தமிழில் கணினி செய்திகள்

Wondershare Disk Manager மென்பொருளை இலவசமாக லைசன்ஸ் கீயுடன் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in , at April 12, 2011
கணினியில் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுவது வன்தட்டாகும், இந்த வன்தட்டானது ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் முன்வரை ஒரே பகுதியாக இருக்கும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும்போதுதான் இதனை நாம் தனித்தனி பகுதியாக பிரிப்போம். ஒரு சில நேரங்களில் வன்தட்டினை தனியொரு பகுதியாக பிரிகாமல் ஒரே பகுதியாக வைத்துவிடுவோம். இதனால் பின்புதான் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும். நாம் அனைத்து தகவல்களையும் ஒரே பகுதியில் தான் சேமிக்க வேண்டும். நம்முடைய கணினியில் மற்றொரு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமென்றாலும் பிரச்சினை அப்போதுதான் வழுப்பெறும். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமெனில் நம் கணினியினுடைய வன்தட்டினை பகுதிகளாக பிரிக்க வேண்டும். இதனை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடனே செய்ய முடியும். Disk Management என்னும் வசதியை பயன்படுத்தி விண்டோசில் வன்தட்டினை ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பின்னரும் செய்ய முடியும். ஆனால் ஒரு சில வசதிகளை முழுமையாக பெற முடியாது. ஆனால் Wondershare Disk Manager என்னும் மென்பொருள் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற முடியும். தற்போது இந்த மென்பொருளானது இலவசமாக கிடைகிறது.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, Get Keycode என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய மின்னஞ்சலை ஒப்பன் செய்து, புதியதாக வந்துள்ள ஈமெயிலை ஒப்பன் செய்யவும். அதில் உங்களுடைய கணக்கினை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அடுத்த சில நொடிகளில் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது மின்னஞ்சல் மூலமாக பெற முடியும். இந்த இலவச கீயை நீங்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். ஒரு நாளைக்கு 300 கீயினை இந்த நிறுவனம் இலவச வழங்குகிறது. அடுத்ததாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் மின்னஞ்சலில் உள்ள ஈமெயில் முகவரி மற்றும் கீயை காப்பி செய்து ரிஸிஸ்டர் விண்டோவில் தோன்றும் பாக்சில் பேஸ்ட் செய்துகொண்டு, மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை பார்மெட், காப்பி, டெலிட் செய்ய முடியும். மேலும் ஒரு பகுதியினை உடைத்து பல்வேறு பகுதியாகவும் உருவாக்க முடியும். பைல் பார்மெட்டினை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். பகுதியைனை மீட்டெடுக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மற்றுமொரு வசதி என்னவெனில் பகுதியினை மறைத்து வைத்துக்கொள்ளவும் முடியும். மேலும் பல்வேறு வசதிகளை இந்த மென்பொருளின் உதவியுடன் பெற முடியும்.

0 comments:

Post a Comment