♠ Posted by Kumaresan Rajendran in Tutorials,Winxp-Tutorials at March 05, 2013
விண்டோஸ் இயங்குதளம் உயிர்நாடி எம்.எஸ்.டாஸ் ஆகும். விண்டோஸ் இயங்குதளம் வெளிவருதற்கு முன் இருந்தது எம்.எஸ்.டாஸ் மட்டுமே ஆகும். இதில் அனைத்து செயல்பாடுகளுமே கட்டளை மூலமே நிறைவேற்றப்படும். பின் விண்டோஸ் இயங்குதளம் வளர்ச்சி பெற்ற காலத்தில் அனைத்து நிரல்களும் , பயனர் மற்றும் கணினிக்கான இடைமுகப்பு சூழலில் உருவாக்கப்பட்டது. இன்றும் கணினி பற்றிய தகவலை உடனடியாக நாம் நாடுவது இந்த கட்டளை பலகையைதான் உதாரணமாக ஒரு கணினியின் IP முகவரி என்னவென்று பார்க்க உடனடியாக கட்டளை பலகை சென்று IPCONFIG என உள்ளிட்டு IP முகவரியினை தெரிந்து கொள்வோம். இதே போல் ஜாவா மொழியினை பயன்படுத்த பல எடிட்டிங் மென்பொருள்கள் வந்திருந்தாலும்.
இன்னும் சிலர் சாதாரணமாக இந்த கட்டளை பலகையின் வழியாகவே இயக்குகிறனர். இவ்வாறு புரோகிராம் மொழிகளை கம்பைல் மற்றும் ரன் செய்ய ஒவ்வொரு முறையும் நாம் குறிப்பிட்ட இருப்பியல்பு தொடக்கத்திற்கு செல்ல வேண்டும். உதாரணமாக ஜாவா நிரலை இயக்க C:\>jdk1.7\bin செல்ல வேண்டும். இதற்கு பதிலாக நாம் இதனை இருப்பியல்பாக செட் செய்து கொண்டால் ஒவ்வொரு முறையும் நாம் தட்டச்சு செய்து இருப்பியல்பு தொடக்கதிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பியல்பு தொடக்கத்தை மாற்ற முதலில் ரிஸிஸ்டரி எடிட்டரை ஒப்பன் செய்ய வேண்டும். இதற்கு Run விண்டோவை ஒப்பன் செய்து Regedit.exe என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். இப்போது ரிஸிஸ்டரி எடிட்டர் ஒப்பன் ஆகும்.
தற்போது ரிஸிஸ்டரி எடிட்டர் ஒப்பன் ஆகும். அதில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும்.HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Command Processor .பின் Command Processor யை தேர்வு செய்து கொண்டு Edit -> New -> String Value என்ற வரிசையில் தெரிவு செய்யவும்.
அடுத்து உருவாக்கிய String value வினை மறுபெயர் இடவும். Autorun என்று உள்ளிடவும். பின் அதை இரண்டு முறை கிளிக் செய்து அதில் உங்களுக்கு விருப்பமான Directory யை உள்ளிடவும். உதாரணமாக E: -> APPS என்று உள்ளிட வேண்டுமெனில் CD /d E:\APPS என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.
இப்போது அனைத்து விண்டோக்களையும் மூடிவிட்டு, மீண்டும் கட்டளை பலகையினை ஒப்பன் செய்து பார்க்கவும்.
தற்போது நீங்கள் குறிப்பிட்ட இருப்பியல்பு தொடக்கம் மாற்றப்பட்டு இருக்கும்.
1 Comments:
i want how to change forgot password in windows 7 and win xp plz hepl me
Post a Comment