தமிழில் கணினி செய்திகள்

செஸ் விளையாட்டு

கணினியில் அனைத்து விளையாட்டுளையும் இலவசமாக இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பயன்படுத்துவோம். அதுபோல செஸ் விளையாட்டும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் நாம் இதனை அப்ளிகேஷனாக பயன்படுத்தபோவது இல்லை. குரோம் உலவியின் துணையுடன் இந்த விளையாட்டை விளையாட போகிறோம். செஸ் விளையாட்டில் அனைவரும் விஸ்வனாதன் ஆனந்தனாக இருக்கவே ஆசைப்படுவோம். ஏனெனில் செஸ் விளையாட்டில் கொடிகட்டி பறக்க கூடியவர் அவரே. அவருக்கு நிகரானவர் யாரும் இல்லை என்றுதான் கூறமுடியும். வீட்டில் போரடிக்கும் போது அனைவரும் விளையாட நினைப்பது செஸ், கேரம் ஆகும். இதில் புகழ்பெற்ற விளையாட்டு செஸ் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டை நாம் குரோம் உலவியில் இணைத்து விளையாட முடியும்.

செஸ் விளையாட்டிற்கான சுட்டி


இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் குரோம் உலவியை ஒப்பன் செய்து தோன்றும் விண்டோவில் Spark Chess என்னும் ஐகானை அழுத்தி விளையாட்டை ஒப்பன் செய்யவும்.


பின் விளையாட்டை விளையாட துவங்கவும். நீங்கள் இதில் நான்கு பேருடன் விளையாட முடியும். கணினியும் நீங்களும் விளையாடும் விளையாட்டு ஆகும். செஸ் விளையாட்டில் நான் ஒன்றும் புலி கிடையாது. எலி என்று வேணுமானால் சொல்லிக்கொள்ள முடியும். விளையாட்டை விளையாட்டாக விளையாடி பாருங்கள். இதனை நீங்கள் குரோம் உலவியில் பதிந்து பயன்படுத்த முடியும்.

துப்பாக்கி விளையாட்டு - குரோம் உலவியில்

இணைய பயன்பாடுகள் பெருகிகொண்டு வரும் இந்த நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து கொண்டே உள்ளன. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறன. அதேபோல் கூகுள் நிறுவனமும் குரோம் உலவியின் மூலமாக விளையாட்டுகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக குரோம் உலவியின் துணையுடன் விளையாட்டுகளை விளையாட முடியும். கூகுள் நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளை இலவசமாக தருகிறனர். அந்த வகையில் நாம் தற்போது பார்க்க இருக்கும் விளையாட்டுதான் Private Joe.

விளையாட்டிற்கான சுட்டி


இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது தோன்றும் விண்டோவில் Private Joe ஐகானை கிளிக் செய்து செய்து விளையாட்டை திறக்கவும். அல்லது இந்த சுட்டியை கிளிக் செய்து ஒப்பன் செய்யவும்.


இந்த விளையாட்டானது எதிரிகளை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது ஆகும். இந்த விளையாட்டில் மொத்தம் 8நிலைகள் உள்ளன. கீழே காணும் படத்தை போல ஒவ்வொரு நிலையை முடித்தவுடன் தோன்றும்.


இந்த விளையாட்டில் சுடுவதற்கு C பொத்தானையும், தாவுவதற்கு X யையும் நகர்ந்து செல்ல வலது மற்றும் இடது திசை பொத்தான்களையும் பயன்படுத்தவும். இந்த விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன அதனை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் துப்பாக்கி மட்டும் தான். இந்த விளையாட்டு அருமையாக உள்ளது. விளையாடி பாருங்கள்.

உண்டிவில் விளையாட்டு - (Angry Birds)

நான் வலைப்பூ ஆரபித்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இதுவரை நான் 250+ பதிவுகளுக்கு மேல் எழுதியுள்ளேன் இவையாவும் தொழில்நுட்ப பதிவுகள் ஆகும். இந்த வலைப்பூவில் எனக்கு தெரிந்த தொழிநுட்ப செய்திகளை மட்டுமே பகிர்ந்து வருகிறேன். அவ்வபோது வாசகர்களின் குழப்பங்களையும் நிவர்த்தி செய்து வருகிறேன் என்னால் முடிந்த வரை. நாம் வலைபூ எழுதுகிறோம் என்றால் எதோ சாதித்து விட்டோம் என்று சிலரது நினைப்பு அது முற்றிலும் தவறானது. சரி நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன். நான் இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தும் ஒரே மாதிரி உள்ளதாக நிறைய வாசகர்கள் பின்னுட்டம் மூலம் தெருவித்தனர். ஒரு சில சக வலைப்பூ நண்பர்களும் தெரிவித்தனர். அப்போதுதான் தோன்றியது நாம் என்னவோ ஒரே மாதிரியான பதிகளை எழுதிகிறோம் என்று. பின்பு முடிவு செய்தேன் இனி கூட்டுசுவையாக பதிவுகளை எழுத வேண்டும் என்று. அந்த வகையில் தற்போது ஒரு அருமையான விளையாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

விளையாட்டுகான சுட்டி


இந்த நீட்சியை கூகுள் குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். இந்த விளையாட்டானது குரோம் உலவியில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டை எக்ஸ்புளோரர், நெருப்புநரி உலவிகளிலும் விளையாட முடியும். ஆனால் குரோம் உலவியில் இந்த விளையாட்டை விளையாட ஏதுவாக பல்வேறு அம்சங்கள் உள்ளன. பின் உலவியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் விளையாட்டை துவக்கவும்.


இந்த விளையாட்டானது கிராமங்களில் விளையாடும் உண்டிவில் விளையாட்டு போன்றது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் வகையில் உள்ளது. குறிபார்த்து எறிந்து குறிப்பிட்ட எதிரியை அழிக்க வேண்டும். இதன் மூலம் விளையாட்டின் அடுத்தடுத்த நிலைக்கு நீங்கள் செல்ல முடியும். விளையாட்டானது மிகவும் அருமையாக உள்ளது. விளையாடி பாருங்கள் பின்பு உங்கள் பதிலை கூறுங்கள்.