தமிழில் கணினி செய்திகள்

GIF - இமேஜ்களை உருவாக்க

இணையத்தில் நாம் பார்க்கும் ஒரு நிகழ்வினை படமாக்க வேண்டுமெனில், சாதரணமாக விண்டோஸ் இயங்குதளத்தில் PrtScn பொத்தானை அழுத்தி நாம் பார்க்கும் கணினி திரையினை முழுவதுமாக நகலெடுத்துக்கொள்ள முடியும். இது வெறும் (.jpeg, .png, .tiff) போன்ற பார்மெட்களில் மட்டுமே கணினியில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 

நாம் கணினியில் பார்க்கும் நிகழ்வினை தொடர்ச்சியாக படமாக்க வேண்டுமெனில் ஒன்று வீடியோ எடுக்க வேண்டும். இல்லையெனில் அதனை .gif பைல் பார்மெட்டில் போட்டோவாக எடுக்க வேண்டும்.  .gif இமேஜினை உருவாக்க  ScreenToGif என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி




மென்பொருளை தரவிறக்கி பின் அன்ஜிப் செய்துகொண்டு பின் Screen To Gif அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதனை கொண்டு கணினியில் நடக்கும் அனைத்து விதமான செயல்களையும் படம் பிடிக்க முடியும். நான் வேர்ட் தொகுபினை படம் எடுத்துள்ளேன்.

எப்பொழுது படம் எடுக்க வேண்டுமோ அப்போது Record என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே ரெக்கார்ட் ஆக தொடங்கி விடும். பாதியில் நிறுத்த வேண்டுமெனில் Pasue பொத்தானை அழுத்தி நிறுத்தி கொள்ளவும். பின் இறுதியாக ரெக்கார்ட் முடிந்தவுடன் Stop பொத்தானை அழுத்தி ரெக்கார்டினை நிறுத்திக்கொள்ளவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் Done என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே ஜிப் பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.


மேலே குறிப்பிட்ட விண்டோவானது நானே உருவாக்கிய ஜிப் பைல் ஆகும். மேலும் இந்த மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஜிப் பைலின் வேகத்தை நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இதனைப்போன்று Frame வசதியினை கொண்டு ஜிப் பைலினை எளிதாக அழகு தோற்றத்தில் மாற்ற முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

படங்களின் வண்ணங்களை மாற்ற

எந்த ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்கு புதியதாக பயனர் கணக்கு ஒன்று உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பயனர் கணக்குகளுக்கு படங்களை அமைக்க வேண்டும். அதே போன்று சோஷியல் தளங்களான முகநூல், டுவிட்டர், கூகுள்+ போன்ற தளங்களிலும் அடிக்கடி படங்களை பகிர்ந்து கொள்வோம். சாதரணமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதனை மெறுகேற்றம் செய்து வண்ணமயமாக பகிர்ந்து கொண்டால் அழகாக இருக்கும். படங்களை வண்ணமயக்காக ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் படத்தினை ஒப்பன் செய்து பின் Randomize எனும் பொதியை கிளிக் செய்யவும். அடுத்தடுத்து கிளிக் செய்தால் படத்தின் வண்ணம் தொடர்ந்து மாற்றமடையும். 

பின் படத்தினை .jpg, .gif, .pcx, .png, .bmp, .tif, .tga போன்ற பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.  படத்தினை திருப்பிகொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

MailBird - ஜிமெயில் மின்னஞ்சல் கிளையண்ட்

இணைய உலகில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வழி மின்னஞ்சல் ஆகும். இந்த வகையில் மினனஞ்சல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. அதில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த சேவையினை இன்று மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதத்தினர் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன. இந்த மின்னஞ்சல் வசதியை நேரிடையாக உலாவில்யில் திறந்து பயன்படுத்த முடியும். மேலும்  கிளையண்ட்கள் பல உள்ளன அதில் முதன்மையானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் ஆகும். மேலும் பல இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது அதில் ஒன்றுதான் MailBird ஆகும். இது ஜிமெயிலுக்கென உருவாக்கப்பட்டது ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் இந்த MailBird அப்ளிகேஷனை கணினியில் நிறுவவும். கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. 


அப்ளிகேஷனை கணினியில் நிறுவிய பின் ஜிமெயிலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் புதியதாக மின்னஞ்சல் அனுப்புதல், ஏற்கனவே வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடுதல் போன்ற செயல்களை இலகுவாக செய்ய முடியும்.

