தற்போது அனைத்து விதமான டாக்குமெண்ட்களும். பிடிஎப் பைல்களாவே உள்ளது. பிடிஎப் பைல்களை யாரும் எடிட் செய்ய முடியாது என்பற்காவே இதனை நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது இந்த பிடிஎப் பைல்களை எடிட் செய்ய பல்வேறு விதமான மென்பொருட்கள் சந்தையில் உள்ளது. நாம் ஆப்பிஸ் மென்பொருட்களின் துணையுடன் ஒரு டாக்குமெண்டை உருவாக்குவோம். ஆனால் அதை பலரும் பிடிஎப் பைலக்ளாவே சேமித்து பயன்படுத்தி வருவோம். நாம் ஆப்பிஸ் டாக்குமெண்டை உருவாக்கும் போதே வாட்டர்மார்க்கையும் உருவாக்க முடியும். ஆனால் அவ்வாறு உருவாக்கும் வாட்டர்மார்க்கை எடிட் செய்து கொள்ள முடியும். அதனால் பிடிஎப் பைல்களை மற்றவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் வாட்டர்மார்க் உருவாக்காமல் இருக்கும் பிடிஎப் பைல்களுக்கும் வாட்டர்மார்க்கினை உருவாக்க முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த Batch PDF Watermark உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Batch PDF Watermark அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் எந்த பிடிஎப் பைல்களுக்கு வாட்டர்மார்க் உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொண்டு, Text Watermark என்பதை தேர்வு டெக்ஸ்டை உள்ளிட்டு கலர் மற்றும் அளவினை தேர்வு செய்து, Start Processing என்ற பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட பிடிஎப் பைலுக்கு வாட்டர்மார்க் உருவாக்கப்படிருக்கும். டெக்ஸ்ட் வாட்டர்மார்க் உருவாக்குவது போல இமேஜ் வாட்டர்மார்க்கும் உருவாக்க இந்த மென்பொருளில் வசதி உள்ளது. அதை பயன்படுத்தி இமேஜ் வாட்டர்மார்க்கினையும் உருவாக்கி கொள்ள முடியும்.
இந்த பிடிஎப் பைல் வாட்டர்மார்க் வசதியுடன், இனி பிடிஎப் பைலகளுக்கு எளிமையாக வாட்டர்மார்க்கினை உருவாக்கி கொள்ள முடியும். நம்முடைய டாக்குமெண்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை, இதன் மூலம் தடுக்க முடியும்.
2 Comments:
சிறந்த பதிவு...
நன்றி அருண்,
Post a Comment