தமிழில் கணினி செய்திகள்

லைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் பலவும், ஐஎஸ்ஒ (ISO) பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த ஐஎஸ்ஒ (ISO) பைல்களை நாம் போர்ட்டபிள் பைல்களாக மாற்றிய பின்புதான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் பைலாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ பைலின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் பைலாக மாற்றிய பின்புதான் முடியும். நேரடியாக ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும். மேலும் இவற்றை கணினியில் நிறுவிய பின்புதான் பயன்படுத்த முடியும். பூட்டபிள் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க ஒரு இலவ்ச போர்ட்டபிள் மென்பொருள் உள்ளது. இது அளவில் சிறியது ஆகும். லைவ் சீடிக்களை நேரடியாக விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே பயன்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கொள்ளவும். பின் அந்த போர்ட்டபிள் மென்பொருளின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் Right-Click menu என்பதை கிளிக் செய்யவும். தற்போது MobaLiveCD முழுமையாக நிறுவப்படும்.


பின் உங்கள் விருப்ப முறைகளை தெரிவு செய்யவும். Run the LiveCD அல்லது Run the LiveUSB என்பதை தெரிவு செய்யவும். 


பின் ஐஎஸ்ஒ பைலையோ அல்லது, லைவ் சீடியினையோ தேர்வு செய்யவும். தற்போது MobaLiveCD பைல் சேமிக்கப்படவேண்டிய இடத்தை தெரிவு செய்து கொள்ளவும்.



அவ்வளவுதான் தற்போது நீங்கள் குறிப்பிட்ட பைல் இயங்க தொடங்கும். நீங்கள் சீடியில் உள்ள பைலை தேர்வு செய்வதே சிறந்தது.


இனி நீங்கள் இதை எளிகையாக பயன்படுத்த முடியும். Ctrl + Alt கீகளை அழுத்துவதன் மூலம் QEMU விண்டோவில் உங்களால் பயணிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். இயங்குதளத்தை நிறுவ கற்றுகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பூட்டபிள் விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணிப்பொறியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் பெண்ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுவது என்று வினவினார். இதோ அதற்கான பதில்.

முதலில் Windows 7 USB/DVD Download tool என்ற மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Source file என்ற இடத்தில் விண்டோஸ்7 இமேஜ் பைலை தேர்வு செய்யவும். குறிப்பு ISO பைலாக மட்டுமே இருக்க வேண்டும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device என்பதை தேர்வு செய்யவும். DVD யில் பூட்டபிள் பைலை உருவாக்க வேண்டுமெனில் DVD என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device னை தேர்வு செய்துகொண்டு Begin copying என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்து சில நொடிகளில் ப்ளாஷ்ட்ரைவில் பைல்கள் காப்பி செய்யப்படும். பைல்கள் அனைத்தும் முழுமையாக காப்பியாகும் வரை காத்திருக்கவும்.


அவ்வளவுதான் உங்களுக்கான பூட்டபிள் பெண்ட்ரைவ் தயாராகிவிட்டது. இதை பயன்படுத்தி நீங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இனி கணினியில் எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும்.

பெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.

அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

மென்பொருளை பதிவிறக்க: Rohos Mini

இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.



படம்-1



அதில் Setup USB key என்பதனை கிளிக் செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.

படம்-3

பின் ஒகே செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
கிளிக் செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.

படம்-4

Performing operation என்ற செய்தி திரையில் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.

படம்-5

பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.

படம்-6


பின் Rohos Icon யை கிளிக் செய்து, வரும் விடோவில்
Conect disk என்பதனைகிளிக் செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.

படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்
Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.
படம் 8 யை பார்க்கவும்.

படம்-8

Pendrive யை விட்டு வெளியே வரும் போது.
Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்
Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.


படம்-9

அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
படம் 10 யை பார்க்கவும்.

படம்-10

இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.