தமிழில் கணினி செய்திகள்

கூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு

♠ Posted by Kumaresan Rajendran in ,
தமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று அறிவித்தது. கடந்த 10 வருடமாக தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூக்களுக்கு கூகுள் அட்சென்ஸ் நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது கூகுள் நிறுவனம்  அட்சென்ஸ் சேவையானது  தமிழ் மொழி சார்ந்த இணையதளங்களை ஆதரிக்கும் என கூகுள் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளது. 


மேலும் கூகுள் அட்சென்ஸ் ஆதரிக்கும் மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழி தற்போது இணைக்கப்பட்டு உள்ளது. இது உலக தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும்.


இனிமேல் தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் வைத்திருக்கும்  அனைவரும் தங்களுடைய தளங்களில் கூகுள் அட்சென்ஸ் வசதியினை இணைத்து கொள்ள முடியும்.

இந்த தகவலினை முடிந்தவரை அனைத்து தமிழ் இணைய நண்பர்களிடம் பகிருங்கள்.

Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும்.

இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது.

Google Business பக்கதிற்கான சுட்டி


மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கினை கொண்டு லாகின் செய்து கொள்ளவும்.


பின்  மேலே உள்ள விண்டோ போன்று தோன்றும் அதில் உங்களுடைய பிசினஸ் சார்ந்த விவரங்களை உள்ளிடவும். பின் Continue என்னும் பொத்தானை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை கூகுளுக்கு அனுப்பபடும். நீங்கள் அளித்த விவரங்கள் சரியாக இருந்தால் கூகுள் தரப்பிலிருந்து 12 நாட்களுக்குள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு இரகசிய எண் அனுப்பபடும். அதை கூகுள் பிசினஸ் பக்கத்திற்கு சென்று , உங்கள் கணக்கில் லாகின் செய்தபின் இந்த இரகசிய எண்னை உள்ளிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

இப்போது கூகுள் சர்ச் எஞ்சின் சென்று சர்ச் செய்து பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட விரவரங்களை காண முடியும். நான் என்னுடைய tamilcomputer வலைப்பூவினை கூகுள் பிசினஸ் பக்கத்தில் சேர்த்துள்ளேன். நீங்கள் கூகுள் சென்று tamilcomputer என்று கூகுள் செய்து பாருங்கள்.


இந்த பதிவினை இரண்டு வீடியோ பதிவாக இட்டுள்ளேன் அதற்கான முகவரிகள் கீழே உள்ளன. அந்த வீடியோ முகவரிகளை பயன்படுத்தி எளிமையாக நீங்கள் இதை செய்ய முடியும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 

PART 1 :-



PART 2 :-


உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது?

♠ Posted by Kumaresan Rajendran in ,

உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியினை அறிந்து கொள்வதன் மூலமாக , ஒருவேளை ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல் (Password) னை நீங்கள் மறந்து விட்டால் அதனை மீட்டெடுக்க இந்த தேதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தேதியினை நீங்கள் அறிந்து கொள்ள முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Settings மெனுவினை கிளிக் செய்யவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் Forwarding and POP/IMAP என்ற மெனுவினை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்ட தினத்தினை நீங்கள் காண முடியும். இதில் முதலாவதாக இருப்பது மாதம் இரண்டாவதாக இருப்பது தேதி மூன்றாவதாக இருப்பது வருடம் ஆகும்.

Youtube:- 

என்னுடைய வலைப்பூவிற்கு இத்தனை நாட்களாக ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் தற்போது புதியதாக Youtube சேனல் ஒன்றினை தொடங்கி உள்ளேன் இதற்கும் உங்களுடைய ஆதரவு வேண்டும் என கோட்டுக்கொள்கிறேன்.

