தமிழில் கணினி செய்திகள்

மறக்கமுடியுமா விண்டோசின் பழைய பெயின்டை

♠ Posted by Kumaresan R in , at 9:49 PM
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய பெயின்ட் பார்மெட்டினை மட்டும் யாராலும் மறக்கவே முடியாது. புதியதாக கணினி கற்க வருபவர்கள் முதலில் கற்றுக்கொள்வது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயின்ட் ஆகும். கணினியினை பயன்படுத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்தது பெயின்ட் ஆகும். ஒரு சில முக்கியமான தருணங்களில் புகைப்படங்களை எடிட் செய்யவும் பெயின்ட் உதவும். இதனை யாராலும் மறுக்கவே முடியாது. அப்படிபட்ட பெயின்ட்டினை புதியதாக அண்மையில் வெளிவந்துள்ள விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டத்தில் சற்று மெருகேற்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பெயின்ட் அப்ளிகேஷனை புதிய பரிமாணத்தில் பயன்படுத்த பலருக்கும் விருப்பம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்காவே பெயின்டின் பழைய தன்மைகளுடன் ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இதனை கணினியில் நிறுவிக்கொள்ளவும்.  இந்த மென்பொருளானது இலவச (Freeware) மென்பொருளாகும். அளவில் மிகவும் சிறியதாகும். மொத்தமாக சொல்ல வேண்டுமெனில் இந்த அப்ளிகேஷன் ஆனது விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் எக்ஸ்பியில் பெயின்ட் கண்முன்னே கொண்டுவரும். பழையனவற்றை மறக்க முடியாதவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

7 comments:

மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.

உங்களின் வருகை எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

Lakshmi, மதுரை சரவணன் , தங்கராசு நாகேந்திரன்,
Lucky Limat லக்கி லிமட், டக்கால்டி.,

Post a Comment