கூகுள் குரோம் உலவி கூகுள் நிறுவனத்தின் உலவியாகும். இந்த உலவியானது அதிக நபர்களால் பயன்படுத்தப்படக்கூடியது ஆகும். மேலும் இந்த உலவியில் அதிகமான சிறப்பம்சங்கள் வாய்ந்த உலவியாகும். கூகுள் குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும். வீட்டு கணினியில் குழந்தைகள் இணையத்தில் உலாவரும் போது அவர்கள் பல்வேறு விதமான வலைப்பக்கங்களை பார்வையிடுவர். சில இணையதளங்கள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அதுபோன்ற சூழ்நிலையில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும்.
- முதலில் நீங்கள் இந்த நீட்சியை உங்கள் கூகுள்-குரோம் உலவியில் நிறுவிக்கொள்ளவும் Blocker Extensions
- பின் Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும்.
பின் options என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக தோன்றும் விண்டோவில் Blocked URLs என்ற பாக்சில் வெப்சைட் முவரியை உள்ளிட்டு Save என்ற பொத்தானை அழுத்தவும் பின் Enable பட்டனை அழுத்தவும்.
இப்போது நீங்கள் கூகுள்குரோம் உளவியில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை திறக்குபோது கீழே உள்ள விண்டோ போல தோன்றும்.
இதனை டிசேபிள் செய்ய Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் options என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில் Disable பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் தோன்றும் பாக்சில் கீழே தோன்றும் எழுத்தினை உள்ளிட்டு அந்த முகவரியை நீக்கி கொள்ளவும்.
நீங்கள் இனி உங்களுக்கு தேவையில்லாத வலைப்பக்கங்களை கூகுள்-குரோம் உளவியில் தடுக்க முடியும்.
4 Comments:
thanks for sharing.
useful information
மிகவும் உபயோகமான பகி்ர்வு. நன்றி
ஐ பயனுள்ள பதிவு நன்றி தோழா!!!
Post a Comment