தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலின் இருப்பியல்பு எழுத்துருவை மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan R in
ஈமெயில் சேவையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் கூகுள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தினுடைய இந்த நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவை வெகுவாக பயனாளர்களை கவர்ந்து வருகிறது. ஈமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு ஜிமெயில் நிறுவனம் முன்னேறி விட்டது இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் தனது ஈமெயில் சேவையில் புதிதுபுதியதாக சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான் இருப்பியல்பு எழுத்துருவினை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியாகும். இந்த வசதியின் மூலமாக நாம் கம்போஸ் மெயில் சென்று டைப் செய்யும் அனைத்தும் நாம் குறிப்பிடும் எழுத்துருவிலேயே ஏற்றப்படும். இந்த வசதியினை செயல்படுத்த.

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும், பின் Settings சுட்டியை அழுத்தி பின் Labs என்னும் பொத்தானை அழுத்தவும்.


பின் Default Text Styling லேபிளை எனேபிள் செய்யதுவிட்டு, Save Change
பொத்தானை அழுத்தவும்.பின் Settings சுட்டியை அழுத்தி பின் General என்னும் பொத்தானை அழுத்தவும். அதில் Default text style என்னும் தேர்வில் எழுத்துருவினை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும். 


இதில் எழுத்தின் அளவுரு, நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 


இப்போது கம்போஸ் மெயிலை ஒப்பன் செய்து வழக்கம் போல தட்டச்சு செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்டது போல எழுத்துரு டைப் ஆக தொடங்கும். இந்த எழுத்துரு தேவையில்லையெனில் தட்டச்சு செய்த எழுத்துக்களை தேர்வு செய்து கொண்டு என்னும்பொத்தானை அழுத்தி வழக்கம் போலவே எழுத்துக்களை மாற்றிக்கொள்ள முடியும்.

கணினியை காக்க - Advanced System Care

♠ Posted by Kumaresan R in ,
கணினி பயன்பாடானது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது, கணினியை பயன்படுத்த தொடங்கிய நாள் முதலாக இன்றுவரை கணினி வளர்ச்சியில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளது கணினிஉலகம். அந்தவகையில் தற்போது கணினி வளர்ச்சியானது உச்சத்தை அடைந்துள்ளது. தொடர்ச்சியாக வெளிவரும் வன்பொருள் மற்றும் அதனோடு சார்ந்து பயன்படுத்தக்கூடிய மென்பொருள்கள் இவற்றின் பங்கினாலேயே கணினி வளர்ச்சி அடைந்துவிட்டது என்று கூற முடியாது, இணையமும் ஒரு காரணம் ஆகும். இந்த வளர்ச்சியினால் தினமும் கணினி பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினை ஒன்று, இரண்டு இல்லை பல பிரச்சினைகள் ஆகும். ஒரு கணினியில் என்னத்தான் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தாலும். அந்த கணினியில் கோளாருகள் ஏற்படாமல் இருக்காது. அதுவும் இணைய இணைப்பு இருப்பின் அந்த கணினியில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும்.


தீடிரென கணினியில் கன்ட்ரோல் பேனல் செயல்படாது, விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பிரச்சினை, சில சமயம் விண்டோஸ் முடக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதற்கு காரணம், இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களை, இந்த மென்பொருள் எதற்கு என்று தெரியாமலேயே கணினியில் பதிந்து கொள்வது. ஆனால் அந்த மென்பொருளை நிறுவிய நாள் அன்று மட்டுமே பயன்படுத்துவோம். பின் அப்படி ஒரு மென்பொருள் நம்முடைய கணினியில் இருப்பதையே மறந்து விடுவோம். ஒரு சிலர் மென்பொருள்களை நிறுவவும் பின் அந்த மென்பொருள்களை கணினியை விட்டு நீக்கவும் செயவார்கள். இதனால் கணினி இயக்க வேகத்தில் தடைபடுவதோடு, கணினியே சில நேரங்களில் முடக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க கணினியை அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு உதவும் மென்பொருள் தான் கணினியில் மருத்துவர் Advanced System Care.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் கணினியில் பிரச்சினை இருந்தால் அது எந்த வகை பிரச்சினை என்று தேர்வு செய்து அந்த கோளாரினை சரிசெய்து கொள்ளவும். இல்லையெனில் கணினியை முழுவதுமாக ஸ்கேன் செய்து கணினியில் உள்ள அனைத்து கோளாருகளையும் சரிசெய்து கொள்ள முடியும்.