Youtube சேனல் முகவரி :- 

https://www.youtube.com/channel/UCVLRhbLMbMMbeE6fIDmQ9Kw

இந்த பதிவின் வீடியோ பதிவு:- 



வலைதளங்களுக்கான அழிப்பான் - கூகுள் குரோம் நீட்சி

நாம் தினமும் பல்வேறு விதமான இணையதளங்களை பார்வையிடுகிறோம். அதில் பல இணையதளங்களில் முகம் சுழிக்க வைக்கும் பல செய்திகளையோ அல்லது விளம்பரங்களையோ பார்ப்போம். இவ்வாறு நாம் பார்க்கும் குறிப்பிட்ட ஒரு இணையத்தில் இருக்கும் வீடியோவினையோ அல்லது ஒரு செய்தியினை மட்டுமோ நீக்குவது என்பது சதாரண வழி இல்லை. வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேண்டுமெனில் முழுவதுமாக முடக்க முடியும்.

சரி மேலே கூறியது போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் சில பகுதியை மட்டும் நீக்க கூகுள் குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. இதன் மூலம் எளிமையாக நீக்கி கொள்ள முடியும்.

நீட்சியை குரோம் உலாவியில் இணைக்க சுட்டி




சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து விட்டு பின் குரோம் உலாவியினை ஒப்பன் செய்யவும்.


பின் அட்ரஸ் பாரின் அருகில் Page Eraser ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்து பின் உங்களுக்கு தேவையில்லாத செய்திகளையோ அல்லது விளம்பரங்களையோ எளிதாக அளித்துக்கொள்ள முடியும்.


மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் Page eraser யை பயன்படுத்தி தலைப்பினை நீக்கியுள்ளேன். ஒருமுறை நீக்கிவிட்டால் அவ்வளவு தான் அது மீண்டும் வரவே வராது. அப்படி மீண்டும் நீக்கிய செய்திகளை வரச்செய்ய வேண்டுமெனில் Page Eraser ஐகான் மீது வலது கிளிக் செய்து தோன்று தேர்வில் Options என்பதை தெரிவு செய்ய வேண்டும்.


இதில் எவற்றையெல்லாம் Pageeraser துணைகொண்டு நீக்கியுள்ளோமோ அவை அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றையெல்லாம் மீண்டும் வரச்செய்ய வேண்டுமெனில் குறிப்பிட்ட வலைதள முகவரியை மட்டும் நீக்கி விட்டால் போதுமானது. இப்போது மீண்டும் சென்று வலைதளத்தில் பார்த்தால் தற்போது அந்த செய்தி மற்றும் விளம்பரங்கள் வந்திருக்கும். 

கூகுள் மூலமாக தேடிய உங்களுடைய வரலாற்றை அறிய (Google - Search History)

♠ Posted by Kumaresan Rajendran in
கூகுள் மூலமாக மட்டுமே நாம் பல்வேறு இணைய தள முகவரிகளை கண்டறியக்கூடும். நமக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே கூகுள் மூலமாக தேடி குறிப்பிட்ட செய்தியை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் கூகுளின் மூலமாக எப்படி, எந்த நேரத்தில் எல்லாம் தேடியுள்ளோம் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். 

தளத்திற்கான சுட்டி




இந்த தளத்தில் நீங்கள் உள்நுழைந்தவுடன் வகை வாரியாக உங்களுடைய வரலாற்றினை பட்டியட்டு காட்டும். மேலும் மாத வாரியகவும், வார வாரியகவும், மேலும் மணி வாரியாகவும் இதனை பிரித்து காட்டும். நீங்கள் கூகுள் மூலமாக தேடிய இவற்றை அளித்துக்கொள்ளவும் முடியும்.


குறிப்பிட்ட தெரிவுகளை தெரிவு செய்து பின் அதனை நீக்கி கொள்ளவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.


நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய கூகுள் கணக்கில் உள்நுழைந்த பின்னரே இவற்ற எல்லாம் காண முடியும். மேலும் உங்களுடைய கணக்கு உழ்நுழைந்த பின் தேடியவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள தளத்தில் காண முடியும்.




