தமிழில் கணினி செய்திகள்

PDF கோப்பினை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே டாக்குமெண்ட் பார்மெட்டாக .pdf டாக்குமெண்ட் மாறி வருகிறது இதற்கு காரணம் பிடிஎப் பைல் பார்மெட்டில் உள்ள கோப்புகளை எளிதில் உடைத்து எடிட் செய்து விட முடியாது. மேலும் எதாவது ஒரு பிடிஎப் ரீடர் மென்பொருள் இருந்தால் போதும் பிடிஎப் பைலை ஒப்பன் செய்துவிடலாம். சரி இவ்வாறு பிடிஎப் கோப்பாக உருவாக்கும் டாக்குமெண்ட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை சரி செய்ய வேண்டுமெனில் நாம் கண்டிப்பாக மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.

வேர்ட், இமேஜ், எச்டிஎம்எல் மற்றும் பல்வேறு டாக்குமெண்ட்களை நாம் பிடிஎப் கோப்பாக மாற்றி பயன்படுத்துவோம். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மென்பொருளை நாட வேண்டும் அதற்கு பதிலாக பிடிஎப் கன்வெர்ட் தொடர்பான அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்ய முடியும் அந்த மென்பொருளின் பெயர்தான் PDFMate.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து பின் Add PDF என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டுமோ அதை குறிப்பிட்டு பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். 

சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். பின் நீங்கள் அதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

அகராதி மற்றும் மொழிபெயர்ப்பு மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
அகராதி என்பது நமக்கு தெரியாத பல வார்த்தைகளுக்கு விளக்கங்களை கொண்ட களஞ்சியமாக இருக்கும். இதனால் இதுபோன்ற அகராதிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியறிவு கொண்ட அனைவருமே பயன்படுத்துவார்கள். தீடிரென ஒரு வார்த்தையை கேள்விபடுவோம் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது எங்கு தேடினாலும் கிடைக்காது. அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தத்தை கண்டறிய வேண்டுமெனில் ஒன்று இணையத்தை நாட வேண்டும் இல்லையெனில் அகராதியை நாடிச்செல்ல வேண்டும். 

சாதாரணமாக அச்சிட்ட அகராதிகள் பல உள்ளன. அவற்றை கொண்டு ஒரு குறிப்பிட்ட வார்த்தையை தேடும் போது நேரம் செலவாகும். அதை குறைக்க கணினியில் அதே அகராதியை பயன்படுத்தினால் நேரம் மிச்சமாகும். அவ்வாறு உள்ள அகராதி மென்பொருள்தான் Lingoes.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுக்கொள்ளவும். இந்த மென்பொருள் போர்ட்டபிளாகவும் கிடைக்கிறது. மேலும் இந்த மென்பொருள் உதவியுடன் மொழிபெயர்ப்பும் செய்துகொள்ள முடியும். 


மேலும் கரன்சி கன்வெர்ட்டரும் இந்த மென்பொருளில் உள்ளது. எண் வடிவிலான நாணய இலக்கங்களை எழுத்து வடிவாக மாற்றவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

எழுத்துபிழையை சரிசெய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
தட்டச்சு செய்யும் போது கண்டிப்பாக எழுத்துபிழை ஏற்படும், ஒரு சிலர் அதை கண்டறிந்து சரிசெய்து விடுவார்கள். ஆனால் ஒருசிலரால் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழையை கண்டறிய முடியாது. இதற்கு காரணம் நாம் அவசரம் அவசரமாக தட்டச்சு செய்வது மட்டுமே ஆகும். இதனை சரி செய்ய நாம் ஏதாவது ஒரு ஸ்பெல்செக் அப்ளிகேஷன் ஒன்றை நம் கணினியில் நிறுவியிருந்தால் தவறாக தட்டச்சு செய்யும் போது நாம் செய்யும் பிழையை சுட்டிகாட்ட ஏதுவாக இருக்கும். எழுத்துபிழையை சரி செய்ய உதவும் மென்பொருள்களில் tinySpell ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிமையாக எழுத்துபிழைகளை கண்டறிந்து சரி செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த அப்ளிகேஷனை தொடக்கம் செய்து விட்டு, பின் நீங்கள் விண்டோஸ் அப்ளிகேஷன் கொண்டு தட்டச்சு செய்யும் போது பிழை ஏதும் செய்தால் சுட்டிகாட்டி அதை சரி செய்வதற்கான இணைப்பும் கிடைக்கும்.