விண்டோஸில் ஏற்படும் பிரச்சினைகளையும் இந்த மென்பொருளின் உதவியுடன் சரிசெய்து கொள்ள முடியும். கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்குவதில் இருந்து விண்டோஸில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதுவரை அனைத்து விதமான பிரச்சினைகளை நீக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை சீரமைக்கவும் முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

நெருப்புநரி உலவியில் அட்ரஸ்பார் மற்றும் சர்ச்பார் இரண்டையும் ஒன்றினைக்க

♠ Posted by Kumaresan R in
நெருப்புநரி உலவியானது தற்போது அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த உலவியானது முதலிடத்தில் இருந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியினை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறிவிட்டது. மற்ற உலவிகளை ஒப்பிடுகையில் நெருப்புநரி உலவியானது இணைய பயனாளர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. நெருப்புநரி உலவி முதலில் இணைய உலகிற்கு வரும் போது, சாதாரணமாகவே வெளிவந்தது ஆனால் பின் அதனுடைய வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் மாறியது. நெருப்புநரி உலவியானது நவம்பர் 9, 2004 அன்றுதான் தொடங்கப்பட்டதாகும். நெருப்புநரி உலவியானது பயனாளர்களை அதிகமாக கவருவதற்கு முக்கிய காரணமே அதனுடைய வேகமும், சிறப்பம்சம் மட்டுமே ஆகும். அந்த வகையில் நெருப்புநரி உலவி அறிமுகப்படுத்தியுள்ள வசதிதான் அட்ரஸ்பார் மற்றும் சர்ச்பார் இரண்டையும் ஒண்றினைப்பதற்கான நீட்சி ஆகும்.

நீட்சியை தரவிறக்க சுட்டி


இந்த நீட்சியை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நெருப்புநரி உலவியோடு பதிந்து கொள்ளவும். பின் நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் பார்க்கவும் நெருப்புநரி உலவியில் அட்ரஸ்பார் மற்றும் சர்ச்பார் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கும்.

இணைப்பதற்கு முன்:


இணைத்தப்பின்:


இந்த நீட்சியை பயன்படுத்துவதால் அட்ரஸ்பாரில் முகவரியினை குறிப்பிடும் போதே தெளிவாக அனைத்து தகவலையும் அறிந்து கொள்ள முடியும். இந்த நீட்சியானது நெருப்புநரி உலவி 4.0 பதிப்பில் மட்டுமே செயல்படக்கூடியது ஆகும்.

ஆடியோக்களை பிரிக்க மற்றும் சேர்க்க - Weeny Free Audio Cutter

♠ Posted by Kumaresan R in
பெரும்பாலானோர் ஒரு பாடலை விரும்பி கேட்போம் ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம், ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே கேட்போம். பிடித்திருந்தால் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். செல்போனில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் ஒருபாடலுடைய குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில் நாம் ஒரு ஆடியோ கட்டரின் உதவியை மட்டுமே நாட வேண்டும். அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும் முடியும். 


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Cut Audio, Merge Audio என்ற தேர்வினை உங்கள் விருப்பபடி தேர்வு செய்து கொள்ளவும். பின் ஆடியோ பைலை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். ஆடியோ பைல்களை ஒன்றினைக்கும் போது பல்வேறு அளவுடைய பைல்களை இந்த மென்பொருள் ஆதரிக்கும்.

விண்டோஸ் 7ல் டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைக்க

♠ Posted by Kumaresan R in ,
இப்போதுதான் கணினி பயன்பாட்டாளர்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, விண்டோஸ் ஏழு பக்கம் அடியெடுத்து வைக்கிறனர். அதற்குள் விண்டோஸ் எட்டு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமானது வெளியாக உள்ளது. இந்த விண்டோஸ் ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை சார்ந்து  தினமும் பல்வேறு மென்பொருள்கள் வெளியாகிறன. அவற்றில் ஒன்று தான் Taskbar Hider இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் டாஸ்க்பார் மற்றும் தொடக்க பொத்தானை மறைப்பதற்கு பயன்படுவதுதான் இந்த மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் அளவில் சிறிய மென்பொருள் ஆகும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும். சுருக்கு கோப்பறையாக (Zip) உள்ள பைலை விரித்து கொள்ளவும். பின் அந்த பைலில் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator  என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைத்துக்கொள்ள முடியும்.


பின் குறிப்பு:- 25-04-2011 முதல் பதிவிடும் அனைத்து பதிவுகளும் windows server 2008 r2 னை பயன்படுத்தி பதியப்படுவதாகும். 


