தமிழில் கணினி செய்திகள்

Youtube வீடியோக்களின் பாடல் வரிகளை பெற

உலகின் புகழ்பெற்ற வீடியோ தளமான யூடுப் தளத்தில் தினமும் பல்லாயிர கனக்கான வீடியோக்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் வீடியோவை பதிவிறக்கம் செய்யும் முன்னரே அதன் வரிகளை கேட்க விரும்புவர்கள். ஆனால் அவர்களுடைய கணினியில் ஸ்பீக்கர்/ஹெட்செட் போன்ற ஆடியோ சாதனங்கள் இருக்காது எனவே குறிப்பிட்ட வீடிவோவை முழுமையாக பதிவிறக்கம் செய்து அதனை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்த பின்னரே அதனை கேட்க முடியும். இதற்கு பதிலாக யூடுப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்யும் போதே அதன் வரிகளை எழுத்து வடிவில் பெற முடியும்.

இதற்காக நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக யூடுப் தளத்திலேயே பெற முடியும்.  இதற்கு நாம் பயன்படுத்தும் உலாவியில் நீட்சியை இணைத்துகொண்டால் போதுமானது. 

இந்த பாடல் வரிக்கான நீட்சியானது நெருப்புநரி, குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி மற்றும் ஒபேரா உலாவிகளுக்கு மட்டும் உள்ளது.


சுட்டியில் குறிப்பிட்ட இணைப்பினை பயன்படுத்தி உலாவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் யூடுப் தளத்தை ஒப்பன் செய்து குறிப்பிட்ட வீடியோவை ஒப்பன் செய்யவும். அப்போது அந்த வீடியோக்கான பாடல் வரி தோன்றும். மேலும் இந்த வசதியை நமது விருப்பபடி மற்றியமைத்து கொள்ளவும் முடியும்.


அமைப்பினை பயன்படுத்தி விரும்பியவாறு இந்த பாடல்வரி நீட்சியை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

2 comments:

Good post.
cricket live streaming
ipl live streaming
http://astarcricket.com/

உங்கள் பிளாகை இலவசமாக விளம்பரம் செய்யவேண்டுமா?
இந்த வலைதளத்திற்கு சென்று உங்கள் விளம்பரத்தை இணையுங்கள். ஆயிரமாயிரம் பிளாக்குகளின் மூலம் உங்கள் பிளாகை காண வருபவர்கள் எண்ணிக்கை பெறுகும்.
http://form.jotform.com/form/12165220244

Post a Comment