தமிழில் கணினி செய்திகள்

Hotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,,, at October 06, 2017
ஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே டவுண்லோட் செய்ய முடியும். அந்த வீடியோக்களை அச்செயளிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த வீடியோக்களை தனியாக பிரித்தெடுக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

சரி Hotstar வீடியோக்களை கணினி மற்றும் மொபைல் போன்களில் எளிமையாக டவுண்லோட் செய்துவது எவ்வாறு என்று பார்ப்போம் முதலில் கணினியில் எவ்வாறு டவுண்லோட் செய்வது என்று பார்ப்போம். 

கணினியில் வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள் சுட்டி


மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி  அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை Extract செய்து கொள்ளவும். அடுத்து hotstarlivestreamer என்னும் .batch பைலை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் வீடியோவின் முகவரியை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். அடுத்து வீடியோவின் பிக்சல் அளவினை குறிப்பிட்டு  என்டர் பொத்தானை அழுத்தவும். அடுத்து d என்று டைப் செய்து என்டர் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் வீடியோவானது டவுண்லோட் ஆக தொடங்கும். வீடியோவானது டவுண்லோட் ஆனவுடன் நீங்கள் Extract செய்த போல்டர்க்குள்  videos என்ற போல்டர் இருக்கும் அதற்குள் நீங்கள் டவுண்லோட் செய்த வீடியோவானது இருக்கும்.  

அடுத்து மொபைல் போனில் வீடியோவினை தரவிறக்கம் செய்ய Videoder என்னும் மென்பொருள் பயன்படுகிறது. 

Videoder மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மேலே குறிப்பிட்ட சுட்டியை பயன்படுத்தி ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்களுடையை மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின் அதனை ஒப்பன் செய்யவும் அதில் Hotstar னை தெரிவு செய்யவும். அடுத்து நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் வீடியோவினை ஒப்பன் செய்யவும். 


இப்போது டவுண்லோட் செய்வதற்கான சுட்டி உங்களுக்கு கிடைக்கும். அதனை கிளிக் செய்தவுடன் வீடியோவினை எந்த பார்மெட்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியுமே அந்த அளவுகள் அனைத்தும் தோன்றும் அதனை பயன்படுத்தி உங்கள் விருப்ப வீடியோ அளவினை தேர்வு செய்து டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.



இப்போது நீங்கள் டவுண்லோட் செய்த வீடியோவானது உங்களுடைய போன் மெமரிக்கு வந்திருக்கும் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


0 Comments:

Post a Comment