Google - Search History வசதியினை டிசேபிள் செய்ய:
நண்பர் கதிர்வேல் கூறியதை தொடர்ந்து , Google Search history வசதியினை டிசேபிள் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள சுட்டியில் நுழைந்த பின் செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்து, தோன்றும் தேர்வில் Settings என்பதை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Your searches and browsing activity என்பதற்கு எதிரே உள்ள இழு விசை பொத்தானை இடது பக்கமாக கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் PAUSE என்னும் பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனி நீங்கள் உங்களுடைய கூகுள்கணக்கில் உள்நுழைந்து தேடும் எதுவும் , கூகுள் மூலமாக சேமிக்க படாது.


மேலும் இது போன்று யூடுப் தளத்தில் நாம் தேடும் அல்லது பார்க்கும் வீடியோக்களையும் சேமித்து வைத்திருக்கும், அதனையும் நமது வசதிகேற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும். அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள விண்டோவில் தோன்றுவது போல் SHOW MORE SETTINGS பொத்தானை கிளிக் செய்யவும்.


யூடுப்பில் தேடும் அனைத்து விதமான வீடியோ பட்டியலும், பார்க்கபடும் வீடியோ பட்டியலும் தனித்தனியே சேமிக்க படும். மேலும் கூகுள் வாய்ஸ் மூலம் நாம் தேடும் தேடல்களும் தனியே சேமிக்கப்படும். இவையனைத்தையும் நாம் டிசேபிள் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

கூகுள் - யுக்திகள்

♠ Posted by Kumaresan Rajendran in
இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒரு தளமாக கூகுள் தளம் உருவெடுத்துள்ளது. இன்று எந்த ஒரு தளத்தை தேடி சென்றாலும் இணைய பயன்பாட்டாளர்கள் முதலில் நாடுவது கூகுள் தளத்தைதான். மேலும் இந்நிறுவனம் கூடுதலாக இணைய சந்தையில் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் முக்கிய தினங்களுக்கு கூகுள் லோகோவினை கூகுள் நிறுவனம் மாற்றும் அதில் அன்றைய தினத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் இருக்கும் மேலும் விளையாட்டு அம்சம் அடங்கியதாக இருக்கும். 

இதே போன்று பல்வேறு கூகுள் தொடர்பான யுக்திகள் (Tricks) உள்ளன அவை,
கூகுள் தளத்தில் உள்நுழைந்து கொள்ளவும்.


பின் கீழ்வரும் குறிச்சொல்லை உள்ளிட்டு தேடவும். தோன்றும் விண்டோவில் முதல் இணைப்பினை திறக்கவும்.

  • google guitar
  • google snake
  • Zerg Rush
  • calculator
  • google mirror
  • Google Sphere
  • Google terminal
  • Do a barrel roll
  • Google chuck norris kisses rajnikanth
  • google gravity
  • Dark google
  • Google underwater
  • Google Sphere
  • Google Loco
  • google pacman
  • google mirrorepic googlethe answer to life, the universe and everything
  • once in a blue moon
  • the loneliest number
  • make google logo black and white
  • Weenie Google
  • temperature/mb to kb/Length converter
  • temperature
  • time
இசையமைக்கவும், கணிப்பான் பயன்படுத்தவும், விளையாட்டுகளை விளையாடவும். கூகுளிலின் முகப்பு பக்கத்தை திருப்பவும். மேலும் பல்வேறு விதமான விநேதங்கள் இதில் அடங்கியுள்ளது.

இறப்புக்கு பின் கூகுள் கணக்கினை அழிக்க மற்றும் தகவல்களை மாற்ற - Inactive Account Manager

இணையப்பயன்பாட்டில் அனைத்து இணைய பயனாளர்களும் ஏதோ ஒரு வகையில் கூகுளில் வசதியை பெற்று வருகிறனர். குறிப்பாக ப்ளாக், யூடுப், ஜிமெயில் , கூகுள் ப்ளஸ் மற்றும் பல்வேறு வசதிகளை பெறுகிறனர். பெரும்பாலும் இந்த வசதிகளை அனுக கூகுள் கணக்கு தேவைப்படும். 