மென்பொருள்களுக்கு பூட்டு போட

♠ Posted by Kumaresan Rajendran in
பாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம். அதை எவ்வாறு பத்திரமாக வைக்க முடியும் என்று நினைப்பீர்கள். நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை பிறர் பயன்படுத்தாதவாறு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க முடியும். இதனால் நாம் மட்டுமே அந்த குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை கணினியில் நிறுவும் போதே முதன்மை கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Password Door அப்ளிகேஷனை திறக்கவும். 


கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்த வரிசையில் நீங்கள் தேடும் மென்பொருள் இல்லையெனில் Browse Folder ஐகானை அழுத்தி மென்பொருளை தெரிவு செய்து கொள்ளவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் விருப்ப தேர்வுகளை தெரிவு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


அடுத்து தோன்றும் விண்டோவானது, பூட்டு போட்ட மென்பொருள்களை நீக்கவும், புதியதாக மென்பொருள்களை சேர்க்கவும் முடியும்.


கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்த மென்பொருளை திறக்கும் போது மேலே தோன்றும் விண்டோ போல் தோன்றும் அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் திறந்து கொள்ள முடியும்.

ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும் பின் ஒரு பைல் பதிவிறக்கம் ஆகும்.  பின் பதிவிறக்கம் ஆன பைலை நிறுவவும் கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. இணைய வேகத்திற்கு ஏற்ப அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு விடும்.


பின் அந்த மென்பொருள்களை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளிவரும் போது அதனை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.

இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்கள்

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின்  பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் டவுண்லோட் மேனேஜர் மென்ப்பொருள்கள் கிடைக்கிறன. அவற்றில் முதன்மையான மென்பொருள்கள்

1.GETGO Download Manager


இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO டவுண்லோட் மேனேஜர் மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

2.Free Download Manager


இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும். இந்த டவுண்லோட் மேனேஜர் மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி

3.Internet Download Accelerator


இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து வீடியோக்களை நேரடியாக டவுண்லோட் மேனேஜர் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

 4.Shareaza Download Manager 


இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் டோரன்ட் டவுண்லோடரும் இந்த மென்பொருளில் இருப்பியல்பாக உள்ளது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருள் உதவியுடன் பார்க்கவும் முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தற்போது மொபைல் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தற்போது தங்களுடைய மொபைல்களில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்ளிகேஷன்கள் சந்தையில் கிடைக்கிறன. இவை அனைத்தையும் கூகுள் பிளே ஸ்டோரில் ஒருங்கே பெற முடியும். இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தற்போது கூகுள் வசம் உள்ளது. இந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் உள்ள சாதனங்களில் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை  கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு வழி உள்ளது. இதற்கு Real APK Leecher மென்பொருள் வழிவகை செய்கிறது.

முதலில் உங்கள் ஆன்ட்ராய் மொபைல் போனின் டிவைஸ் ஐடியை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் கீழ்காணும் கோடினை உள்ளிடவும் இதன் மூலம் டிவைஸ் ஐடியை பெற முடியும். 

*#*#8255#*#*



பின் டவுண்லோட் செய்த Real APK Leecher மென்பொருளை அன்ஜிப் செய்து பின் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
 



தோன்றும் விண்டோவில் Edit -> Option என்னும் மெனு பொத்தானை ஒப்பன் செய்யவும். 


பின் தோன்றும் விண்டோவில் கூகுள் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் டிவைஸ் ஐடியை  உள்ளிட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும். பின் Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்து கொள்ளவும்.


பின் Real APK Leecher அப்ளிகேஷனை ஒப்பன் செய்து குறிச்சொல்லை உள்ளிட்டு குறிப்பிட்ட மென்பொருளை தேடவும். பின் தோன்றும் வரிசையில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய மென்பொருளை முதலில் தேர்வு செய்து பின் வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Download this app என்பதை அழுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



சிறிது நேரத்தில் மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி தோன்றும். பின் நாம் குறிப்பிட்ட இடத்தில் மென்பொருள் .apk பைல் பார்மெட்டில் இருக்கும். இந்த மென்பொருளை நாம் ஆன்ட்ராய்ட் சாதனத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பார்மெட் செய்த வன்தட்டு மற்றும் பெண்ட்ரைவ்களில் இருந்து தகவல்களை மீட்டெடுக்க



