♠ Posted by Kumaresan Rajendran in Conversion,Mozila Firefox at February 11, 2011
இன்றைய நிலையில் பல்வேறு விதமான இணையதளங்கள் உள்ளன. ஒருவரை பற்றிய சொந்த தகவலினை மற்றவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ பறிமாறிக்கொள்ள இன்று இணையதளம்தான் பயன்படுகிறது. ஒரு கம்பெனியை பற்றி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கும். இன்றைய காலக்கட்டத்தில் இணையதளம்தான் பயன்படுகிறது. புதிதுபுதிதாய் இணையதளங்கள் தோன்றிய வன்னமே உள்ளது. முதலில் ஆயிரக்கணக்கில் இருந்த இணையதளங்கள் தற்போது என்ன முடியாத அளவிற்கு உள்ளது. இவ்வாறு உள்ள இணையதளங்கள் அனைத்துமே எழுத்து மற்றும் படங்களினால் ஆனது. ஒரு கருத்தினை எளிமையாக புரிந்துகொள்ள புகைப்படம் பயன்படுகிறது. எழுத்து அது நீண்டு கொண்டே செல்லும். இவ்வாறு இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையுமே படிக்க முடியாது. ஒரு சில குறிப்பிட்ட எழுத்துகளை மட்டுமே படிக்க முடியும். இதற்கு பதிலாக அந்த இணையதள எழுத்துக்களை பிரின்ட் எடுக்க முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க எழுத்துக்களை ஒலியாக மாற்றிக்கொள்ள முடியும். ஒலியாக மாற்றிக்கொள்ள நெருப்புநரி உளவிக்கு நீட்சி ஒன்று உள்ளது.
டெக்ஸ்ட் To வாய்ஸ்க்கான நீட்சி
இந்த நீட்சியினை உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது வலைப்பக்கம் ஒன்றை நெருப்புநரி உளவியின் மூலமாக திறக்கவும். நெருப்புநரி உளவியின் அடிப்பகுதியில் எழுத்திலிருந்து ஒலியாக மாற்றுவதற்கான ஆப்ஷன் இருக்கும். எந்த எழுத்துக்களையெல்லாம் ஒலியாக மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்து இந்த பட்டனை அழுத்தினால் போது எழுத்தானது ஒலியாக மாற்றம் செய்யப்பட்டு டவுண்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும். அதனை பயன்படுத்தி நீங்கள் டவுண்லோட் செய்துகொள்ள முடியும்.
இவ்வாறு பதிவிறக்கும் ஒலியானது .mp3 பார்மெட்டில் இருப்பதால் நாம் இதனை எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். செல்போனில் பதிவேற்றம் செய்தும் கேட்டுக்கொள்ள முடியும். எப்போதும் இணையத்தில் பரபரப்பாக செயலாற்றுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப்பெரிய பகுதியாக உள்ள எழுத்து தொடர்களை இவ்வாறு மாற்றம் செய்து கேட்டுக்கொள்ள முடியும். இதனால் நேரம் மிச்சம் ஆகும். கண்பார்வையற்றவர்ளிடம் இணையத்தில் உள்ள செய்தியினை இந்த வசதியின் மூலம் கொண்டு சேர்க்க முடியும். என்ன ஒரு பிரச்சினை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முக்கியமான குறிப்பு ஆங்கில எழுத்துக்களை மட்டுமே ஒலியாக மாற்றம் செய்து கொள்ள முடியும்.
1 Comments:
நல்ல தகவல் நன்றி நண்பரே
Post a Comment