தமிழில் கணினி செய்திகள்

Flash, MP4 வீடியோ கன்வெர்ட்டர்கள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in , at 4:12 PM
வீடியோக்களை கன்வெர்ட் செய்ய உதவும் மென்பொருட்கள் சந்தையில் நாள்தோறும் வந்து கொண்டே உள்ளன. இதுபோன்ற மென்பொருள்கள் யாவும் விலை கொடுத்தே வாங்க வேண்டும். பணம் செலுத்தி பெற முடியாதவர்கள். இலவசமாக இணையத்தில் தேடி பெற முடியும். ஆனால் நாம் அவ்வாறு இணையத்தை சல்லடையாய் சளித்து பார்த்தாலும் சரியான மென்பொருள் ஒன்றும் அகப்படாது. என்னடா இது நம்ம நேரமா என்று நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டியதுதான். நம்மிடம் இருக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது நம்முடைய கணினியில் இயங்காது. இல்லையெனில் மொபைல் போனில் இந்த வீடியோ பைல் பார்மெட் இயங்காது என்ற செய்தி ஒன்று வரும். இந்த வீடியோவை எப்படியாவது கன்வெர்ட் செய்துவிட வேண்டுவிட வேண்டும். என்று இணையத்தில் நுழைந்து மென்பொருளை தேடுவோம் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும் கிடைக்கும் மென்பொருள்கள் யாவும் சரியான முறையில் இயங்காது, ஒவ்வொரு மென்பொருளிலும் எதாவது ஒரு குறை இருக்கும். கடைசியில் மென்பொருள்களை பணம் செலுத்தி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்படுவோம். ஒரு சில நேரங்களில் இதுபோன்ற மென்பொருள்கள் இலவசமாய் கிடைக்கிறன. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி மென்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள்களுக்கான லைசன்ஸ் கீயானது இதே சுட்டியிலேயே உள்ளது. அந்த கீகளை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். மேலும் இந்த இரண்டு மென்பொருள்களும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய சிறந்தொரு மென்பொருள்கள் ஆகும்.Flash வீடியோ கன்வெர்ட்டரின் சந்தை மதிப்பு $29.95, MP4 வீடியோ கன்வெர்ட்டரின் சந்தை மதிப்பு $24.95 ஆகும். இந்த இரண்டு வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்களும் ஏப்ரல் 20, 2011 வரை மட்டுமே இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். MP4 வீடியோ கன்வெர்ட்டர் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்கள் DivX, XviD, MPEG, MOV, MPG, MOD, QuickTime, RM, rmvb, 3GP, 3G2, SWF, GIF, DV, MJPEG, VOB, WMV, ASF, AVI, MPEG மற்றும் பல வீடியோ பைல் பார்மெட்கள் ஆகும். Flash வீடியோ கன்வெர்ட்டர் இணைய வீடியோவை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும். மொத்தத்தில் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இந்த மென்பொருள்கள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த இரண்டு மென்பொருள்களை பயன்படுத்துவதும் மிகவும் எளிமையான ஒன்றாகும்.

1 comments:

Post a Comment