இந்த tinySpell அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் இயங்கும், இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பயனர் விருப்பபடி அப்ளிகேஷனை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். வேண்டிய வார்த்தைகளை இணைத்துக்கொள்ளவும் tinySpell வழிவகை செய்கிறது.

PDF பைல்களின் அளவை குறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கோப்புகளின் அளவை குறைக்க வேண்டுமெனில் நாம் அந்த குறிப்பிட்ட கோப்பினை ஜிப் அல்லது ரேர் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். ஆனால் பிடிஎப் கோப்பின் அளவை அதனுடைய பார்மெட்டிலேயே வைத்து மாற்ற முடியும். இதனை நாம் இலவச மென்பொருள் கொண்டும் செய்ய முடியும். இல்லையெனில் இணையத்தின் உதவியுடன் ஆன்லைனிலேயே செய்யலாம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு பின் Download பொத்த்டானை அழுத்தவும். பின் மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த பிடிஎப் கோப்பின் அளவை குறைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் கன்வெர்ட் செய்த பிடிஎப் கோப்பினை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் குறிபிட்டு விட்டு பின் Start batch என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் பிடிஎப் கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டுவிடும்.


பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யும் போது அதனை நம்முடைய விருப்ப தேர்வு மூலமாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

ஆன்லைன் மூலமாக பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்ய

PDFaid  தளத்தில் இலவசமாகவே பிடிஎப் கோப்புகளின் அளவை குறைக்க முடியும். இந்த தளத்திற்கு சென்று பிடிஎப் பைலை தேர்வு செய்து பின் விருப்ப தேர்வுகளை STEP 2 வில் அமைத்துக்கொண்டு


பின் Compress Pdf என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் பைல் கன்வெர்ட் செய்யப்பட்டு அதை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும். மேலும் இந்த தளத்தில் 20எம்.பி அளவுக்கு மேல் உள்ள பைல்களை கன்வெர்ட் செய்ய இயலாது.

தளத்திற்கான சுட்டி

மைக்ரோசாப்ட் கணக்கில் 2-step வெரிபிகேஷனை எனேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
2-step வெரிபிகேஷன் என்பது நாம் முதலில் ஒரு  பயனர் கணக்கில் உள்நுழையும் போது நமது செல்பேசிக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ ஒரு இரகசிய இலக்க எண் வரும். அதனை உள்ளிட்டால் மட்டுமே பயனர் கணக்கை திறக்கலாம். இந்த 2-step வெரிபிகேஷன் வசதி இருப்பதால் நம் அனுமதி இல்லாமல் நம் பயனர் கணக்கை எவராலும் திறக்க இயலாது. 2-step வெரிபிகேஷன் ஏற்கனவே கூகுள் கணக்கிற்கு இருக்கிறது. தற்போது இந்த வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. 2-step வெரிபிகேஷன் வசதியை உங்கள் மைக்ரோசாப்ட் கணக்கில் எனேபிள் செய்ய முதலில் உங்கள் மைக்ரோசாப்ட் கணக்கில் உள்நுழையவும்.

பின் https://account.live.com/proofs/Manage என்ற முகவரிக்கு செல்லவும். தோன்றும் விண்டோவில் கைபேசி எண் இருக்கும். அதனை சரி பார்த்து விட்டு Next பொத்தானை அழுத்தவும்.