Registry Editor-யை ஒப்பன் ஆகாமல் தடுக்க

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் அனைத்து கட்டளை தொகுப்புகளும் Registry Editor-ல் மட்டுமே இருக்கும். இந்த விண்டோஸ் Registry Editor யை முறையாக கையாளமல், தவறாக பயன்படுத்தினோம் ஆனால் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே முடக்கப்பட்டுவிடும். மேலும் இதனால் மீண்டும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே நிறுவவேண்டி வரும், எனவே தான் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எடிட் செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பணியாற்றும் முன்னரே விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்துக்கொள்ள வேண்டும். கணினியை ஒரு பயனாளர் மட்டும் பயன்படுத்தினால் பராயில்லை, நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தினால்தான் பிரச்சினை அவர்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் புகுந்து மாற்றங்களை செய்து விடுவார்கள். பின் கணினியானது எதாவது பாதிப்பிற்கு உள்ளாகும் இல்லையெனில் முடக்கப்பட்டுவிடும். அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாமல், அந்த பிரச்சினையை சரிசெய்ய முடியாமல் கடைசியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மீண்டும் கணினியில் நிறுவ வேண்டும். இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க வேண்டுமெனில் நாம் முதலிலேயே ரிஸிஸ்ட்டரியை பாதுகாத்து கொள்வது நல்லது. இதற்கு இரண்டுவழிதான் உள்ளது. ஒன்று ரிஸிஸ்ட்டரியை நகல்(Backup) எடுத்து தனியே வைக்க வேண்டும். இல்லையெனில் ரிஸிஸ்ட்டரியை டிசேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை எவ்வாறு டிசேபிள் செய்வது என்று கீழே காண்போம்.

முதலில் ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும், ஒப்பன் செய்ய Ctrl+R கீகளை ஒருசேர அழுத்தி ஒப்பன் செய்யலாம். இல்லையெனில் Start > Run என்பதை தேர்வு செய்து ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் gpedit.msc என்று டைப் செய்து ஒகே செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் User Configuration > Administrative Templates > System என்னும் வரிசையை தெரிவு செய்யவும்.


System என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். வலதுபுறமாக தோன்றும் வரிசையில் Prevent access to registry editing tools என்பதை இரட்டை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இப்போது விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியானது டிசேபிள் செய்யப்பட்டிருக்கும். இப்போது விண்டோஸ் ரிஸிட்டரியை ஒப்பன் செய்து போது எரர் செய்தி மட்டுமே தோன்றும்.


இதனை மீண்டும் எனேபிள் செய்ய மேலே சொன்ன வழிமுறையை பின்பற்றி Not Configured என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் ரிஸிட்டரியை காப்பாற்ற இதுவும் ஒரு வழிமுறை ஆகும்.

டுவிட்டரை ஜிடால்க் மூலமாக அணுக

டுவிட்டர் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக்கொள்ள உதவும் தளம் ஆகும். சோஷியல் நெட்வோர்க் தளத்தில் அதிகமாக பயன்படுத்தபடும் தளத்தில் இந்த தளமும் ஒன்றாகும். சாதாரண மனிதனில் தொடங்கி மிகப்பெரிய நபர்கள் வரை டுவிட்டர் தளத்தில் கணக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயவிவரங்களையும், பிடித்த செயல்களையும் அவ்வபோது டுவிட்டர் தளத்தில் வெளியிடுவார்கள். செய்திதாள்களில் கூட வெளிவராத செய்திகள் இதுபோன்ற சோஷியல் தளங்களில் காண முடியும். இதுபோன்ற செய்திகளை நாம் டுவிட்டர் தளத்தில் நம்முடைய கணக்கில் நுழைந்த பின்புதான் காண முடியும். ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்றும் போது நாம் தனியாக இந்த தளத்திற்கு சென்று இதுபோன்ற செய்திகளை காண முடியாது. டுவிட்டரில் பதிவிடும் செய்திகளை ஜிடால்கில் இருந்தவாறே காண முடியும் இதற்கு ஒரு தளத்தில் ஜிமெயில் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை சமர்பிக்க வேண்டும்.

தளத்திற்கான சுட்டி

இந்த தளத்தின் நுழைந்து முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்து கூகுள் கணக்கின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.

அடுத்ததாக டுவிட்டர் கணக்கின் பயன்ர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து ஜிடால்கினை ஒப்பன் செய்து அதில் புதியதாக வந்துள்ள நண்பர் அழைப்பினை ஒகே செய்யவும். 


