தமிழில் கணினி செய்திகள்

பெரிய அளவுடைய கோப்புகளை வெட்ட மற்றும் ஒட்ட

♠ Posted by Kumaresan Rajendran in
அளவில் மிகப்பெரிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது இணையத்தில் பரிமாற்றம் செய்து கொள்வதோ அவ்வளவு சாதாரண செயல் இல்லை, இணைய இணைப்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அளவில் மிகப்பெரிய கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வது சாத்தியம், மிகப்பெரிய கோப்புகளை இணையம் வழியே பரிமாற்றம் செய்யும் போது தீடிரென இணையத்தில் கோளாரு ஏற்பட்டு பதிவேற்றமோ அல்லது பதிவிறக்கமோ தடைப்படக்கூடும். ஆனால் அளவில் சிறிய கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் அல்லது பதிவேற்றமோ செய்து விட முடியும். அதனால் மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பரிமாறிக்கொள்ளும் போது அதனை சுருக்கி அனுப்புவார்கள், அவ்வாறு சுருக்கும் போது மிகப்பெரிய கோப்புகள் அளவினை பெரிதாக சுருக்கிவிட முடியாது. இதற்கு பதிலாக மிகப்பெரிய கோப்புகளை துண்டு துண்டாக வெட்டி இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம். பின் மீண்டும் வெட்டிய கோப்புகளை இணைத்து கொள்ள முடியும். அதற்கு File Splitter & Joiner என்ற இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த File Splitter & Joiner அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Splitting என்னும் டேப்பினை தேர்வு செய்யவும். பின் Source File என்னும் வரிசையில் உள்ள பொதியை கிளிக் செய்து பெரிய அளவுடைய கோப்பினை தேர்வு செய்யவும். பின் Output directory என்னும் வரிசையில் உள்ள பொதியை கிளிக் செய்து பிரிக்கப்பட்ட கோப்புகள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை குறிப்பிட்டு பின் Split into என்னும் ஆப்ஷன் பட்டனை கிளிக் செய்து வேண்டியவாறு , கோப்பின் அளவிற்கேற்ப அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் Split after every என்ற ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து அதன் படி பிரிக்கப்பட வேண்டிய கோப்பின் அளவுகளை அமைத்து கொண்டு பின் Split என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு இருக்கும்.


பின் பிரித்த கோப்புகளை மீண்டும் இணைக்க அதே மென்பொருளை திறந்து Joining என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் First split part (.001,._a): என்னும் வரிசையில் உள்ள பொதியை அழுத்தி ஒட்டப்பட வேண்டிய கோப்புகளை தேர்வு செய்யவும். பின் Output file: என்னும் வரிசையில் உள்ள பொதியை அழுத்தி ஒட்டப்பட்ட கோப்புகள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை குறிப்பிடவும். அடுத்து Split parts are in different locations என்னும் செக்பாக்சை டிக் செய்து பின் Join என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது சேமிக்கப்பட்டு இருக்கும். பின் தோன்றும் விண்டோவில் Finish என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் கோப்புகள் இணைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வரும். பின் சேர்க்கப்பட்ட கோப்புகளை எடுத்து வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து நிறுவ

கணினி வல்லுனர் என்றால் கணிப்பொறி பற்றி முழுவதும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் புதுப்புது வளர்ச்சியை கணினிதுறை கண்டு வருகிறது. கணினி கண்டுபிடிக்க பட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்துவிட்டது. அந்த வகையில் ஒரு கணினி வல்லுனர் என்றால் நிச்சயம் இயங்குதளம் நிறுவ கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். இயங்குதளம் நிறுவுதல் என்றால் சாதாரணமாக விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுதல் மட்டுமே ஆகும். அதிலும் லினக்ஸ் இயங்குதளம் முன்பு நிறுவுதலை காட்டிலும் சற்று எளிதாக வந்துவிட்டது. விண்டோஸ் இயங்குதளம் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. கணினிக்கு புதியவராக இருந்தாலும் ஒரு மென்பொருளை நிறுவுதல் போன்று விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிவிட முடியும். அந்த அளவுக்கு எளிதாக வந்துவிட்டது நான் கூற வந்தது இயங்குதளம் நிறுவுதல் பற்றி அல்ல. ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை பூட் செய்வது எப்படி என்றுதான். 

இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வரும், கண்டிப்பாக முடியும் ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவ முடியும். அதுவும் விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை கூட்டாக ஒரே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

ஐஎஸ்ஒ பைல்களாக இருக்கும் இயங்குதள கோப்புகள் இருந்தால் மட்டுமே யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்ய முடியும். 

ஒரு காலத்தில் இயங்குதளங்களை நிறுவுதல் என்றால் சிடி/டிவிடி ட்ரைவுகளை பயன்படுத்தி மட்டுமே கணினி வல்லுனர்கள் நிறுவி வந்தனர். அது நாளடைவில் மாற்றம் அடைந்து தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் இயங்குதளங்களை நிறுவி வருகிறனர். முதலில் . லினக்ஸ் இயங்குதளங்களை யுஎஸ்பி ட்ரைவ் பயன்படுத்தி நிறுவுதல் மட்டும் இருந்தது. அதன்பின் விண்டோஸ் இயங்குதளத்தையும் யுஎஸ்பி ட்ரைவ் மூலம் நிறுவ மைக்ரோசாப்ட் நிறுவனமே அதற்கான மென்பொருளையும் இலவசமாகவே வழங்கியது. நாம் இந்த மென்பொருள்களை கொண்டு இதுவரை ஒரு யுஎஸ்பி ட்ரைவில் இருந்து ஒரு இயங்குதளத்தை மட்டுமே பூட் செய்து வந்து இருப்போம்.  குறிப்பிட்ட இயங்குதளங்களை பூட் செய்ய தனித்தனியே அப்ளிகேஷன்கள் தேவைப்படும். அவ்வாறு இல்லாமல் அனைத்து இயங்குதளங்களையும் பூட் செய்ய ஒரே மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி  ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் இணைத்துவிட்டு பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் யுஎஸ்பி ட்ரைவினை தேர்வு செய்யவும். பின்  உங்களுடைய இயங்குதளம் எது என தெரிவு செய்யவும். பின் இயங்குதளத்தின் இமேஜ் கோப்பினை தேர்வு செய்து விட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். 


சிறிது நேரம் இயங்குதளம் கணினியில் இருந்து யுஎஸ்பி ட்ரைவுக்கு பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி வரும்.


பின் Yes என்னும் பொதியை அழுத்தவும், மீண்டும் இயங்குதளத்தினை தேர்வு செய்து, பின் இயங்குதளத்திற்கான சரியான ஐஎஸ்ஒ கோப்பினை தெரிவு செய்து பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும்.


மீண்டும் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம்  பூட்டபிள் பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் யுஎஸ்பி ட்ரைவில் இயங்குதளம் உருவாக்கப்பட்டுவிட்டது, மற்றொடு இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் நிறுவ வேண்டுமா என்ற அறிவிப்பு செய்தி மீண்டும் வரும். அப்போது வேண்டுமெனில் மீண்டும் Yes பொத்தானை அழுத்தி அடுத்த இயங்குதளத்தை யுஎஸ்பி ட்ரைவில் இணைத்துக்கொள்ளவும். இல்லையெனில் No பொத்தானை அழுத்தவும். பின் இயங்குதளம் யுஎஸ்பி ட்ரைவில் பூட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். 


பின் வழக்கம் போல் பயாஸ் சென்று யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் செட் செய்து கொள்ளவும். யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகும் போது எந்த இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்று கேட்கும் அப்போது நாம் தெரிவு செய்யும் இயங்குதளம் நிறுவப்படும்.

இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் நம்முடைய இயங்குதளத்தின் அளவிற்கேற்ப யுஎஸ்பி ட்ரைவின் அளவும் இருக்க வேண்டும். விண்டோஸ் ஏழு, எட்டு இயங்குதளம் என்றால் 4 Gb லிருந்து அதற்கு மேல் அளவுடைய யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுத்தவும்.

வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வன்வட்டிலிருந்து மீட்டெடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினிகளுக்கிடைய தரவுகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள கோப்பறைகள் யாவும் ஸ்டார்கட் கோப்பாக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித பாதிப்பும் வராமலும் , கோப்புகளுக்கு எந்த வித சேதாரம் இல்லாமலும் மீட்டெடுக்க முடியும். 

இதனை நாம் எந்த வித மென்பொருள் துணையும் இன்றி விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும்.
ஸ்டார்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பின் இது போல் ட்ரைவுகள் காட்சியளிக்கும்.  பாதிக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் பொறுத்திவிட்டு, பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்து எந்த ட்ரைவ் என குறித்துவைத்துக்கொள்ளவும். 

பின் கமான்ட் பிராம்டை ஒப்பன் செய்யவும். விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். தோன்றும் விண்டோவில் CMD என்று தட்டச்சு OK பொத்தானை அழுத்தவும். 


பின் தோன்றும் விண்டோவில் cd\ என்று உள்ளிடவும்.

அடுத்து எந்த ட்ரைவோ அந்த ட்ரைவினை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். நான் E: என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே e: என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். உங்களுடைய ட்ரைவ் மாறுபடும்.

அடுத்து dir/ah என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது அந்த ட்ரைவில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும்.

அடுத்து attrib *. -h -s /s /d என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். என்டர் பொத்தானை அழுத்தியவுடன் கோப்புகளை தனியே பிரிக்கும் வேலை ஆரம்பம் ஆகும். 

இறுதியாக exit என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது காமான்ட் பிராம்ப்ட் மூடப்படும்.

இப்போது உங்களுடைய யுஎஸ்பி ட்ரைவினை திறந்து பார்க்கவும். அப்போது உங்களுடைய கோப்புகள் அந்த ஸ்டார்கட் கோப்பு வைரஸ்களிடம் இருந்து தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த முறையானது ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் தனியே பிரித்தெடுக்க முடியும்.இதே முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு கோப்பினை மட்டும் பிரித்தெடுக்க முடியும். அதற்கு attrib கமெண்ட் உள்ளிடும் போது கோப்பின் பெயரையும் சேர்த்து உள்ளிட்டால் போதுமானது. tcinfo.psd என்னும் போட்டோசாப் பைலை மட்டும் ட்ரைவில் இருந்து தனியே மீட்டெடுக்க வேண்டுமெனில்  attrib tcinfo.psd -r -a -s -h என்று உள்ளிடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு ட்ரைவில் இருக்கும் பட்சத்தில் கோப்பானது மீட்டெடுக்கப்படும்.

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் ஏழு இயங்குதளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக விண்டோஸ் எட்டு இயங்குதளம் உள்ளது. விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் கெஸ்ட் மற்றும் பயனர் கணக்கின் படத்தை மாற்ற வேண்டுமெனில் எளிதாக கன்ட்ரோல் பேனல் சென்று மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, இதில் பயனர் கணக்கின் படத்தை மாற்ற ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும். 

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் புதிய பயனர் கணக்கினை உருவாக்கும் போது தானாகவே புதிய படத்தினை இயங்குதளம் அமைத்துக்கொள்ளும். அவ்வாறு அமைக்கும் படங்களுக்கு பதில் நமக்கு பிடித்த படங்களை மாற்றிக்கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து C: ஒப்பன் செய்யவும். 


பின் View என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் Hidden items என்னும் செக்பாக்சை டிக் செய்யவும். அடுத்து கீழ் காணும் வரிசையில் ஒப்பன் செய்யவும். C:\ ProgramData -> Microsoft -> Default Account Pictures


பின் படங்களை இந்த கோப்பறையில் காப்பி செய்யவும். படங்கள் கீழ்காணும் அளவு, பெயர், பார்மெட்களில் இருத்தல் வேண்டும்.

