தமிழில் கணினி செய்திகள்

அதிக அளவுடைய பைல்களை ஈ-மெயிலுக்கு அனுப்ப- Zeta Uploader

♠ Posted by Kumaresan R in at 10:24 PM
ஈ-மெயில் மூலமாக நாம் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும் உதாரணமாக ஜிமெயில் மூலமாக 25MB அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் சென்றால் தனித்தனி ஈ-மெயிலாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் நாம் கட்டண சேவையின் மூலமாக மட்டுமே அதிக அளவுடைய பைல்களை அனுப்ப முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். மேலும் நாம் அனுப்ப நினைக்கும் பைலானது முழுமையாக சேர வாய்ப்பு இருக்காது, சில நேரங்களில் ஹேக்கர்களால் திருடபடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல பல பிரச்சினைகள் உள்ளது.

நம்மிடம் உள்ள அதிக அளவுடைய பைலினை நம்மால் இணையம் மூலமாக அனுப்ப இயலாது, அதுபோன்ற சூழ்நிலையில் ஏதாவது ஒரு தளத்தில் நம்முடைய டாக்குமெண்ட்டையோ அல்லது மென்பொருளையோ பதிவேற்றி தரவிறக்க லிங் கொடுக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றும். அது போன்ற சூழ்நிலையில் நாம் இணையத்தில் எதாவது ஒரு தளத்தை தேடி பிடித்து பார்த்தால் இந்த சேவை குறிப்பிட்ட அளவு மட்டுமே, முழுமையாக பெற பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி வரும். இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் சமாளிக்கும் வன்னமாக உள்ளதுதான் Zeta Uploader என்னும் மென்பொருள ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவி கொள்ளவும். பின் நீங்கள் அனுப்ப நினைக்கு பைலினை தேர்வு செய்யவும், பின் ஈ-மெயில் முகவரியினை உள்ளிடவும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈ-மெயில் முகவரியினை குறிப்பிட கமா , குறிப்பிடவும், பின் எதைப்பற்றி குறிப்பிட நினைக்கிறீர்களோ அதனை Message என்ற பாக்சில் குறிப்பிடவும். பின் upload now பட்டனை அழுத்தவும் சிறிது நேரத்தில் உங்களுடைய பைலானது நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஈ-மெயில் மூலமாக அனுப்பபடும், அந்த லிங்கினை கிளிக் செய்து பைலை பதிவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பு: அவசரமான சூழ்நிலையில் மட்டும் இந்த மென்பொருளின் உதவியை நாட வேண்டும். ஏனெனில் உங்களுடைய கோப்பானது திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

0 comments:

Post a Comment