நீங்கள் குறிப்பிட்ட கைபேசி எண்னிற்கு இரகசிய இலக்க எண் வந்திருக்கும். அதனை உள்ளிட்டு submit பொத்தானை அழுத்தவும்.
அவ்வளவுதான் வேலை முடிந்தது இனி நீங்கள் மைக்ரோசாப்ட் கணக்கை திறக்கும் போது கைபேசிக்கு கடவுச்சொல் வரும் அதை உள்ளிட்டால் மட்டுமே மைக்ரோசாப்ட் கணக்கை திறக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை மறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இரகசியமாக தகவல்களை கணினியில் சேமித்து வைக்க நாம் ஏதாவது ஒரு கோப்புகளை மறைக்கும் மென்பொருளை பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்துவதால் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகளை திருட ஹேக்கர்களுக்கு வாய்ப்பு அதிகம். சாதாரணமாக தகவல்களை மறைத்து வைக்க விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி இருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option வசதியை பயன்படுத்தி எளிதாக கோப்புகளை மறைத்துவிடலாம். ஆனால் இதனை யார் வேண்டுமானாலும் ஒப்பன் செய்துவிட முடியும். என்பதால் கணினி பயன்பாட்டாளர்கள் இதனை கையாள மாட்டார்கள். விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option யை பயன்படுத்தி கோப்புகளை மறைத்துவிட்டு பின் இந்த Folder Option யை டிசேபில் செய்து விட்டால் எவராலும் நாம் மறைத்த கோப்பை எடுக்க முடியாது. ஆனால் நாம் கோப்பை மறைத்த வழியிலேயே சென்று Folder Option யை எனேபிள் செய்து விட்டால் மீண்டும் எடுத்து விடலாம் அதையும் தடுக்க ஒரு வழி உண்டு அவற்றை பற்றி கீழே விரிவாக காண்போம்.

எப்போதும் போல எந்தெந்த கோப்பறைகளை மறைக்க விரும்புகிறீர்களோ அதன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Properties என்னும் தேர்வினை கிளிக் செய்யவும்.


பின் General டேப்பினை தேர்வு செய்து பின்Attributes: என்னும் விருப்பதேர்வில் Hidden என்னும் டிக் பாக்சை டிக் செய்துவிட்டு பின் OK செய்து விடவும்.


பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து Tools மெனுபாரை கிளிக் செய்யவும். அதில் Folder Option என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். 


View என்னும் டேப்பினை கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Hidden files and folders என்னும் விருப்ப தேர்வில் Don't show hidden files,folders,or drives என்பதை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் மறைத்த கோப்பானது முழுமையாக மறைந்து விடும். இதே வழியில் சென்று Show hidden files , folders, or drives என்னும் தேர்வினை தேர்வு செய்யும்போது மறைத்து வைத்திருந்த கோப்புகள் அனைத்தையும் காண முடியும். 

இதனை தடுக்க Folder Option யை கணினியில் டிசேபிள் செய்து விட்டால் போதும். போல்டர் ஆப்ஷனை டிசேபிள் செய்ய Group Policy யை நாட வேண்டும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். ரன் விண்டோ தோன்றும் அதில் gpedit.msc என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் வலதுபுறம்  Removes the Folder Options menu item from the Tools menu என்னும் அமைப்பின் மீது இரண்டு முறை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் தேர்வினை கிளிக் செய்து OK பொத்தானை அழுத்தவும்.


இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Tools ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Folder Option நீக்கப்பட்டிருக்கும்.

இதையும் இதே வழியில் சென்று எனேபிள் செய்து விட்டு கோப்பினை எடுத்து விடுவார்கள் என்றால் நீங்கள் மற்றொரு பயனர் கணக்கினை விண்டோஸ் இயங்குதளத்தில் துவங்கவும். அது Standard user ஆக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். உங்களுடைய தற்போதைய பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கிவிடுங்கள். உங்கள் நண்பர்கள் யாரும் உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்டசத்தில் அவர்கள் புதியதாக உருவாக்கிய கணக்கில் நுழைந்து கணினியில் பணியாற்ற சொல்லுங்கள். அவர்களால் குருப்பாலிசியை ஒப்பன் செய்ய இயலாது. போல்டர் ஆப்ஷனை ஒப்பன் செய்ய இயலாது. நீங்கள் வழக்கம் போல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து பயன்படுத்துங்கள். கோப்பு தேவைப்படும் போது மேலே கூறிய வழியில் சென்று எனேபிள் செய்துவிட்டு கோப்பினை பயன்படுத்த முடியும்.

போட்டோக்களை எடிட் செய்ய - PC Image Editor

♠ Posted by Kumaresan Rajendran in ,
போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு மென்பொருள் இருந்தாலும் , கணினி பயன்பாட்டாளர்களால்  அனைத்து மென்பொருள்களையும் முழுமையாக பயன்படுத்த தெரிந்திருக்காது. போட்டோவில் சிறுசிறு மாற்றங்களை செய்ய கூட பெரிய மென்பொருள்களில் உதவியை நாடி செல்வர் ஆனால் அவர்களால் அந்த குறிப்பிட்ட மென்பொருளில் அந்த வேலைகளை சரியாக செய்து முடிக்க இயலாது.