பயனர் கணக்கு
  • அளவு 200*200, பார்மெட் .PNG, பெயர் user-200.
  • அளவு 40*40, பார்மெட் .PNG, பெயர் user-40.
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் user.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் user.

கெஸ்ட் கணக்கு
  • அளவு 448*448, பார்மெட் .PNG, பெயர் guest.
  • அளவு 448*448, பார்மெட் .BMP, பெயர் guest. 


மேலே குறிப்பிட்டுள்ளவாறு படங்களை ஒழுங்குபடுத்தி கொள்ளவும். பின்  அதனை Default Account Pictures என்னும் கோப்பறைக்குள் இந்த படங்களை பேஸ்ட் செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் Continue பொத்தானை அழுத்தி படங்களை முழுயாக காப்பி செய்யவும். பின் கன்ட்ரோல் பேனல் சென்று , User Accounts தேர்வு செய்து பின் Guest பயனர் கணக்கின் படத்தை காணவும். தற்போது Guest பயனர் கணக்கின் படம் மாற்றப்பட்டிருக்கும்.

அடுத்து புதிய பயனர் கணக்குகளை ஒப்பன் செய்யவும். அப்போதும் பயனர் கணக்கின் படமும் மாற்றப்பட்டு வரும்.


அவ்வளவுதான், வேலை முடிந்தது. இதே முறையை பின்பற்றி வேண்டிய படங்களை அமைத்துக்கொள்ள  முடியும்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன் மூலமாகவும் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.

கணினியில் தேவையில்லாமல் நிறுவியிருக்கும் மென்பொருள்களை நீக்கம் செய்வதன் மூலம் கணினி வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். கணினியில் இருக்கும் தேவையற்ற பைல்களை சிறப்பாக நீக்கம் செய்யவும், ரிஸிஸ்டரியை மேலும் சீர் செய்யவும். Baidu PC Faster என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் வேண்டும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, பின் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் SCAN பொத்தானை அழுத்தவும் அழுத்தியவுடன் தேவையற்ற பைல்களை வரிசைப்படுத்தும், பின் Clean பொத்தானை அழுத்தவும். அப்போது தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்கள் கணினியில் இருந்து நீக்கப்படும்.


மேலும் இந்த மென்பொருளில் இணைய வேகத்தை அறிந்து கொள்ளவும். அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கவும் முடியும். தனித்தனியே மீட்டெடுக்கும் வசதியும் உள்ளது.  குப்பைதெட்டியை தனியே ஸ்கேன் செய்து மீட்டெடுக்கவும் முடியும்.


கணினிக்கு தேவையான மென்பொருள்களையும் இந்த அப்ளிகேஷனில் இருந்த படியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அனைத்து மென்பொருள்களும் வகை வாரியாக உள்ளது. வேண்டிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 


மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியை பற்றிய விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் செயல் படக்கூடியது ஆகும்.

விண்டோஸ் 8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு இயங்குதளத்தில் சாதாரணமாக பூட் ஆகும் போதே F8 கீயை அழுத்தினால் Safe Mode போவதற்கான வழி கிடைக்கும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, விண்டோஸ் 8 F8 அழுத்தினால் எந்த வித மாறுதலும் இல்லாமல் சாதாரணமாக பூட் ஆகும். எனினும் விண்டோஸ்8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்யவும் வழி இருக்கிறது.

இந்த Safe Mode ல் பூட் செய்வதற்கான அவசியம் என்ன, ஒரு வேலை அழியாத கோப்புகளை அழிக்க வேண்டுமெனில் Safe Mode சென்று முழுமையாக அழித்துவிட முடியும். இயங்குதளம் பூட் ஆகாமல் கோளாரு செய்தாலும் Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும். இது போல் பல்வேறு பிரச்சினைகளை Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும்.