இவ்வாறு காலம் காலமாக பயன்படுத்தி வரும் கூகுள் கணக்கு நாம் இறந்த பின் என்னவாகும். நம்முடைய கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே அந்த கணக்கினை கையாள முடியும். இதற்கு பதிலாக நாம் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருந்தால் நம்முடைய கூகுள் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் வேறு மின்னஞ்சலுக்கு கூகுளே அனுப்பிவிடும். 

இவ்வாறு செய்வதனால் நமக்கு பின் நாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்கள் அழியாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

Inactive Account Manager  வசதியினை எனேபிள் செய்தால் மட்டுமே கூகுள் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

Inactive Account Manager வசதியினை எனேபிள் செய்ய முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Account Settings செல்லவும்.

Account Settings செல்ல சுட்டி 

பின் Account Management என்னும் பட்டையின் கீழ் உள்ள Learn more and go to setup தேர்வினை கிளிக் செய்யவும்.


 இல்லையெனில் நேரடியாக Inactive Account Manager  செல்ல இங்கு கிளிக் செய்யவும். 


கிளிக் செய்தவுடன்  தோன்றும் விண்டோவில் Setup என்னும் பொத்தானை அழுத்தவும்.


நீங்கள் அடுத்து தோன்றும் விண்டோவில் Add mobile phone number என்பதை கிளிக் செய்து மொபைல் எண்னை உள்ளிடவும். அந்த மொபைல் எண்னிற்கு கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும் அதை உள்ளிட்டு மொபைல் எண்னை உறுதிபடுத்திக்கொள்ளவும். பின் Add alternative email என்னும் தேர்வினை அழுத்தி மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துக்கொள்ளவும்.


ஸ்குரோல் செய்து விண்டோவினை கீழிறக்கவும். அதில் எவ்வளவு காலம் நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் , கூகுள் கணக்கில் உள்ள தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய கோப்புகளை  கூகுள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடவும். 3,6,9 மாதம் அல்லது 1 வருடம் என்று குறிப்பிட்டு கொள்ளலாம்.  அதற்கேற்ப Timeout Period மாறும். 3 மாதம் என்றால் 1 மாதமாகவும், 6,9 மாதம் என்றால் 2 மாதமாகவும், 1 வருடம் என்றால் 3 மாதமாகவும் இருக்கும். 

இந்த Timeout Period என்பது உங்கள் கூகுள் கணக்கினை அழிக்கும் முன்னரோ அல்லது தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் முன்னர்,  தொலைபேசி எண்னுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பும் காலத்தை குறிப்பிடும். அதாவது உங்கள் கணக்கினை அழிக்கும் முன்னர் தகவல் அனுப்பபடும்.அதற்கு பின் கூகுள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கூகுள் கணக்கு ஒப்பன் செய்யபடவில்லையெனில் கூகுள் இந்த வசதியை செயல்படுத்திவிடும்.



நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து கூகுள் கணக்கு தொடர்பான தகவல்களை அனுப்ப விரும்புகீறீர்களோ அதனை குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரியினை சேமித்துக்கொள்ளவும்.


தகவல்களை வேறு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம் அதற்கு பதில் கூகுள் கணக்கினை நிரந்தரமாக அழித்துவிடலாம் என்றால், Delete my account என்பதற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்தி Yes என்று தேர்வு செய்து கொள்ளவும். 

