தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும்.

இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட Buyhatke என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது. இது இலவச மென்பொருள் ஆகும்.

கூகுள் குரோம் நீட்சி சுட்டி

Windows மென்பொருள் சுட்டி

Android மென்பொருள் சுட்டி

IOS மென்பொருள் சுட்டி



மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தி கூகுள் குரோம் உலாவியில் நீட்சியை நிறுவிக்கொள்ளவும். இந்த நீட்சியின் மொபைல் அப்ளிகேஷன் சுட்டிகளை மேலே கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்தி மொபைல் போன்களின் Buyhatke அப்ளிகேஷனை நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருள் Flipkart, Amazon, Myntra, Snapdeal போன்ற தளங்களில் மிகச்சரியாக வேலை செய்கிறது.

உதாரணத்திற்கு Flipkart தளத்தில் எவ்வாறு இந்த Buyhatke நீட்சியை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

Redmi Note 4 னை எடுத்து கொண்டால் இதன் தற்போதைய விலை ரூபாய் 10,999 ஆகும். இந்த விலை தான் மிக குறைந்த விலையா என்று பார்ப்பதற்கு Buyhatke நீட்சி Graph வசதியினை அளிக்கிறது இதன் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்பட்டது என்பதனை மிகதெளிவாக தெரிந்து கொள்ள முடியும். 






மேலும் இந்த நீட்சியானது பல்வேறு வசதிகளை அளிக்கிறது. Watch Price என்னும் ஆப்ஷன் மூலமாக Alert வசதியினை நீங்கள் பெற முடியும். ஒரு பொருளின் விலையினை குறிப்பிட்டு அந்த பொருளின் விலை குறையும் போது அதனை Alert மூலமாக பெற முடியும். பொருட்களை வாங்கும் போது கூப்பன் உள்ளதா என்றும் சரியான கூப்பன்கள் வரிசைபடுத்தப்பட்டு இருக்கும். இதனையும் பயன்படுத்தி பொருட்களை இன்னும் குறைவாக வாங்கி கொள்ள முடியும்.






இதே பொருள் மற்ற வர்த்தக தளங்களில் எவ்வளவு தொகைக்கு விற்க்கப்படுகிறது என்பதையும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக மற்ற தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெப்சைட்டுகளை ப்ளாக் செய்தால் இதனை தடுக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்திலையே அதற்கான எளிய வழி உள்ளது.


முதலில் C:\Windows\System32\drivers\etc என்ற போல்டரினை ஒப்பன் செய்யவும். அதில் உள்ள hosts என்ற பைலினை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை உள்ளீடு செய்யவும்.

உதாரணமாக நாம் கூகுள் வெப்சைட்டினை ப்ளாக் செய்ய வேண்டுமெனில் 127.0.0.1 www.google.com என்று உள்ளீடு செய்யவும். இந்த பைலில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் இதற்கு உங்களுக்கு அட்மின் உரிமை தேவை.

விண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி?



இந்த முறையினை பின்பற்றி எளிமையாக வெப்சைட்டுகளை ப்ளாக் செய்து கொள்ள முடியும். 

வெப்சைட்டுகளை அன்ப்ளாக் செய்ய வேண்டுமெனில் மேலே கூறியுள்ள வழிமுறையினை பின்பற்றி hosts என்ற பைலினை ஒப்பன் செய்து இதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை நீக்க விரும்புகிறீர்களோ அதனை நீக்கிவிட்டு பைலினை சேமித்தி கொள்ளவும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


எந்தெந்த நேரத்தில் அப்ளிகேஷன்ளை ஒப்பன் செய்ய வேண்டும்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கடிகாரம் மற்றும் மொபைல் போன்களில் அலராம் என்ற ஒரு வசதி இருக்கும் அதனை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் அலாரத்தினை ஒலிக்க செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை போன்று வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய CRON JOB மற்றும் CURL போன்ற வசதிகள் பயன்படுகிறன. இவைகளைப்போன்று விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அப்ளிகேஷனை தானாகவே செயல்படுத்த முடியும். இதற்கு Freebyte Task Scheduler என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை தரவிறக்கி அன்ஜிப் செய்து பின் ஒப்பன் செய்யவும். இது ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் ஆகும். மேலே குறிப்பிட்ட விண்டோ போன்று தோன்றும் அதில் + பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்ப படி தேர்வுகளை தெரிவு செய்து கொள்ளவும். Program location என்பதனை தெரிவு செய்து எந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும்.  பின் Save பொத்தானை அழுத்தி சேமித்து கொள்ளவும். Active செக் பாக்ஸ் செக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