விண்டோஸ் 8 ல் Safe Mode செல்ல , முதலில்  விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் msconfig என்று தட்டச்சு செய்து OK பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் விண்டோஸ் 8 இயங்குதளத்தை தேர்வு செய்து Set as default என்னும் பொத்தானை அழுத்தி இருப்பியல்பு இயங்குதளமாக மாற்றிக்கொள்ளவும். பின் Boot options என்னும் அமைப்பில் Safe boot என்னும் செக் பாக்சை டிக் செய்து OK பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக கணினி மறுதொடக்கம் ஆகும். மறுதொடக்கம் ஆகும் போது தானாகவே விண்டோஸ்8 இயங்குதளதளம் Safe Mode ல் பூட் ஆகும்.


இதே முறையை பயன்படுத்தி விண்டோஸ் 7 இயங்குதளத்தையும் Safe Mode பூட் செய்ய முடியும்.

போட்டோக்களை அழகூட்ட XnRetro

செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கும் படங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது, அதனை எடிட் செய்த பின்பே படங்கள் வண்ணமயமாக இருக்கும். படங்களை எடிட் செய்ய செல்போன்களுக்கு பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்குதளத்திற்கு அவ்வாறு மென்பொருள்கள் இல்லை. ஏதோ ஒரிரண்டு மென்பொருள்கள் மட்டுமே உள்ளது, அதில் ஒன்றுதான் XnRetro.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் XnRetro அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய எடிட்டிங் வேலைகளை செய்துவிட்டு பின் படத்தை சேமித்துக்கொள்ளவும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளில் எடிட் செய்துவிட்டு நேரிடையாக சோஷியல் தளங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
தற்போது தரவுகளை கணினிகளுக்கிடையே பறிமாற்றம் செய்து கொள்ள பெரும்பான்மையான கணினி பயன்பட்டாளர்களால் பயன்படுத்தபடுவது யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ப்ளாஷ் ட்ரைவுகள் ஆகும். நாம் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன் ஆகிய சாதனங்களுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்போம், கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க காரணம் அதில் இரகசியமான தகவல்கள் மற்றும் கோப்புகளை வைத்திருப்பதனால் மட்டுமே, அதே போல் தான் யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவிலும் இரகசியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க வேண்டும்.

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கென பல மென்பொருள்கள் இணையத்தில் இருந்தும் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் என்று ஏதும் இல்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கடவுச்சொல் கொண்டு பூட்ட BitLocker வழிவகை செய்கிறது.

முதலில் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதனை கணினியுடன் இணைக்கவும், பின் கன்ட்ரோல் பேனலை ஒப்பன் செய்யவும், அதற்கு விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் Control என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


பின் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகும், அதில் BitLocker Drive Encryption என்னும் ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் ட்ரைவ் எது என குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின் Turn on BitLocker என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் சோதிக்க பட்டு, பின் BitLocker என்கிரிப்ஷன் செய்வதற்கான வேலை ஆரம்பம் ஆகும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் மீண்டும் மறுஉள்ளீடு செய்து Next பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Save to a file என்னும் பட்டியை கிளிக் செய்யவும். பின் ஒரு டெக்ஸ்ட் கோப்பு ஒன்று கணினியில் சேமிக்கபடும். அதில் ஒரு கீ இருக்கும். அதை கொண்டு பிட்லாக்கர் என்கிரிப்ஷன் கடவுச்சொல் மறக்கும் போது மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encrypt used disk space only  என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.


பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Start Encrypting என்னும் என்னும் பொத்தானை அழுத்தி, ப்ளாஷ் ட்ரைவினை என்கிரிப்ட் செய்யவும்.