பின் இறுதியாக எனேபிள் பொத்தானை அழுத்தி நீங்கள் Inactive Account Manager  வசதியினை உங்கள் கூகுள் கணக்கில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

உங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது

♠ Posted by Kumaresan Rajendran in ,
உங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் இதனை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக கூகுள் கணக்கினை உருவாக்கியிருப்போம். பின் அதே கணக்கினை அனைத்து கூகுள் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுள் கணக்கானது எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அது நமக்கு தெரியாது. சரி கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது என்று கண்டறிய வழி இருக்கிறதா என்றால், இருக்கிறது என்றே கூறலாம். சரி ஏன் இந்த கூகுள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் நமக்கு தெரிய வேண்டும், நம்முடைய கடவுச்சொல் மறக்கும்போது அதனை மீண்டும் பெற கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டதேதி மிகவும் அவசியம் ஆகும்.



இதனை கண்டறிய முதலில் Google Takeaway பக்கத்திற்கு செல்லவும். இதற்கான சுட்டி. பின் Transfer your Google+ connections to another account என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.



பின் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்ற விவரம் காண்பிக்கப்படும்.

கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in
மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த Google Books Downloader மென்பொருளை ஒப்பன் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய புத்தகத்தின் முகவரியை குறிப்பிட்டு, குறிப்பிட்ட புத்தகமானது எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பின் Download Book as PDF, Download Book as Image என்ற பொத்தான்களை அழுத்தி கூகுள் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின் சிலமணி நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகமானது, நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில், குறிப்பிட்ட இடத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும்.

கூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
தககல் களஞ்சியங்களில் தாய்வீடு என்றால் அது கூகுளை மட்டுமே குறிக்கும். இணையத்திற்கு சென்றால் எதாவது ஒரு வகையில் நாம் கூகுளின் உதவியை நாடி சென்றே ஆக வேண்டும். அந்த வகையில் கூகுளின் வசதிகள் இணைய உலகில் பெருகி உள்ளன. இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் பலவும் விலைக்கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில மட்டுமே இலவசமாக கிடைக்கும். ஆனால் கூகுள் புத்தகங்களை நாம் இலவசமாகவே பெற முடியும். ஆனால் இந்த புத்தகங்களை நம்மால் ஆன்லைனில் இருந்தவாறு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புத்தகங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வசதி ஏதும் இருக்காது. இதனால் கால விரயமும், பணச்செலவு மட்டுமே ஆகும். இவ்வாறு இலவசமாக கிடைக்கும் கூகுள் புத்தகத்தினை நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியாததை நினைத்து நான் சில நேரங்களில் வருத்தப்பட்டுகூட உள்ளேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பலமொழிக்கு ஏற்ப நம்மால் இந்த கூகுள் புத்தகங்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் இதனை தவிர்க்கவும் ஒரு வழி உள்ளது. கூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

Greasemonkey தரவிறக்க சுட்டி


நீட்சியினை உலவியில் நிறுவுவதற்கு முன், இந்த Greasemonkey நீட்யினை உங்கள் உலவியில் நிறுவிக்கொள்ளவும். பின் Google Book Downloader நீட்சியினை உங்கள் கணினியில் நிறுவவும்.

நீட்சியினை தரவிறக்க சுட்டி


பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Google Book Downloader நீட்சியினை உங்களுடைய உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒரு முறை உங்களுடைய நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது கூகுள் புத்தகத்தை நெருப்புநரி உலவியில் ஒப்பன் செய்யவும்.


தற்போது இந்த பக்கத்தில் Download this book என்னும் சுட்டி இணைக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்திற்கு தனித்தனி பதிவிறக்க சுட்டி இணைக்கப்பட்டிருக்கும், வேண்டுமெனில் அதை பயன்படுத்தியும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் என்ன குறைபாடு என்றால் பதிவிறக்கம் செய்த பின்பும் நாம் தனித்தனியாகவே சேமிக்க வேண்டும். மொத்தமாக சேமிக்க முடியாது. எனினும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். சற்று நேரம் இழுக்கும். பயன்படுத்தி பாருங்கள் பின் உங்கள் பதிலை கூறுங்கள்.

எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்புகளில் இருந்து நேரிடையாக கூகுள் டாக்ஸ்க்கு பதிவேற்றம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நாம் இதுவரை கூகுள் டாக்ஸில் டாக்குமெண்ட்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமெனில் தனியாக சென்று கூகுள் டாக்ஸ்யை ஒப்பன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நேரிடையாக எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பில் இருந்தவாறே நேரிடையாக இணையத்தின் உதவியுடன் கூகுள் டாக்ஸில் பதிவேற்றம் செய்ய முடியும். இதற்கு Google Cloud Connect என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் நிறுவிக்கொள்ளவும், இந்த அப்ளிகேஷனை  உங்களுடைய கணினியில் நிறுவ வேண்டுமெனில் உங்கள் கணினியில் .NET Framework 2.0 வேண்டும். மேலும் ஆப்பிஸ் தொகுப்பு 2003,2007 மற்றும் 2010 இவற்றில் எதாவது ஒன்று. இந்த அப்ளிகேஷன் விண்டோஸ்  XP, Vista, மற்றும் 7  ஆகிய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் மட்டுமே வேலை செய்ய கூடியது ஆகும். இந்த அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவியப்பின் ஆப்பிஸ் தொகுப்பை ஒப்பன் செய்யவும்.


எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பை ஒப்பன் செய்யவும் அதில் Google Cloud Connect என்ற அப்ளிகேஷனானது உங்கள் கணினியில் நிறுவிப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். அடுத்ததாக தோன்றும் Approve access to your Google Account என்ற விண்டோவில் Deny access என்பதை கிளிக் செய்யவும்.


பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Automatic (on every sare or when others update on Google Docs) என்னும் ஆப்ஷன் பட்டனி தேர்வு செய்து கொண்டு ஒகே பட்டனை அழுத்தவும்.


பின் ஆப்பிஸ் தொகுப்பில் உங்கள் வேலையை தொடங்கவும். பின் தானாவே இணையத்தில் கூகுள் டாக்ஸில் உங்களுடைய கோப்பானது சேமிக்கப்பட்டு விடும். 


இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில் கண்டிப்பாக இணைய இணைப்பு உங்கள் கணினியில் இருக்க வேண்டும். இந்த வசதியின் மூலமாக நீங்கள் மறதியாக கணினியில் இருந்து நீக்கிய டாக்குமெண்ட்களை கூகுள் டாக்ஸில் இருந்து மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.

கூகுள் லோகோவினை மாற்றம் செய்ய - நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
நண்பர் ஒருவருடைய வேண்டுகோளுக்கினங்க இந்த பதிவு. இந்த பதிப்பானது பலருக்கும் தெரிந்திருக்கலாம், எனினும் புதியவர்களுக்காக இந்த பதிவு. சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈ-மெயில் வந்தது அதில் கூகுள் லோகோவினை எவ்வாறு நம்முடைய விருப்பப்படி மாற்றிஅமைப்பது என்று, ஒரு நண்பர் ஒருவர் கேட்டிருந்தார், அவருக்காகவும் மற்ற புதிய கணினி பயனாளருக்காகவும் இந்த பதிவு. கூகுள் லோகோவினை மாற்றம் செய்ய முதலில் பயர்பாக்ஸ் நீட்சியை நிறுவ வேண்டும். பின்னர் Script-னை நிறுவ வேண்டும்.

நெருப்புநரி உளவிக்கான நீட்சியை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும். Script-னை நிறுவ இங்கு கிளிக் செய்யவும்.

நெருப்புநரி உளவிக்கான நீட்சி
Scrip பதிவிறக்கம் செய்ய சுட்டி



பின் ஒரு நெருப்புநரி உளவியினை மறுதொடக்கம் (Restart) செய்யவும். பின் உளவியினை திறந்து www.google.com, www.google.co.in என உள்ளிடவும். தற்போது வரும் விண்டோவில் கூகுள் லோகோ மீது டபுள் கிளிக் செய்து, தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிட்டு ஒகே செய்யவும். வேண்டுமெனில் கலருக்கான கோடினையும் உள்ளீடு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.

