தமிழில் கணினி செய்திகள்

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்களை கணினியில் இயக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at April 13, 2013
தற்போது மொபைல் தொழில்நுட்பத்தின் புரட்சி ஆன்ட்ராய்ட்  மொபைல் இயங்குதளம் ஆகும். இந்த ஆன்ட்ராய்ட் மொபைல் இயங்குதளம் தற்போது கூகுள் வசம் உள்ளது. ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் வகையில் லட்சகணக்கான அப்ளிகேஷன்களும் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்கள் ஆன்ட்ராய்ட் சந்தையில் கிடைக்கிறது. இதனை நாம் இலவசமாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு உள்ள அப்ளிகேஷன்களை ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை கணினியில் இயக்க வழி இருக்கிறதா என்றால் கண்டிப்பாக வழி உண்டு. இதற்கு BLUESTACKS என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த மென்பொருளை கணினியில் முழுமையாக நிறுவ முடியும். 


இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். மேலும் மேக் இயங்குதளத்திற்கும் இந்த மென்பொருள் இருக்கிறது. BLUESTACKS மென்பொருளை கணினியில் முழுதாக நிறுவியவுடன் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு BLUESTACKS அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

பின் தேடு சுட்டியை அழுத்தி எந்த மென்பொருள் வேண்டுமோ அதை தேடி பின் கணினியில் உள்ள BLUESTACKS அப்ளிகேஷன் உள்ளே நிறுவிக்கொள்ள முடியும். 

இந்த BLUESTACKS அப்ளிகேஷனில் மேலும் ஒரு வசதி உள்ளது, ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல் சாதனத்தை இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கு Setting ஐகானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Cloud Connect என்பதை தேர்வு செய்யவும்.




அடுத்து தோன்றும் விண்டோவில் Yes என்னும் ஆப்ஷன் பட்டியை  தேர்வு செய்து Next எனும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்னை உள்ளிட்டு Register எனும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்து வரும் விண்டோவில் பின் நம்பர் வரும் அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் Play Store னை ஒப்பன் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் BlueStacks Cloud Connect என்று உள்ளிட்டு தேடவும். வரும் முடியும் குறிப்பிட்ட மென்பொருளை ஆன்ட்ராய்ட் மென்பொருளில் நிறுவிக்கொள்ளவும்.


பின் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் அந்த பின் என்னை குறிப்பிட்டு Login பொத்தானை அழுத்தவும். 


சிறிது நேரம் கழித்து ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் மொபைல் போனில் உள்ள எந்தெந்த அப்ளிகேஷன்களை கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனுடன் இணைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து பின் Sync என்னும் பொத்தானை அழுத்தவும். 

மொபைல் போனில் இணைய இணைப்பு வேகமாக இருந்தால் விரைவாக பதிவேற்றம் ஆகும். 


அடுத்து கணினியில் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன். மொபைல் போன் மற்றும் கணினி இரண்டிலும் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் அனைத்தும் கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனில் ஒரு நகல் இருக்கும். 



மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்களை இப்போது கணினியிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

2 Comments:

I have installed Linux Mint Release 13 (Maya). I would like to install similar apps like this, under Linux. I have Andorid Phone. My main purpose is to download NHM reader to read tamilfonts and read long pending Ponniyin selvan. Could you please guide me to download? As my mobile phone is HTC wildfire, most of the apps are saying incompatible. Andorid version is 2.0. If i manage to install Andorid under Linux platform, it is much helpful. Regards

Hari

Post a Comment