தமிழில் கணினி செய்திகள்

F-Secure 2011 ஆண்டிவைரஸ் 6மாதம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in , at 9:45 PM
கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். அல்லது ஆண்டிவைரஸ் மென்பொருளை மேம்படுத்தாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் தான் தற்போது F-Secure ஆண்டிவைரஸ் மென்பொருளானது தற்போது 6 மாத இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் (Facebook) பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். Like பொத்தானை அழுத்தியவுடன் முகப்புதிரையானது விலகும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் நாட்டினை தேர்வு செய்யவும். இந்தியாவாக இருந்தால் (INDIA) என்பதை தேர்வு செய்து Submit பொத்தானை அழுத்தவும். உங்களுக்கான கடவுச்சொல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும்.அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை ஒப்பன் செய்து, புதியதாக வந்துள்ள மின்னஞ்சலை ஒப்பன் செய்யவும். அதில் லைசன்ஸ் கீ மற்றும். ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி, லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்களுடைய கணினியில் முழுமையாக பதிந்து கொள்ளவும்.


இந்த லைசன்ஸ் கீயினை கொண்டு F-Secure இண்டர்நெட் செக்கியூரிட்டியை 6 மாதம் வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளானது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டிவைரஸ் மென்பொருள் ஆகும். இண்டர்நெட் தொடர்பான அனைத்து மால்வேர்களையும் கட்டுபடுத்த முடியும். ஸ்பைவேர்கள் நம்கணினியில் இருந்து தகவல்களை திருடாமல் இருக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. வைரஸ், மால்வேர் தொடர்புடைய வெப்சைட்களையும் இந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் முடக்குகிறது.

2 comments:

பேருல லினக்ஸ்ன்னு வச்சிக்கிட்டு எதுக்குப்ப ஆண்டி வைரஸ், சாமியார் வைரஸ் எல்லாம், இவனுங்க ஆறு மாசம் குடுத்தா அடித்து எங்கே போறது? அந்தக் கருமாந்திரத்தை தூக்கி போட்டுவிட்டு லினக்ஸ் பயன்படுத்தச் சொல்லி ரெக்கமண்டு பன்னுப்பா, வைரஸ்சும் வராது, பாட்டீரியாவும் வராது.

நண்பரே லினக்ஸ் பற்றி நண்பர்கள் நிறைய சொல்கிறார்கள், யாரும் அதை பற்றி கண்டுகொள்வதே இல்லை, இது உங்களுக்கும் தெரியும்.

இலவசமாக ஆறுமாதம், ஒருவருடம் தான் கொடுக்க முடியும். பணம் கொடுக்காமேயே எவ்வளவு நாள்தான் வண்டிய ஒட்றது.

Post a Comment