அவ்வளவுதான் இனி டுவிட்டரில் பதியப்படும் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களால், ஜிடால்கில் இருந்தவாறே பெற முடியும்.

இந்த வசதியினை நீங்கள் ஜிமெயில் அரட்டையிலும், ஆர்குட் அரட்டையிலும் பெற முடியும். விரும்பினால் நிறுத்திக்கொள்ளவும் முடியும். இந்த வசதியின் மூலம் இனி தனியாக டுவிட்டர் கணக்கினை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனை சிறப்பாக பயன்படுத்த ஒரு சில கட்டளைகள் உள்ளன அவையாவன.

/h to show this help.
/on to receive timeline updates
/off to not receive timeline updates
/t to send tweets.
/q category to send quotes.
/rt user to retweet a user’s last message.
/d user to send direct message.
/f user to follow someone.
/u user to unfollow someone.
/i to show incoming friendships.

பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,,
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் வேலைக்கும் தனித்தனி மென்பொருளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். உதாரணமாக வீடியோ, ஆடியோவை கன்வெர்ட் செய்ய, ரைட் செய்ய மற்றும் மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவை கன்வெர்ட் செய்யவும். ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களுக்கான வீடியோ கன்வெர்ட் செய்யவும். 3D போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கத்திற்கு என ஒவ்வொரு செயலையும் செய்ய நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். இவ்வாறு இல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். இதற்கு இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளானது 62 எம்.பி அளவுடையதாகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் ஆடியோ மற்றும் வீடியோ சீடிக்களை இந்த மென்பொருளின் உதவியுடனே ரைட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு வீடியோவையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ சீடியிலிருந்து தனியே பாடலை மட்டும் பிரித்தெடுக்கவும் முடியும்.


மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ளவும். இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவினை பதிவிறக்கம் செய்யவும். பதிவேற்றம் செய்யவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மேலும் போட்டோக்களை அழகுபடுத்தவும் கன்வெர்ட் செய்யவும். வீடியோவில் இருந்து போட்டோவினை பிரித்தெடுக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மொத்தத்தில் பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய சிறந்ததொரு மென்பொருள் இதுவாகும். இந்த மென்பொருளின் மூலமாக கன்வெர்ட் செய்யக்கூடிய செயல்கள்.
 • Free YouTube Download
 • Free YouTube to MP3 Converter
 • Free YouTube to iPod and PSP Converter
 • Free YouTube to iPhone Converter
 • Free YouTube to DVD Converter
 • Free YouTube Uploader
 • Free Facebook Uploader
 • Free Video to Android Converter
 • Free Video to Apple TV Converter
 • Free Video to BlackBerry Converter
 • Free Video to HTC Phones Converter
 • Free Video to iPad Converter
 • Free Video to iPod Converter
 • Free Video to iPhone Converter
 • Free Video to LG Phones Converter
 • Free Video to Motorola Phones Converter
 • Free Video to Nintendo Converter
 • Free Video to Nokia Phones Converter
 • Free Video to Samsung Phones Converter
 • Free Video to Sony Phones Converter
 • Free Video to Sony Playstation Converter
 • Free Video to Sony PSP Converter
 • Free Video to Xbox Converter
 • Free DVD Video Converter
 • Free Video to DVD Converter
 • Free Video to Flash Converter
 • Free 3GP Video converter
 • Free Video to MP3 Converter
 • Free Video to JPG Converter
 • Free Audio Converter
 • Free Audio to Flash Converter
 • Free DVD Video Burner
 • Free Disc Burner
 • Free Audio CD Burner
 • Free Audio CD to MP3 Converter
 • Free Screen Video Recorder
 • Free Image Convert and Resize
 • Free Video Dub
 • Free Audio Dub
 • Free Video Flip and Rotate
 • Free 3D Photo Maker
 • Free 3D Video Maker
இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும்.

யூடியூப் வீடியோக்களை MP3 யாக கன்வெரட் செய்ய

♠ Posted by Kumaresan R in ,,
யூடியூப் தளத்தில் தினமும் லட்சகணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இந்த தளத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய என்னுடைய வலைப்பூவிலேயே பல பதிவுகளை இட்டுள்ளேன். யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவில் இருந்து ஆடியோவினை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் வீடியோ பதிவிறக்கம் செய்து அதிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். இல்லையெனில் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளின் உதவியினை நாடிச்செல்ல வேண்டும் இதற்கு பதிலாக ஆன்லைனிலேயே யூடியூப் வீடியோவினை MP3 யாக மாற்றம் செய்ய ஒரு தளம் வழிவகை செய்கிறது.

இணையதளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, கன்வெர்ட் செய்ய வேண்டிய முகவரியை (URL) உள்ளிடவும். பின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அடுத்து எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து தரத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய முன்னஞ்சல் முகவரிக்கு பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். அந்த சுட்டியை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வீடியோவில் இருந்து ஆடியோவை பிரித்து எடுக்க நாம் எந்த ஒரு மென்பொருளையும் கையாள வேண்டியது இல்லை. இணையத்தில் உதவியுடனே கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.

அரட்டை அடிக்க IMO Instant Messenger

♠ Posted by Kumaresan R in
இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை  மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும். வீடியோ மற்றும் ஆடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும்.  நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

கணினியை பாதுகாக்க - TuneUp Utilities மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
கணினியை பயன்படுத்தும் அனைவரும் தினமும் பல்வேறு விதமான பிரச்சினைகளை நம்முடைய கணினியிடம் இருந்து கற்றுக்கொள்வோம். அதனை ஒருசில நேரங்களில் நிவர்த்தியும் செய்வோம். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கணினி பிரச்சினைகளை நம்மால் களைய முடியாது. இதற்கு காரணம் நாம் கணினியை பயன்படுத்தும் விதம் மட்டுமே ஆகும். முறையாக கணினியை பயன்படுத்தினால் நாம் பல்வேறு பிரச்சினை தடுக்க முடியும். முறையற்ற பாதுகாப்புடன் இணையத்தில் உலவுதல், ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவாமல் இருத்தல், கணினியில் நிறுவிய மென்பொருள்களை நீக்கம் செய்யும் போது முறையாக நீக்கம் செய்யாமல்லிருத்தல் போன்றவற்றின் காரணமாக கணினியின் செயல்பாடு குறைவதோடு கணினியில் பல்வேறு பிரச்சினைகள் எழும். இதுபோன்ற பிரச்சினைகளை களைவதற்கு நம்முடைய கணினியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கணினியில் தேங்கியுள்ள குப்பைகள், ரிஸிஸ்ட்டரியில் நீக்கப்பட வேண்டிய குப்பைகள், போன்றவற்றை கணினியை விட்டே நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு உதவும் மென்பொருள்தான் TuneUp Utilities.

TuneUp Utilities மென்பொருளானது தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது.

மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய சுட்டி


இணையத்தின் உதவியுடன் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, பின் கேப்ட்சா கோடினை உள்ளிட்டு, பின் Request product key என்ற பொத்தானை அழுத்தவும். பின் மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே செய்யவும். டவுண்லோட் செய்வதற்கான லிங் மற்றும் லைசன்ஸ் கீ இரண்டும், நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பின் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை ஒப்பன் செய்து புதியதாக வந்துள்ள மின்னஞ்சலை ஒப்பன் செய்து அதில் குறிப்பிட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 


பின் இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயினை கொண்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுடைய சந்தை மதிப்பு $49.95 ஆகும். இந்த மென்பொருளை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். 


இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும். மேலும் ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், லாகான் ஸ்கீரின் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. வன்தட்டினை சீரமைக்கவும், இந்த மென்பொருள் உதவி செய்கிறது. கணினியை முழுமையாக காபாற்ற இந்த மென்பொருள் உதவி செய்யும்.

ஜிமெயிலின் பேக்ரவுண்டை விருப்பபடி அமைக்க

♠ Posted by Kumaresan R in
ஜிமெயில் நிறுவனம் ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ஆகும். ஈமெயில் சேவையில் அதிக பயனாளர்களை பெற்றுவரும் நிறுவனத்தில் ஜிமெயில் நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவில் ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை கடந்த வருடம் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியது. அதற்கு முழுகாரணமும் ஜிமெயில் நிறுவனம் அளிக்கும் புதுப்புது வசதிகள் மட்டுமே ஆகும். அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்திள்ள சேவைதான் ஜிமெயிலின் பேக்ரவுண்டை நமதுவிருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை நாமே அலங்கரிக்க முடியும்.

முதலில் மின்னஞ்சல் பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Settings என்னும் சுட்டியை அழுத்தவும். தோன்றும் விண்டோவில் Themes என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Create your own theme என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வேண்டிய லிங் கலர், டெக்ஸ்ட் கலர் போன்றவற்றை தேர்வு செய்யவும்.