ஒரு சில நேரங்களில் பெண்ட்ரைவ் மற்றும் வன்தட்டினை பார்மெட் செய்து விடுவோம், அதன் பின்பு அவ்வாறு பார்மெட் செய்த வன்தட்டு மற்றும் பெண்              ட்ரைவில் உள்ள தகவல்கள் தேவைப்படும். இதே போன்று டெலிட் செய்த கோப்புகளும் சில நேரங்களில் நமக்கு தேவைப்படும். அது போன்ற நேரங்களில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க ஏதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்தி மட்டுமே மீட்டெடுக்க முடியும். எந்த மென்பொருளை பயன்படுத்தி தகவல்களை மீட்டெடுத்தாலும் அன்மையில் சேமித்து இழந்த தகவல்களை மீட்டெடுக்க முடியாது. இந்த பிரச்சினையை தீர்த்து அன்மையில் இழந்த தகவல்களை மீட்டெடுக்க உத்வும் மென்பொருள் ஒன்று இருக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி, பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்வதற்கு முன் கணினியுடன் பெண்ட்ரைவையோ அல்லது வன்தட்டினையோ இணைக்கவும். பின் Recover Files அல்லது Recover Drive என்ற விருப்ப ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்து பின் Next என்னும் பொத்தானை அழுத்தவும்.



அடுத்து தோன்றும் விண்டோவில் ட்ரைவினை தேர்வு செய்து பின் Next என்னும் பொத்தானை அழுத்தவும். 



அடுத்து தோன்றும் விண்டோவில் Search for deleted files. என்னும் ஆப்ஷன் பட்டனை தேர்வு செய்து பின் Start என்னும் பொத்தானை அழுத்தவும்.


பின் Save என்னும் மெனு பட்டனை அழுத்தி Save As தேர்வினை அழுத்தி தகவல்களை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்து, பின் தகவல்களை சேமித்துக்கொள்ளவும்.


இந்த மென்பொருள் மூலம் அன்மையில் நீக்கிய கோப்புகளை எளிதாக மீட்டெடுத்துக் கொள்ள முடியும். 

கணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன் மூலமாகவும் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.

கணினியில் தேவையில்லாமல் நிறுவியிருக்கும் மென்பொருள்களை நீக்கம் செய்வதன் மூலம் கணினி வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். கணினியில் இருக்கும் தேவையற்ற பைல்களை சிறப்பாக நீக்கம் செய்யவும், ரிஸிஸ்டரியை மேலும் சீர் செய்யவும். Baidu PC Faster என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் வேண்டும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, பின் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் SCAN பொத்தானை அழுத்தவும் அழுத்தியவுடன் தேவையற்ற பைல்களை வரிசைப்படுத்தும், பின் Clean பொத்தானை அழுத்தவும். அப்போது தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்கள் கணினியில் இருந்து நீக்கப்படும்.


மேலும் இந்த மென்பொருளில் இணைய வேகத்தை அறிந்து கொள்ளவும். அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கவும் முடியும். தனித்தனியே மீட்டெடுக்கும் வசதியும் உள்ளது.  குப்பைதெட்டியை தனியே ஸ்கேன் செய்து மீட்டெடுக்கவும் முடியும்.


கணினிக்கு தேவையான மென்பொருள்களையும் இந்த அப்ளிகேஷனில் இருந்த படியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அனைத்து மென்பொருள்களும் வகை வாரியாக உள்ளது. வேண்டிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 


மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியை பற்றிய விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் செயல் படக்கூடியது ஆகும்.

வேர்ட் கோப்பினை ஆடியோ கோப்பாக கன்வெர்ட் செய்ய

அலுவலங்கள் மற்றும் கணினி மையங்களில் கோப்புகளை உருவாக்க பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட் கொண்டோ உருவாக்கப்படுகிறது. ஆப்பிஸ் தொகுப்பை கொண்டு  உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும்.

இந்த வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகள் மிகச்சிறியதாகவும். அளவில் பல பக்கங்களை உள்ளட்டக்கியதாகவும், அதிகமான பக்கங்களை கொண்ட டாக்குமெண்ட்களை எளிதில் படித்துவிட முடியாது. இதனால் காலம் தாமதம் மட்டுமே ஆகும். இதற்கு பதிலாக எழுத்து வடிவில் உருவாக்கப்படும் கோப்புகளை ஒலி வடிவில்மாற்றம் செய்ய இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் டாட்நெட் ப்ரேம்வோர்க் அன்மைய பதிப்பு கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில் டாட்நெட் ப்ரேம் வோர்க் மென்பொருள் நீங்கள் பதிவிறக்கிய கோப்பில் இருக்கும் அதை கணினியில் நிறுவிக்கொள்ளவும். 


 பின் AudioDocs மென்பொருளை முழுமையாக ணினியில் நிறுவிக்கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். MS Word to AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் வேர்ட் கோப்பினை தேர்வு செய்து பின் ஒலியின் அளவு மற்றும் எவ்வளவு நேர இடைவெளியில் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு பின் Create AudioDoc என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சில நிமிடங்களில் ஆடியோ பைல் உருவாக்கப்பட்டுவிடும். உருவாக்கப்படும் ஆடியோ பைல் பார்மெட்டானது .wav பார்மெட்டில் இருக்கும். கன்வெர்ட் செய்யப்பட்ட ஆடியோ கோப்பினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங் திரையை மாற்ற

விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை. 