இப்போது நீங்கள் விரும்பிய பெயரை உள்ளிட்டு, பின் கலரையும் குறிப்பிட்டுவிட்டு பின் Change என்ற பொத்தானை அழுத்தவும்.



மாற்றி அமைக்கப்பட்ட கூகுளின் முகப்புபக்கத்தை படத்தில் காணலாம், வேண்டுமெனில் கூகுள் பேக்ரவுண்ட்டையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கூகிளின் இடது பக்கத்தின் ஒரத்தில் தோன்றும் Change background image என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கூகிளின் பேக்ரவுண்ட் இமேஜ்யையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

கூகுள்குரோமின் Stable வெர்சன்-8 வெளியிடப்பட்டுவிட்டது

அதிவேக உலவியான கூகுள் குரோம் தனது 8 வது பதிப்பினை வெளியிட்டுள்ளது, இந்த உலவியானது முந்தைய பதிப்புகளை விட தற்போது வெளிவந்துள்ள பதிப்பானது மிகவும் வேகமாக செயல்பட கூடியது. இந்த பதிப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்த புதிய பதிப்பினை நாம் நம்முடைய பழைய உலவியில் இருந்தபடியே நிறுவிக்கொள்ள முடியும். இதனை நிறுவிக்கொள்ள Tools > About Google Chrome என்பதை தேர்வு செய்து இந்த புதிய பதிப்பினை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த உளவியானது அதிவேகமாக செயல் பட கூடியது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த உலவியில் பல்வேறு விதமான கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளது.


கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த Stable வெர்சன் பதிப்பு 8.0.552.215 ஆகும். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் Pdf Viewer ஆகும்.

மென்பொருளை தரவிறக்க:

விண்டோஸ் இயங்குதளத்திற்கு சுட்டி

மேக் இயங்குதளத்திற்கு சுட்டி

லினக்ஸ் இயங்குதளத்திற்கு சுட்டி

கூகுள்-குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க

கூகுள் குரோம் உலவி கூகுள் நிறுவனத்தின் உலவியாகும். இந்த உலவியானது அதிக நபர்களால் பயன்படுத்தப்படக்கூடியது ஆகும். மேலும் இந்த உலவியில் அதிகமான சிறப்பம்சங்கள் வாய்ந்த உலவியாகும். கூகுள் குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும். வீட்டு கணினியில் குழந்தைகள் இணையத்தில் உலாவரும் போது அவர்கள் பல்வேறு விதமான வலைப்பக்கங்களை பார்வையிடுவர். சில இணையதளங்கள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அதுபோன்ற சூழ்நிலையில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும்.

  • முதலில் நீங்கள் இந்த நீட்சியை உங்கள் கூகுள்-குரோம் உலவியில் நிறுவிக்கொள்ளவும் Blocker Extensions 
  • பின் Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும்.

பின் options என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக தோன்றும் விண்டோவில்  Blocked URLs என்ற பாக்சில் வெப்சைட் முவரியை உள்ளிட்டு Save என்ற பொத்தானை அழுத்தவும் பின் Enable பட்டனை அழுத்தவும்.



இப்போது நீங்கள் கூகுள்குரோம் உளவியில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை திறக்குபோது கீழே உள்ள விண்டோ போல தோன்றும்.


இதனை  டிசேபிள் செய்ய  Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் options என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில் Disable பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் தோன்றும் பாக்சில் கீழே தோன்றும் எழுத்தினை உள்ளிட்டு அந்த முகவரியை நீக்கி கொள்ளவும்.


நீங்கள் இனி உங்களுக்கு தேவையில்லாத வலைப்பக்கங்களை கூகுள்-குரோம் உளவியில் தடுக்க முடியும்.