கீழே தோன்றும் வரிசையை தேர்வு செய்து, வேண்டிய படத்தையும் பேக்ரவுண்டில் அமைத்துக்கொள்ள முடியும்.


Picasa வில் உள்ள படத்தை பேக்ரவுண்டாக அமைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்முடைய கணினியில் உள்ள படத்தையும் பேக்ரவுண்டாக அமைத்துக்கொள்ள முடியும். கடைசியாக Save பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். இந்த முறையை பின்பற்றி உங்களுடைய ஜிமெயில் கணக்கினை நீங்களே அழகுபடுத்த முடியும்.

ஆடியோ பைல்களை வீடியோ பார்மெட்டாக மாற்றம் செய்ய - RealA2V

♠ Posted by Kumaresan R in ,
ஆடியோ பைல் பார்மெட்களாகிய WAV, MP3,WMA, AAC, AC3, FLAC, M4A, MKA , MP2, OGG, RA , AIF, AIFF, AIFC, AU போன்ற பைல் பார்மெட்களிலேயே ஆடியோக்களை கேட்டிருப்போம். இதற்கு பதிலாக ஆடியோக்களை வீடியோ பைலாக கன்வெர்ட் செய்ய முடியும். ஒரு புகைப்படத்தை பாடல் முழுவதும், பேக்ரவுண்டில் ஒட விட முடியும். நாம் சாதரணமாக ஆடியோ பைல்களை வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்க முடியும். அதற்கு பதிலாக ஆடியோ பைல்களை ஒளி வடிவில் பெற்றால் எப்படி இருக்கும். அதற்கு உதவும் மென்பொருள்தான் RealA2V ஆகும். இந்த மென்பொருளுடைய வசதியின் மூலமாக கன்வெர்ட் செய்யப்படும் வீடியோ பைலினை முகநூல் (Facebook), யூடியூப் போன்ற தளங்களில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் ஆடியோ பைலை தேர்வு செய்யவும். பின் வேண்டிய இமேஜ்யை தேர்வு செய்யவும். உங்களுக்கு பிடித்தமான இமேஜ்யை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். பின் Convert பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வீடியோ பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். சில நொடிகளில் உங்களுடைய ஆடியோவானது வீடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட்டிருக்கும். 

இந்த மென்பொருளின் உதவியுடன் மிக விரைவாக ஆடியோவினை, வீடியோவாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய - authorPOINT Lite

♠ Posted by Kumaresan R in ,,
பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும்  கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, டவுண்லோட் லிங்கை அழுத்தி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு  மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Import என்னும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பவர்பாயிண் பைலை தேர்வு செய்யவும். தனியொரு பைலாக இருந்தாலும் சரி மொத்தமாக கோப்பறையாக இருப்பினும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். அடுத்து Import Now என்னும் பொத்தானை அழுத்தவும். சில மணிநேரங்களில் உங்களுடைய பவர்பாயிண்ட் பைலானது ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும். 

கன்வெர்ட் செய்யப்பட்ட பைல்களை My Documents > authorGEN Projects என்ற கோப்பறையில் சென்று காண முடியும். இந்த வெளியீடு இடத்தை மாற்றம் செய்ய Tools > Option என்னும் வரிசையை தேர்வு செய்யவும். பின் Change என்ற பொத்தானை அழுத்தி வெளியீட்டு இடத்தை மாற்றிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல் பார்மெட்களான (.ppt, .pps,.pptx and .ppsx) லிருந்து ப்ளாஷ் (.swf) பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். இந்த வசதியினை பவர்பாயிண்டில் இருந்தபடியே பெற முடியும். பவர்பாயிண்டில் இருந்து ப்ளாஷ் பைலாக கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ, இமேஜ் போன்றவற்றின் தரம் குறையாமல் இருக்கும். இந்த மென்பொருளில் இருந்து கன்வெர்ட் செய்யப்படும் பைல்கள் index.html என்று சேமிக்கப்பட்டு இருக்கும். அதனை உலவியின் துணைக்கொண்டு  பார்க்க முடியும்.

