாரணமாக எழுத்துகளை மட்டும் தட்டச்சு செய்து அனுப்ப விரும்பினால். தட்டச்சு செய்து அனுப்பவும். கூடுதலாக பைல்களை அனுப்ப விரும்பினால் அதனை ட்ராக் அன்ட் ட்ராப் செய்து பின் அனுப்பவும். ஒரு முழு கோப்பறையையும் (Folder) அனுப்ப முடியும். கோப்புகளை தனித்தனியாக தெரிவு செய்தும் அனுப்ப முடியும்.


புதியதாக ஏதும் செய்திகள் வந்தால் டாஸ்க்பாரில் அறிவிப்புகள் காட்டும்.வந்த அறிப்பினை கிளிக் செய்தால் மேலே இருக்கும் விண்டோ போன்று வரும். அதில் Open என்னும் பொத்தானை அழுத்தி செய்தியை பெற்றுக்கொள்ளவும். கோப்புகள் ஏதும் வந்திருந்தால் அதனை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும். நீங்கள் அனுப்பிய செய்தி திறக்கப்படும் போது உங்களுக்கும் அறிவிப்பு செய்தி வரும்.


இந்த மென்பொருள் மூலம் கணினிகளுக்கிடையே தகவல்களை எளிதாகவும், மிக விரைவாகவும் பரிமாறிக்கொள்ள முடியும். அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இழந்த தகவல்களை மீட்டெடுக்க / டெலிட் செய்த கோப்புகளை மீட்டெடுக்க

தகவல்களை சேமித்து வைக்கவோ அல்லது தவல்களை பரிமாறிக்கொள்ளவோ நாம் முன்பு ப்ளாப்பி, குறுவட்டுகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெண்ட்ரைவ், மெமரிகார்ட், யூஎஸ்பி-ஹார்ட்டிஸ்குகளை பயன்படுத்தி வருகிறோம் அவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்யும் போது , ஒரு சில கோப்புகளை இழக்க நேரிடும், மேலும் மெமரி கார்டினை முறையாக கணினியில் இருந்து எஜெக்ட் செய்யமால் , கணினியில் இருந்து உருவும் போதும் இதுபோன்று கோப்புகள் இழப்பு அல்லது மெமரிகார்டினை முழுவதுமாக இழக்க நேரிடும். 

பெண்ட்ரைவ் மற்றும் வன்தட்டினை பார்மெட் செய்யும் பொழுதும் இதுபோன்ற பிரச்சினைகள் நிகழும். இவ்வாறு இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள் உதவிசெய்கிறது. அதன் மூலம் எளிதாக இழந்த கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த டிஸ்க் ட்ரில் மென்பொருளை ஒப்பன் செய்யவும். 

உங்களுடைய வன்தட்டில் பிரிக்கப்பட்ட தனித்தனி அடைவுகள் காட்டும். அதற்கு நேரே உள்ள Recover என்னும் பொத்தானை அழுத்தவும். 
அடுத்து இழந்த தகவல்கள் வகை வாரியாக பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்து பின், எந்த இடத்தில் கோப்புகளை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தெரிவு செய்து பின் Recover என்ற பொத்தானை அழுத்தவும். தவறுதலாக டெலிட் செய்த கோப்புகளையும் மீட்டெடுக்க முடியும்.

அதேபோன்று கணினியுடன் இணைக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவுகளும் பட்டியலிடப்படும் அதனை தெரிவு செய்தும் இழந்த கோப்புகளை மீட்டெடுத்துக்கொள்ள முடியும். கோப்புகள் அனைத்தையும் .dmg பைல் பார்மெட்டில் நகல் எடுத்துக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருள் இழந்த தகவல்களை மீட்டெடுக்க மிகவும் ஏற்றது. மேலும் இந்த மென்பொருள் கணினி வன்தட்டு பார்மெட்களான FAT , exFAT, NTFS, HFS , EXT2, EXT3 மற்றும் EXT4 பார்மெட்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

டிஸ்க் ட்ரில் மென்பொருள் விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 லும் இயங்க கூடியது ஆகும்.