சிறிது நேரத்தில் ப்ளாஷ் ட்ரைவ் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


பின் நீங்கள் ப்ளாஷ் ட்ரைவினை பாதுகாப்பான முறையில் கணினியில் இருந்து நீக்கி கொள்ளவும்.பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியில் இணைக்கும் போது கடவுச்சொல் உள்ளிட்ட பின்புதான் ஒப்பன் ஆகும்.பின் ப்ளாஷ் ட்ரைவினை முழுவதுமாக ஒப்பன் செய்ய, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, எந்த ட்ரைவினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் அந்த ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Unlock Drive என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


பின் கடவுச்சொல்லை தோன்றும் விண்டோவில் உள்ளிட்டு, பின் Unlock என்னும் பொத்தானை அழுத்தவும். அப்போது மூடப்பட்டிருந்த ப்ளாஷ் ட்ரைவ் ஒப்பன் செய்யப்படும்.


பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். கோப்புகளை பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

ப்ளாஷ் ட்ரைவ் கடவுச்சொல் மறந்துவிட்டால்

யுஎஸ்பி ட்ரைவிற்கு நாம் உருவாக்கிய கடவுச்சொல்லை மறந்து விட்டாலும் அதனை ஒப்பன் செய்யவும் வழி உள்ளது. ப்ளாஷ் ட்ரைவ் உருவாக்கும் போது ஒரு இடத்தில் டெக்ஸ்ட் கோப்பு ஒன்றினை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் அதனை ஒப்பன் செய்தால் அதில் இரகசிய கோடு இருக்கும் அதனை கொண்டு எளிதாக ஒப்பன் செய்துவிட முடியும். இருப்பியல்பாக My Document ல் டெக்ஸ்ட் கோப்பு சேமிக்கப்பட்டிருக்கும்.


ப்ளாஷ் ட்ரைவினை ஒப்பன் செய்யும் போது, கடவுச்சொல் கேட்கும் அப்போது அதற்கு கீழே More Option என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யும் போது Enter recovery Key என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அப்போது 48 இலக்க இரகசிய கீ கேட்கும் அதை உள்ளிட்டு Unlock பொத்தானை அழுத்தவும். இப்போது பூட்டு திறக்கப்படும். வழக்கம் போல் ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடவுச்சொல்லை நீக்க
ப்ளாஷ் ட்ரைவிற்கு பிட்லாக்கர் மூலம் உருவாக்கிய கடவுச்சொல்லை முழுவதுமாக நீக்கம் செய்ய முதலில் எந்த ட்ரைவிற்கான கடவுச்சொல்லை நீக்க நினைக்கிறீர்களோ அந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியுடன் இணைக்கவும். பின் முன்பு கூறியது போல் கன்ட்ரேல் பேனல் சென்று பின் BitLocker Drive Encryption என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் நீக்க நினைக்கும் ப்ளாஷ் ட்ரைவிற்கு எதிரே Turn off BitLocker என்னும் பொதியை கிளிக் செய்யவும்.


சிறிது நேரத்தில் முழுவதுமாக டிகிரிப்ஷன் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். அதாவது கடவுச்சொல் நீக்கப்பட்டு விட்டது என்பதாகும். இந்த முறையை பயன்படுத்தி எளிதாக யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் தானகவே மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு விண்டோஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகும் போது அதில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த அனைத்து அப்ளிகேஷன்களும் மூடப்பட்டு விடும். ஒரு சில முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி நடந்தால் நம்மை எரிச்சலூட்டும். மேலும் இவ்வாறு மறுதொடக்கம் ஆவது கணினியை வேகத்தை குறைக்கும்.

லினக்ஸ் இயங்குதளத்தில் அப்டேட் ஆன பின் லினக்ஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகாது, ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை. அப்டேட் ஆன பின் மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு மறுதொடக்கம் ஆவதை முழுவதுமாக ரத்து செய்ய விண்டோஸ் இயங்குதளத்தில் வழி உள்ளது. 