இதற்கு பதில் சிறு மென்பொருள்களின் உதவியுடன் போட்டோ எடிட்டிங் வேலைகளை அருமையா செய்து முடிக்க முடியும். இதற்கு PC Image Editor என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.  பின் PC Image Editor அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 

அதில் Open என்னும் பொதியை அழுத்தி எடிட் செய்ய வேண்டிய படத்தை தேர்வு செய்யவும். பின் படத்தினை விருப்பபடி எடிட் செய்து கொள்ளவும். PC Image Editor மென்பொருள் மூலமாக கீழே காணும் அனைத்து எடிட்டிங் வேலைகளையும் செய்ய முடியும்.
  • Brightness Adjustment
  • Contrast Adjustment
  • Saturation/Gamma/Hue Adjustment
  • Lightness Adjustment
  • RGB Color Adjustment
  • Auto Contrast
  • Auto Levels
  • Invert and etc.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். அளவில் மிகச்சிறிய மென்பொருள் ஆகும்.

Youtube வீடியோவினை விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்ய - நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்கள் பல இருக்கிறன அவைகளை கொண்டு Youtube வீடியோவினை பதிவிறக்கம் செய்யும் போது நாம் அந்த குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) காப்பி செய்து அந்த Youtube டவுண்லோடர் மென்பொருளில் ஒட்ட வேண்டும். அப்போது மட்டுமே அந்த குறிப்பிட்ட வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகாமல் அடம் பிடிக்கும். 

இதற்கு பதிலாக Youtube வீடியோவினை காணும் போதே அதனை பதிவிறக்கம் செய்தால் எப்படி இருக்கும். அதற்கு நாம் அந்த குறிப்பிட்ட உலாவியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே முடியும். நெருப்புநரி உலாவியில் Youtube வீடியோவினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில்  உலாவியில் நீட்சியை இணைத்துக்கொள்ளவும். நீட்சியை தரவிறக்க சுட்டி 


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Add to Firefox எனும் பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் மேலே நீட்சியை பதிவிறக்க அனுமதி கேட்கும். Allow எனும் தேர்வினை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Install Now என்னும் பொத்தானை அழுத்தவும்.


உங்களுடைய நெருப்புநரி உலாவியில் நீட்சி நிறுவப்பட்டு பின் நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்ய அனுமதி கேட்கும்.


அனுமதித்தவுடன் நெருப்புநரி உலாவி மறுதொடக்கம் ஆகும். பின் நெருப்புநரி உலாவியில் Youtube தளம் சென்று வீடியோவினை காணுங்கள் அப்போது அந்த குறிப்பிட்ட வீடியோவின் கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இருக்கும். அதை பயன்படுத்தி வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


நீங்கள் விரும்பும் பார்மெட்களில் வீடியோவை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சியாகும்.

இறப்புக்கு பின் கூகுள் கணக்கினை அழிக்க மற்றும் தகவல்களை மாற்ற - Inactive Account Manager

இணையப்பயன்பாட்டில் அனைத்து இணைய பயனாளர்களும் ஏதோ ஒரு வகையில் கூகுளில் வசதியை பெற்று வருகிறனர். குறிப்பாக ப்ளாக், யூடுப், ஜிமெயில் , கூகுள் ப்ளஸ் மற்றும் பல்வேறு வசதிகளை பெறுகிறனர். பெரும்பாலும் இந்த வசதிகளை அனுக கூகுள் கணக்கு தேவைப்படும். 

இவ்வாறு காலம் காலமாக பயன்படுத்தி வரும் கூகுள் கணக்கு நாம் இறந்த பின் என்னவாகும். நம்முடைய கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே அந்த கணக்கினை கையாள முடியும். இதற்கு பதிலாக நாம் ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் இருந்தால் நம்முடைய கூகுள் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் வேறு மின்னஞ்சலுக்கு கூகுளே அனுப்பிவிடும். 