விண்டோஸ் இருப்பியல்பு திரையை மாற்றி நம்முடைய படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை இருக்கும். நமக்கு பிடித்தமான படத்தை பூட்டிங் திரையாக வைக்க இரண்டு வழி உண்டு ஒன்று இயங்குதளத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து வைக்க வேண்டும். மற்றொன்று மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் வைக்கலாம்.

இயங்குதளம் மூலமாக பூட்டிங் திரையை மாற்றுதல்

முதலில் வின்கி மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு ஒகே செய்யவும். தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background


பின் Background என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறம் OEMBackground என்பதை டபுள் கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்பதில் 1 என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தி ரிஸிஸ்டரி எடிட்டரை மூடி விடவும்.

அடுத்து C:\Windows\System32\oobe எனும் வரிசையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். நீங்கள் இயங்குதளத்தை எந்த ட்ரைவில் நிறுவியுள்ளீர்களோ அந்த ட்ரைவில் ஒப்பன் செய்யவும். இங்கு C: ட்ரைவில் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. 

அடுத்து oobe எனும் கோப்பறையினுள் info எனும் கோப்பறையையும் அதனுள் backgrounds எனும் கோப்பறையையும் உருவாக்கவும்.



அதனுள் நீங்கள் பூட்டிங் திரையில் வைக்க விரும்பிய படத்தை காப்பி செய்யவும். அந்த படத்திற்கு backgroundDefault.jpg என்று பெயரை மாற்றிக்கொள்ளவும். அந்த படமானது .jpg இருக்கும் பட்சத்தில்  256 கே.பி அளவுக்குள் இருத்தல் அவசியம் ஆகும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக வந்திருக்கும். 

மென்பொருள் மூலம் பூட்டிங் திரையை மாற்ற

மேலே குறிப்பிட்ட முறையை செய்ய நேரம் போதவில்லை என்போருக்கு எளிதாக இலவச மென்பொருள் உதவியுடன் பூட்டிங் திரையை மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் VSLogonScreenCustomizer  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அதில் Open Picture File என்னும் பொத்தானை அழுத்தி படத்தினை தேர்வு செய்யவும். பின் Apply எனும் பொத்தானை அழுத்தவும். User image has been set on logon screen successfully என்ற செய்தி வரும். 

தற்போது கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள், நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக அமர்ந்திருக்கும்.


மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்தி எளிதாக பூட்டிங் திரையை மாற்றிக் கொள்ள முடியும். இது விண்டோஸ் விஸ்டாவிற்கும் பொருந்தும்.

DVD யை ISO கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஒரு கோப்பினை வேறொரு பைலாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு கன்வெர்ட் மென்பொருள் துணைகொண்டு கண்வெர்ட் செய்வோம் அதேபோல் தான் டிவிடியில் உள்ள எந்தவொரு கோப்பினையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள் ஒன்று உள்ளது. அதன் துணைகொண்டு எளிதாக முழு டிவிடியையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றிக்கொள்ள முடியும்.

தற்போது இணையத்தில் பெரிய அளவுடைய பைல்களை சுருக்கி அனுப்ப பயன்படும் பார்மெட்களில் பெரும்பாலாக கையாளப்படுவது ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு, குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 

பின் டிவிடி ட்ரேயில் டிவிடியினை உள்ளிடவும். பின் Next பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் டிவிடியில் உள்ள முழு கோப்பும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். பின் இறுதியாக Open output  directory எனும் இணைப்பினை அழுத்தி கன்வெர்ட் செய்யப்பட்ட ஐஎஸ்ஒ பைலை பெற்றுக்கொள்ளவும்.

எக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பில் அன்மையில் வெளியான  சோதனை பதிப்பு 2013 இந்த பதிப்பு தற்போது பரவலாக கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில அலுவலகங்களில் ஆப்பிஸ் தொகுப்பான 2003 மட்டுமே இன்றுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிஸ் தொகுப்பான 2013 கொடு உருவாக்கப்படும் கோப்புகள் யாவும் ஆப்பிஸ் தொகுப்பான 2003 ல் ஒப்பன் ஆகாது. இதுபோன்ற சூழ்நிலையில் மூன்றாம் தர மென்பொருள்களை பயன்படுத்தி கன்வெர்ட் செய்து ஒப்பன் ஆகாத கோப்புகளை ஒப்பன் செய்து கொள்ள முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வேண்டிய எக்சல் கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளவும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் முழுமையாக செயல்பட வேண்டுமெனில்  ஆப்பிஸ் தொகுப்பு 2007 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.

