வேர்ட் கோப்பினை நாம் பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய பல மென்பொருட்களை இதுவரை பயன்படுத்தி இருப்போம் ஆனால் எந்த மென்பொருளும் சரியானதாக இருக்காது. பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்தாலும் அதனுடைய பார்மெட் மாறியிருக்கும். ஒரு சில பிடிஎப் கன்வெர்ட்டர்கள் பணம் செலுத்தி மட்டுமே பெற முடியும். இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்பானதாக இல்லை. அவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் ஒரு சில மென்பொருட்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு லைசன்ஸ் கீ கேட்கும் இல்லையெனில் ஒழுங்காக வேலை செய்யாது. இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் டாக்குமெண்ட் பைலை கன்வெர்ட் செய்துகொள்ள Sonic PDF Creator என்ற மென்பொருள் இலவச லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது .
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த பேஸ்புக் லிங்கிற்கு சென்று, உங்களுடைய பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்நுழையவும். பின் மேலே உள்ள Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும். செய்தவுடன் முகப்புதிரையானது விலகும். அடுத்ததாக உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Send me keycode என்ற பொத்தானை கிளிக் செய்யவும். உடனே உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்கு கீ மற்றும் தரவிறக்க சுட்டி இரண்டும் அனுப்பிவைக்கப்படும். அதை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிஸ் தொகுப்பிற்க்கு மிகவும் சிறந்ததாகும். டாக்குமெண்ட்டை பிரிண்ட் செய்யும் போது Sonic PDF என்பதை தேர்வு செய்து பிரின்ட் செய்யவும் உடனே பைலை எங்கு சேவ் செய்யட்டும் என்று ஒரு விண்டோ தோன்றி கேட்கும், பைல் நேம் மற்றும் இடத்தை குறிப்பிட்டுவிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். உடனே பிடிஎப் பைலானது உருவாகிவிடும்.
0 Comments:
Post a Comment