இவ்வாறு செய்வதனால் நமக்கு பின் நாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்கள் அழியாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

Inactive Account Manager  வசதியினை எனேபிள் செய்தால் மட்டுமே கூகுள் நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

Inactive Account Manager வசதியினை எனேபிள் செய்ய முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Account Settings செல்லவும்.

Account Settings செல்ல சுட்டி 

பின் Account Management என்னும் பட்டையின் கீழ் உள்ள Learn more and go to setup தேர்வினை கிளிக் செய்யவும்.


 இல்லையெனில் நேரடியாக Inactive Account Manager  செல்ல இங்கு கிளிக் செய்யவும். 


கிளிக் செய்தவுடன்  தோன்றும் விண்டோவில் Setup என்னும் பொத்தானை அழுத்தவும்.


நீங்கள் அடுத்து தோன்றும் விண்டோவில் Add mobile phone number என்பதை கிளிக் செய்து மொபைல் எண்னை உள்ளிடவும். அந்த மொபைல் எண்னிற்கு கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும் அதை உள்ளிட்டு மொபைல் எண்னை உறுதிபடுத்திக்கொள்ளவும். பின் Add alternative email என்னும் தேர்வினை அழுத்தி மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துக்கொள்ளவும்.


ஸ்குரோல் செய்து விண்டோவினை கீழிறக்கவும். அதில் எவ்வளவு காலம் நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் , கூகுள் கணக்கில் உள்ள தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய கோப்புகளை  கூகுள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடவும். 3,6,9 மாதம் அல்லது 1 வருடம் என்று குறிப்பிட்டு கொள்ளலாம்.  அதற்கேற்ப Timeout Period மாறும். 3 மாதம் என்றால் 1 மாதமாகவும், 6,9 மாதம் என்றால் 2 மாதமாகவும், 1 வருடம் என்றால் 3 மாதமாகவும் இருக்கும். 

இந்த Timeout Period என்பது உங்கள் கூகுள் கணக்கினை அழிக்கும் முன்னரோ அல்லது தகவல்களை நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் முன்னர்,  தொலைபேசி எண்னுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பும் காலத்தை குறிப்பிடும். அதாவது உங்கள் கணக்கினை அழிக்கும் முன்னர் தகவல் அனுப்பபடும்.அதற்கு பின் கூகுள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கூகுள் கணக்கு ஒப்பன் செய்யபடவில்லையெனில் கூகுள் இந்த வசதியை செயல்படுத்திவிடும்.நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து கூகுள் கணக்கு தொடர்பான தகவல்களை அனுப்ப விரும்புகீறீர்களோ அதனை குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரியினை சேமித்துக்கொள்ளவும்.


தகவல்களை வேறு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டாம் அதற்கு பதில் கூகுள் கணக்கினை நிரந்தரமாக அழித்துவிடலாம் என்றால், Delete my account என்பதற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்தி Yes என்று தேர்வு செய்து கொள்ளவும். 

பின் இறுதியாக எனேபிள் பொத்தானை அழுத்தி நீங்கள் Inactive Account Manager  வசதியினை உங்கள் கூகுள் கணக்கில் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்களை கணினியில் இயக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போது மொபைல் தொழில்நுட்பத்தின் புரட்சி ஆன்ட்ராய்ட்  மொபைல் இயங்குதளம் ஆகும். இந்த ஆன்ட்ராய்ட் மொபைல் இயங்குதளம் தற்போது கூகுள் வசம் உள்ளது. ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் வகையில் லட்சகணக்கான அப்ளிகேஷன்களும் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்கள் ஆன்ட்ராய்ட் சந்தையில் கிடைக்கிறது. இதனை நாம் இலவசமாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு உள்ள அப்ளிகேஷன்களை ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை கணினியில் இயக்க வழி இருக்கிறதா என்றால் கண்டிப்பாக வழி உண்டு. இதற்கு BLUESTACKS என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த மென்பொருளை கணினியில் முழுமையாக நிறுவ முடியும். 


இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். மேலும் மேக் இயங்குதளத்திற்கும் இந்த மென்பொருள் இருக்கிறது. BLUESTACKS மென்பொருளை கணினியில் முழுதாக நிறுவியவுடன் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு BLUESTACKS அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

பின் தேடு சுட்டியை அழுத்தி எந்த மென்பொருள் வேண்டுமோ அதை தேடி பின் கணினியில் உள்ள BLUESTACKS அப்ளிகேஷன் உள்ளே நிறுவிக்கொள்ள முடியும். 