இந்த எக்சல் கன்வெர்டை கொண்டு  XLS, XLSX, PDF, XPS, CSV ஆகிய பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 
 

கணினியில் உள்ள இணையத்தை மொபைல்போனில் பகிர்ந்துகொள்ள

சில தினங்களுங்கு முன் ஆன்ட்ராய்ட் மொபைல் போனை கொண்டு கணினியில் இணையத்தை இணைப்பது எவ்வாறு என்று பார்த்தோம். அந்த பதிவின் பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் கணினியில் உள்ள இணையத்தொடர்பை ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என வினா எழுப்பினார் இதோ அதற்கான பதில்.

கணினியில் இருக்கும் இணையத்தை மொபைல் போனில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் கணினியிலும் மொபைல் போனிலும் Wifi வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் கணினியில் உள்ள இணையத்தை நாம் எளிதாக மொபைல் போனில் இணைக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நெட்வோர்க் சேரிங்கை வைத்து இணைக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மூன்றாம்தர மென்பொருளின் உதவியுடன் இணைய இணைப்பினை மொபைல் போனுடன் இணைக்கும் போது எந்தவித பிரச்சினையும் இன்றி இணையம் இணைக்கப்படுகிறது.

முதலில் நம்முடைய கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும். ஈத்தர்நெட் இணைப்பு அல்லது டேட்டா கார்டு கொண்டு கணினியில் இணையத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். நான் ஈத்தர்நெட் வழியாக கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். 

அடுத்து mhotspot என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணினியில் நிறுவவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 


தோன்றும் விண்டோவில் Hotspot Name என்பதில் Wifi பெயரை உள்ளிடவும், பின்  கடவுச்சொல்லை உள்ளிடவும். அடுத்து Share From என்பதில் நீங்கள் பகிர இருக்கும் நெட்வோர்க்கினை தேர்ந்தெடுக்கவும். நான் ஈத்தர்நெட் வழியாக இணைய இணைப்பினை ஏற்படுத்தி உள்ளேன். எனவே Local Area Connection 2 என்பதை தெரிவு செய்துள்ளேன். நீங்கள் வேறு வழியில் கணினியுடன் இணையத்தை ஏற்படுத்தி இருந்தால் அதனை தெரிவு செய்து கொள்ளவும். அதிகபட்சமாக எத்தனை கணினி மற்றும் மொபைல் போனுடன் இந்த இணைய இணைப்பினை பகிர இருக்கிறீர்களோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start Hotspot என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.


தற்போது முழுமையாக Hotspot உருவாக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு செய்தி வரும். 



அடுத்து டாஸ்க்பாரில் உள்ள இணைய இணைப்பு ஐகானை கிளிக் செய்து பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய இணைப்பு பகிர்தலுக்கான ஐகான் உருவாக்கப்பட்டு இருக்கும். கணினியில் வேலை முடிந்து அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது மொபைல் போனில் தான்.

மொபைல் போனில் Wifi ஆன் செய்து விட்டு, Wifi இணைப்பு இருக்கிறதா என தேடிப்பாருங்கள் நீங்கள் உருவாக்கிய பெயரில் இணைய பகிர்தலுக்கான இணைப்பு வரும் அதை தேர்வு செய்யும் போது கடவுச்சொல் கேட்கும். நீங்கள் கணினியில் உள்ளிட்ட கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே செய்யவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டுவிடும். 

கணினியில் உள்ள இணையத்தை கொண்டு ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் இணையத்தை இணைப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

கணினியில் Wifi ஆன்செய்யவும். பின் மொபைல் போனில் Settings செல்லவும்.


பின் Wireless & networks என்பதை தெரிவு செய்யவும்.


பின் Wi-Fi ஆன் செய்யவும்.


பின் Wi-Settings செல்லவும். அதில் நீங்கள் கணினியில் உருவாக்கிய பெயரில் Wifi பகிர்தல் இணைப்பு தோன்றும். அதை தெரிவு செய்யவும்.


பின் கணினியில் இணைப்பு உருவாக்கும் போது உள்ளிட்ட கடவுச்சொல்லை இங்கு உள்ளிட்டு Connect  பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் இப்போது இணையம் மொபைல் போனில் இணைக்கப்பட்டு விடும்.





தற்போது நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் உள்ள உலாவியை பயன்படுத்தி இணைய பக்கங்களில் வலம் வர முடியும்.