தமிழில் கணினி செய்திகள்

DVD யை ISO கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan R in , at March 31, 2013
ஒரு கோப்பினை வேறொரு பைலாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு கன்வெர்ட் மென்பொருள் துணைகொண்டு கண்வெர்ட் செய்வோம் அதேபோல் தான் டிவிடியில் உள்ள எந்தவொரு கோப்பினையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள் ஒன்று உள்ளது. அதன் துணைகொண்டு எளிதாக முழு டிவிடியையும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றிக்கொள்ள முடியும்.

தற்போது இணையத்தில் பெரிய அளவுடைய பைல்களை சுருக்கி அனுப்ப பயன்படும் பார்மெட்களில் பெரும்பாலாக கையாளப்படுவது ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டாகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு, குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். 

பின் டிவிடி ட்ரேயில் டிவிடியினை உள்ளிடவும். பின் Next பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் டிவிடியில் உள்ள முழு கோப்பும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். பின் இறுதியாக Open output  directory எனும் இணைப்பினை அழுத்தி கன்வெர்ட் செய்யப்பட்ட ஐஎஸ்ஒ பைலை பெற்றுக்கொள்ளவும்.

1 comments:

அன்பு நணபருக்கு வணக்கம்.எனக்கு ஒரு தீர்வு தேவை.ஜிமெயிலில் இருந்து யாருக்கு மெயில் அனுப்பினாலும் அந்த மெயிலைப் பெறுபவர்க்கு அன்ரீடு பகுதியில் நமது மெயிலில் நமது பெயர்தானே தெரிகிறது.அப்படி பெயர் தெரியாமல் நமது இமெயில் முகவரி மட்டுமே டிஸ்பிளே ஆகுமாறு செட்டிங்ஸ் செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா?தயவுசெய்து எனக்கு அது பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்.

Post a Comment