இந்த BLUESTACKS அப்ளிகேஷனில் மேலும் ஒரு வசதி உள்ளது, ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல் சாதனத்தை இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கு Setting ஐகானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Cloud Connect என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Yes என்னும் ஆப்ஷன் பட்டியை  தேர்வு செய்து Next எனும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்னை உள்ளிட்டு Register எனும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்து வரும் விண்டோவில் பின் நம்பர் வரும் அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் Play Store னை ஒப்பன் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் BlueStacks Cloud Connect என்று உள்ளிட்டு தேடவும். வரும் முடியும் குறிப்பிட்ட மென்பொருளை ஆன்ட்ராய்ட் மென்பொருளில் நிறுவிக்கொள்ளவும்.


பின் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் அந்த பின் என்னை குறிப்பிட்டு Login பொத்தானை அழுத்தவும். 


சிறிது நேரம் கழித்து ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் மொபைல் போனில் உள்ள எந்தெந்த அப்ளிகேஷன்களை கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனுடன் இணைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து பின் Sync என்னும் பொத்தானை அழுத்தவும். 

மொபைல் போனில் இணைய இணைப்பு வேகமாக இருந்தால் விரைவாக பதிவேற்றம் ஆகும். 


அடுத்து கணினியில் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன். மொபைல் போன் மற்றும் கணினி இரண்டிலும் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் அனைத்தும் கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனில் ஒரு நகல் இருக்கும். மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்களை இப்போது கணினியிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங் திரையை மாற்ற

விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை. 

விண்டோஸ் இருப்பியல்பு திரையை மாற்றி நம்முடைய படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை இருக்கும். நமக்கு பிடித்தமான படத்தை பூட்டிங் திரையாக வைக்க இரண்டு வழி உண்டு ஒன்று இயங்குதளத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து வைக்க வேண்டும். மற்றொன்று மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் வைக்கலாம்.

இயங்குதளம் மூலமாக பூட்டிங் திரையை மாற்றுதல்

முதலில் வின்கி மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு ஒகே செய்யவும். தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background


பின் Background என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறம் OEMBackground என்பதை டபுள் கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்பதில் 1 என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தி ரிஸிஸ்டரி எடிட்டரை மூடி விடவும்.

அடுத்து C:\Windows\System32\oobe எனும் வரிசையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். நீங்கள் இயங்குதளத்தை எந்த ட்ரைவில் நிறுவியுள்ளீர்களோ அந்த ட்ரைவில் ஒப்பன் செய்யவும். இங்கு C: ட்ரைவில் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. 

அடுத்து oobe எனும் கோப்பறையினுள் info எனும் கோப்பறையையும் அதனுள் backgrounds எனும் கோப்பறையையும் உருவாக்கவும்.அதனுள் நீங்கள் பூட்டிங் திரையில் வைக்க விரும்பிய படத்தை காப்பி செய்யவும். அந்த படத்திற்கு backgroundDefault.jpg என்று பெயரை மாற்றிக்கொள்ளவும். அந்த படமானது .jpg இருக்கும் பட்சத்தில்  256 கே.பி அளவுக்குள் இருத்தல் அவசியம் ஆகும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக வந்திருக்கும். 

மென்பொருள் மூலம் பூட்டிங் திரையை மாற்ற

மேலே குறிப்பிட்ட முறையை செய்ய நேரம் போதவில்லை என்போருக்கு எளிதாக இலவச மென்பொருள் உதவியுடன் பூட்டிங் திரையை மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் VSLogonScreenCustomizer  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அதில் Open Picture File என்னும் பொத்தானை அழுத்தி படத்தினை தேர்வு செய்யவும். பின் Apply எனும் பொத்தானை அழுத்தவும். User image has been set on logon screen successfully என்ற செய்தி வரும். 

தற்போது கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள், நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக அமர்ந்திருக்கும்.


மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்தி எளிதாக பூட்டிங் திரையை மாற்றிக் கொள்ள முடியும். இது விண்டோஸ் விஸ்டாவிற்கும் பொருந்தும்.