தமிழில் கணினி செய்திகள்

விஎல்சி மீடியா பிளேயர் உதவியுடன் வெப்கேம் ரெக்கார்டிங்

♠ Posted by Kumaresan Rajendran in


வெப்கேமினை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய மென்பொருள்கள் பல உள்ளன. சில நேரங்களில் நம்மால் அந்த குறிப்பிட்ட மென்பொருள்களை பயன்படுத்த முடியாது. அதுபோன்ற நிலையில் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி வீடியோவினை பதிவு செய்ய முடியும். மேலும் புதியதாக வெப்கேம் வாங்கி பயன்படுத்தும் போதும் அது சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை சரிபார்ப்பதற்கும் இந்த முறையினை பயன்படுத்தி பரிசோதித்து பார்க்க முடியும்.

இதற்கு முதலில் உங்கள் கணினியில் வெப்கேமினை இணைக்கவும், மடிக்கணினியில் வெப்கேம் இருப்பியல்பாகவே இருக்கும். ஒரு சில மடிக்கணினியில் வெப்கேம் இருக்காது. (தமிழகஅரசு வழங்கிய மடிக்கணினிகளில் வெப்கேம் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்). பின் விஎல்சி மீடியா பிளேயரை உங்கள் கணினியில் நிறுவவும்.

விஎல்சி மீடியா பிளேயரை பதிவிறக்க சுட்டி



இணையத்தின் உதவியுடன விஎல்சி மீடியா பிளேயரை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Open Capture Device என்பதை தேர்வு செய்யவும். அல்லது Ctrl + c என்னும் சுருக்கு விசையை பயன்படுத்தவும்.



தோன்றும் விண்டோவில் Capture Device என்னும் டேப்பினை தேர்வு செய்து Video device name என்பதற்கு எதிரே உள்ள கோம்போ பாக்சில் வெப்கேமினை தேர்வு செய்யவும். 



பின் Media என்னும் பைல் மெனு பொத்தானை அழுத்தி தோன்றும் வரிசையில் Convert/Save என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் விண்டோவில் File என்னும் டேப்பினை தேர்வு செய்து, பின் Convert / Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். இப்போது விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும் அப்போது வீடியோவானது பதியப்படும் அதனை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
 

VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
விஎல்சி மீடியா பிளேயரானது ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும். விஎல்சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை விஎல்சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய விஎல்சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது விஎல்சி வீடியோவானது



இப்போது வீடியோவினை நேரடியாகவே விஎல்சி பிளேயரில் காண முடியும். கணினியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது. அதுபோன்ற சமயங்களில் இந்த விஎல்சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.