முதலில் விண்டோஸ் மற்றும் R கீகளை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும் பின் gpedit.msc என்று உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் Computer Configuration\Administrative Templates\Windows Components\Windows Update என்னும் வரிசையில் தேர்வு செய்யவும். Windows Update யை கிளிக் செய்தவுடன் வலதுபுறம் தோன்றும் வரிசையில் No auto-restart with logged on users for scheduled automatic updates installations என்பதை இரட்டை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவு தான் இனி விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானகவே மறுதொடக்கம் ஆகாது.

முகபுத்தகம் Notifications ஒலிகளை டிசேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
முகபுத்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. உலகில் அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட தளமாக இது உள்ளது. சிலர் தினமும் சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் முகபுத்தகம் செல்லாமல் இருக்க மாட்டார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஒருசிலர் நண்பர் வட்டத்தை பெருக்கி கொள்ள செல்வார்கள். ஆனால் பெரும்பாலானோர்கள் வன்முறை செயலில் ஈடுபடவே முகபுத்தகத்தை அதிகம் பயன்படுத்துகிறனர்.

இந்த முகபுத்தகம் மூலம் அதிக நண்பர் வட்டத்தை பெருக்கி அவர்களுடன் உரையாடவும் சிலர் விரும்புவார்கள். இவ்வாறு பல முகநூல் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் உரையாடும் போதும், செய்திகளை பறிமாறிக்கொள்ளும் போதும் முகபுத்தகத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஒலி வரும். இவ்வாறு வரும் ஒலி ஒருசில நேரத்தில் எரிச்சலை உண்டாக்கும். அவ்வாறு வரும் ஒலியினை முழுவதுமாக ரத்து செய்யவும் வழி உள்ளது.

முதலில் உங்களுடைய முகபுத்தகம் கணக்கில் உள்நுழையவும், பின் Account Settings செல்லவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Notifications என்னும் அமைப்பில் How you get Notifications (On Facebook) என்பதற்கு எதிரே உள்ள View என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Play a sound when each new notification is received என்னும் செக்பாக்சில் உள்ள டிக் மார்கினை எடுத்துவிட்டு Save Changes என்னும் பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் வேலை முடிந்தது இனி முகபுத்தகத்தில் உரையாடும் போது ஒலி ஏதும் வராது.

வேர்ட் கோப்பினை ஆடியோ கோப்பாக கன்வெர்ட் செய்ய

அலுவலங்கள் மற்றும் கணினி மையங்களில் கோப்புகளை உருவாக்க பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட் கொண்டோ உருவாக்கப்படுகிறது. ஆப்பிஸ் தொகுப்பை கொண்டு  உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும்.

இந்த வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகள் மிகச்சிறியதாகவும். அளவில் பல பக்கங்களை உள்ளட்டக்கியதாகவும், அதிகமான பக்கங்களை கொண்ட டாக்குமெண்ட்களை எளிதில் படித்துவிட முடியாது. இதனால் காலம் தாமதம் மட்டுமே ஆகும். இதற்கு பதிலாக எழுத்து வடிவில் உருவாக்கப்படும் கோப்புகளை ஒலி வடிவில்மாற்றம் செய்ய இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் டாட்நெட் ப்ரேம்வோர்க் அன்மைய பதிப்பு கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில் டாட்நெட் ப்ரேம் வோர்க் மென்பொருள் நீங்கள் பதிவிறக்கிய கோப்பில் இருக்கும் அதை கணினியில் நிறுவிக்கொள்ளவும். 


 பின் AudioDocs மென்பொருளை முழுமையாக ணினியில் நிறுவிக்கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். MS Word to AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வேர்ட் கோப்பினை தேர்வு செய்து பின் ஒலியின் அளவு மற்றும் எவ்வளவு நேர இடைவெளியில் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு பின் Create AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சில நிமிடங்களில் ஆடியோ பைல் உருவாக்கப்பட்டுவிடும். உருவாக்கப்படும் ஆடியோ பைல் பார்மெட்டானது .wav பார்மெட்டில் இருக்கும். கன்வெர்ட் செய்யப்பட்ட ஆடியோ கோப்பினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.