F-Secure 2011 ஆண்டிவைரஸ் 6மாதம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். அல்லது ஆண்டிவைரஸ் மென்பொருளை மேம்படுத்தாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் தான் தற்போது F-Secure ஆண்டிவைரஸ் மென்பொருளானது தற்போது 6 மாத இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் (Facebook) பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். Like பொத்தானை அழுத்தியவுடன் முகப்புதிரையானது விலகும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் நாட்டினை தேர்வு செய்யவும். இந்தியாவாக இருந்தால் (INDIA) என்பதை தேர்வு செய்து Submit பொத்தானை அழுத்தவும். உங்களுக்கான கடவுச்சொல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும்.அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை ஒப்பன் செய்து, புதியதாக வந்துள்ள மின்னஞ்சலை ஒப்பன் செய்யவும். அதில் லைசன்ஸ் கீ மற்றும். ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி, லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்களுடைய கணினியில் முழுமையாக பதிந்து கொள்ளவும்.


இந்த லைசன்ஸ் கீயினை கொண்டு F-Secure இண்டர்நெட் செக்கியூரிட்டியை 6 மாதம் வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளானது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டிவைரஸ் மென்பொருள் ஆகும். இண்டர்நெட் தொடர்பான அனைத்து மால்வேர்களையும் கட்டுபடுத்த முடியும். ஸ்பைவேர்கள் நம்கணினியில் இருந்து தகவல்களை திருடாமல் இருக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. வைரஸ், மால்வேர் தொடர்புடைய வெப்சைட்களையும் இந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் முடக்குகிறது.

Wondershare Disk Manager மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
கணினியில் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுவது வன்தட்டாகும், இந்த வன்தட்டானது ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் முன்வரை ஒரே பகுதியாக இருக்கும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும்போதுதான் இதனை நாம் தனித்தனி பகுதியாக பிரிப்போம். ஒரு சில நேரங்களில் வன்தட்டினை தனியொரு பகுதியாக பிரிகாமல் ஒரே பகுதியாக வைத்துவிடுவோம். இதனால் பின்புதான் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும். நாம் அனைத்து தகவல்களையும் ஒரே பகுதியில் தான் சேமிக்க வேண்டும். நம்முடைய கணினியில் மற்றொரு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமென்றாலும் பிரச்சினை அப்போதுதான் வழுப்பெறும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில் நம் கணினியினுடைய வன்தட்டினை பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதனை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடனே செய்ய முடியும். Disk Management என்னும் வசதியை பயன்படுத்தி விண்டோசில் வன்தட்டினை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பின்னரும் செய்ய முடியும். ஆனால் ஒரு சில வசதிகளை முழுமையாக பெற முடியாது. ஆனால் Wondershare Disk Manager என்னும் மென்பொருள் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற முடியும். தற்போது இந்த மென்பொருளானது இலவசமாக கிடைகிறது.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, Get Keycode என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய மின்னஞ்சலை ஒப்பன் செய்து, புதியதாக வந்துள்ள ஈமெயிலை ஒப்பன் செய்யவும். அதில் உங்களுடைய கணக்கினை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அடுத்த சில நொடிகளில் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது மின்னஞ்சல் மூலமாக பெற முடியும். இந்த இலவச கீயை நீங்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். ஒரு நாளைக்கு 300 கீயினை இந்த நிறுவனம் இலவச வழங்குகிறது. அடுத்ததாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் மின்னஞ்சலில் உள்ள ஈமெயில் முகவரி மற்றும் கீயை காப்பி செய்து ரிஸிஸ்டர் விண்டோவில் தோன்றும் பாக்சில் பேஸ்ட் செய்துகொண்டு, மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை பார்மெட், காப்பி, டெலிட் செய்ய முடியும். மேலும் ஒரு பகுதியினை உடைத்து பல்வேறு பகுதியாகவும் உருவாக்க முடியும். பைல் பார்மெட்டினை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். பகுதியைனை மீட்டெடுக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மற்றுமொரு வசதி என்னவெனில் பகுதியினை மறைத்து வைத்துக்கொள்ளவும் முடியும். மேலும் பல்வேறு வசதிகளை இந்த மென்பொருளின் உதவியுடன் பெற முடியும்.

பூட்டபிள் விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க

♠ Posted by Kumaresan R in ,,
கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணிப்பொறியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் பெண்ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுவது என்று வினவினார். இதோ அதற்கான பதில்.

முதலில் Windows 7 USB/DVD Download tool என்ற மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டிபின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Source file என்ற இடத்தில் விண்டோஸ்7 இமேஜ் பைலை தேர்வு செய்யவும். குறிப்பு ISO பைலாக மட்டுமே இருக்க வேண்டும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device என்பதை தேர்வு செய்யவும். DVD யில் பூட்டபிள் பைலை உருவாக்க வேண்டுமெனில் DVD என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device னை தேர்வு செய்துகொண்டு Begin copying என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்து சில நொடிகளில் ப்ளாஷ்ட்ரைவில் பைல்கள் காப்பி செய்யப்படும். பைல்கள் அனைத்தும் முழுமையாக காப்பியாகும் வரை காத்திருக்கவும்.


