தமிழில் கணினி செய்திகள்

கணினியை காக்க - Advanced System Care

♠ Posted by Kumaresan R in , at 6:03 AM
கணினி பயன்பாடானது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது, கணினியை பயன்படுத்த தொடங்கிய நாள் முதலாக இன்றுவரை கணினி வளர்ச்சியில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளது கணினிஉலகம். அந்தவகையில் தற்போது கணினி வளர்ச்சியானது உச்சத்தை அடைந்துள்ளது. தொடர்ச்சியாக வெளிவரும் வன்பொருள் மற்றும் அதனோடு சார்ந்து பயன்படுத்தக்கூடிய மென்பொருள்கள் இவற்றின் பங்கினாலேயே கணினி வளர்ச்சி அடைந்துவிட்டது என்று கூற முடியாது, இணையமும் ஒரு காரணம் ஆகும். இந்த வளர்ச்சியினால் தினமும் கணினி பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினை ஒன்று, இரண்டு இல்லை பல பிரச்சினைகள் ஆகும். ஒரு கணினியில் என்னத்தான் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தாலும். அந்த கணினியில் கோளாருகள் ஏற்படாமல் இருக்காது. அதுவும் இணைய இணைப்பு இருப்பின் அந்த கணினியில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும்.


தீடிரென கணினியில் கன்ட்ரோல் பேனல் செயல்படாது, விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பிரச்சினை, சில சமயம் விண்டோஸ் முடக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதற்கு காரணம், இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களை, இந்த மென்பொருள் எதற்கு என்று தெரியாமலேயே கணினியில் பதிந்து கொள்வது. ஆனால் அந்த மென்பொருளை நிறுவிய நாள் அன்று மட்டுமே பயன்படுத்துவோம். பின் அப்படி ஒரு மென்பொருள் நம்முடைய கணினியில் இருப்பதையே மறந்து விடுவோம். ஒரு சிலர் மென்பொருள்களை நிறுவவும் பின் அந்த மென்பொருள்களை கணினியை விட்டு நீக்கவும் செயவார்கள். இதனால் கணினி இயக்க வேகத்தில் தடைபடுவதோடு, கணினியே சில நேரங்களில் முடக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க கணினியை அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு உதவும் மென்பொருள் தான் கணினியில் மருத்துவர் Advanced System Care.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் கணினியில் பிரச்சினை இருந்தால் அது எந்த வகை பிரச்சினை என்று தேர்வு செய்து அந்த கோளாரினை சரிசெய்து கொள்ளவும். இல்லையெனில் கணினியை முழுவதுமாக ஸ்கேன் செய்து கணினியில் உள்ள அனைத்து கோளாருகளையும் சரிசெய்து கொள்ள முடியும்.


விண்டோஸில் ஏற்படும் பிரச்சினைகளையும் இந்த மென்பொருளின் உதவியுடன் சரிசெய்து கொள்ள முடியும். கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்குவதில் இருந்து விண்டோஸில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதுவரை அனைத்து விதமான பிரச்சினைகளை நீக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை சீரமைக்கவும் முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

3 comments:

உங்கள் பதிவுகளை படித்து பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன். பின்னூட்டங்கள் இடாவிடினும் எப்போதும் ஓட்டுகளை இட தவற மாட்டேன்.
எனக்கு பிடித்த ப்ளாகரில் இதுவும் ஒன்று. நன்றி.

நன்றி கக்கு-மாணிக்கம்,

நண்பரே வணக்கம் ,
நல்ல பகிர்வு அருமை ..பயனுள்ள பதிவு
நட்புடன் ,
கோவை சக்தி

Post a Comment