அவ்வளவுதான் உங்களுக்கான பூட்டபிள் பெண்ட்ரைவ் தயாராகிவிட்டது. இதை பயன்படுத்தி நீங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இனி கணினியில் எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும்.

ட்ரைவர்களை இலவசமாக அப்டேட் செய்ய - DriverMax இலவச கணக்கு

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு உயிர்நாடி ட்ரைவர் ஆகும். இதனை நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய உடனே ட்ரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வாறு நிறுவினால் மட்டுமே நம்முடைய கணினியில் முழுமையாக பனியாற்ற முடியும். இல்லையெனில் பல தொந்தரவுகள் ஏற்படும் ஆடியோ இயங்காது, வீடியோ பைல்களை சரிவர பார்க்க இயலாது. போன்ற பல்வேறு பிரச்சினைகள் நமக்கு ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகள் ட்ரைவர்கள் புதுப்பிக்கபடாமல் இருந்தாலும் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில், ட்ரைவர்களை மேம்படுத்த வேண்டும். ட்ரைவர்களை புதியதாக விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ட்ரைவர்களை மேம்படுத்த வேண்டும். இணையத்தில் இருந்து நாம் ட்ரைவர்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கும் பணம் செலுத்த வேண்டும். தற்போது DriverMax என்ற நிறுவனம் ட்ரைவர்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு நாம் ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இலவச கணக்கை உருவாக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Activare full version என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே உங்கள் மின்னஞ்சலை ஒப்பன் செய்யவும். புதியதாக ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து கணக்கை உறுதிபடுத்தும் சுட்டியை அழுத்தி கணக்கை உறுதிபடுத்தவும். அந்த மின்னஞ்சலிலேயே DriverMax Pro  க்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் இருக்கும். அதனை குறித்துக்கொள்ளவும். இந்த இலவச கணக்கை நீங்கள் 11 ஏப்ரல் 2011 வரை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது. அடுத்து DriverMax மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Driver downloads and info என்னும் வரிசையில் உள்ள Check online for driver updates என்னும் தேர்வினை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Yes I agree என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் படிமுறைகளில் விவரங்களை உள்ளிடவும். கடைசியாக மின்னஞ்சலில் இருக்கும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அவ்வளவுதான் DriverMax கணக்கு முழுமையாக உருவாக்கப்பட்டு விடும்.


இப்போது உங்களுடைய கணினி சோதிக்கப்பட்டு ட்ரைவர்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய ட்ரைவர்களை இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். ட்ரைவர்களை அப்டேட் செய்ய முன்பெல்லாம் பணம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அப்டேட் செய்ய முடியும். ஆனால் இனி அவ்வாறு இல்லை, இந்த முறையை பயன்படுத்தி இலவசமாக விரும்பிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

Panda Cloud ஆண்டிவைரஸ் 6மாத இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in
கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். அல்லது ஆண்டிவைரஸ் மென்பொருளை மேம்படுத்தாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் தான் தற்போது Panda Cloud ஆண்டிவைரஸ் மென்பொருளானது தற்போது 6 மாத இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் முகப்புதிரை விலகும், அடுத்ததாக Download NOW என்னும் பொத்தானை அழுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அடுத்ததாக டவுண்லோட் செய்யப்பட்ட மென்பொருளை கணினியில் நிறுவவும்.


அடுத்த சில நொடிகளில் சில பைல்கள் டவுண்லோட் செய்யப்பட்டு, மென்பொருளானது கணினியில் முழுமையாக நிறுவப்பட்டு விடும். இறுதியாக Panda Cloud Anti-Virus Pro ஆக்டிவேட் செய்யவா என்ற ஒரு செய்தி வரும். அதை ஒகே செய்துவிடவும். பின் மென்பொருளானது கணினியில் முழுமையாக நிறுவப்பட்டுவிடும்.


இந்த மென்பொருளின் சந்தைவிலையானது $29.95 ஆகும். இந்த விலையானது ஒரு பயனருக்கான மென்பொருளின் சந்தை விலையாகும். இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கென தனியொரு லைசன்ஸ் கீ எதுவும் இந்த பதிப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த மென்பொருளானது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டிவைரஸ் மென்பொருள் ஆகும்.