நாம் உருவாக்கிய அட்டவனைகளை (Scheduler) நீக்கி கொள்ளவோ அல்லது மாற்றியமைத்து கொள்ளவோ முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

Facebook வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
எந்த ஒரு மூன்றாம் தர மென்பொருள் உதவியும் இல்லாமல் முகநூலில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது. முகநூலில் உலாவும் போது நாம் பல வீடியோக்களை காண்போம் அதனை இணையத்தில் உதவியுடன் மட்டுமே காண முடியும். அதனை கணினியில் தரவிறக்கம் செய்ய முயன்றால் வீடியோவினை தரவிறக்கம் செய்ய முடியாது.  இதற்கு ஒரு எளிய முறை உள்ளது.

முகநூல் தளத்தில் நீங்கள் ஒரு வீடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில், முகவரியில் (URL)  WWW என்பதனை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக m என்று உள்ளிட்டு Enter பொத்தானை அழுத்தவும். இப்போது முகநூல் பக்கமானது மொபைல் சாதனத்தில் தோன்றுவதை போல் தெரியும். நீங்கள் வீடியோவினை ப்ளே செய்து விட்டு, வீடியோவின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Save video as... என்னும் தெரிவினை தேர்வு செய்து வீடியோவினை எளிமையாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


கணினியில் முகநூல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இது ஒரு எளிய முறை ஆகும்.

கணினியில் மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய / விண்டோஸ் இயங்குதளத்தில் மறைந்துள்ள கோப்புகளை தேட

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் இயங்குதளத்தில் மறைந்துள்ள கோப்புகளை தேடி கண்டறியவும், கணினியை பற்றி முழு விவரங்களை அறியவும். மேலும் குறிப்பிட்ட கோப்பினை முழு விவரத்தை தெரிந்து கொள்ளவும். உலாவிகளின் வழியாக தேடிய வலைதள முகவரியை மீண்டும் தேடி பெறவும் PCFerret  மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 




மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் PCFerret  மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் பல டேப்கள் இருக்கும். திறந்தவுடன் கணினியின் தகவல்களை பார்க்க முடியும். அடுத்த டேப்பினை  (Full System Details) கிளிக் செய்தவுடன் கணினியில் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.


ADS என்னும் டேப்பினை அழுத்தி தோன்றும் விண்டோவில், மறைந்துள்ள கோப்புகளை கண்டறிய முடியும். அடுத்த டேப்பினை (Find Files By Type) அழுத்தவும். தோன்றும் விண்டோவில்  குறிப்பிட்ட கோப்பினை தேர்வு செய்து கோப்பின் முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.



உலாவியின் வழியாக தேடிய முகவரிகளை பெற முடியும். மொசில்லா பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், ஒபேரா , ஆப்பிள் சபாரி, சீ மன்ங்கி போன்ற உலாவிகளின் முகவரிகளை எளிதாக இந்த PCFerret  மென்பொருள் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.



மிகவும் பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கவும், இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Tools டேப்பினை கிளிக் செய்து, Generate Password  என்னும் தேர்வினை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட தேர்வுகளை தெரிவு செய்து கொண்டு Generate New Password  என்னும் பொத்தானை அழுத்தவும். புதிது புதிதாக கடவுச்சொல்லை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் Hash  மதிப்புகளையும் உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் வழியாக கணினியை பற்றியும், கணினியின் முக்கியமான அம்சங்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

MS Word ல் இந்திய நாணயங்களின் அடையாளத்தினை (Symbol) இணைக்க

ரூபாய்களின் மதிப்பினை குறிப்பிடும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி நாணயங்களின் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறன. இந்திய அரசாங்கம் ஜீலை 15 2010 அன்று நாணயங்களுக்கு புதிய அடையாளத்தினை கொண்டு வந்தது. முதலில் இந்த நாணய அடையாளத்தினை இமேஜ் வடிவத்திலேயே பயன்படுத்துமாறு இருந்தது. இவ்வாறு சேர்க்கும் போது அளவு வித்தியாசம் ஏற்படும், அப்போது நாம் உருவாக்கும் கோப்பு அழகின்றி காணப்படும். இந்த குறையை போக்கும் விதமாக தற்போது வரும் மடிக்கணினி தட்டச்சு பலகை மற்றும் சாதாரண தட்டச்சு பலகையில் இந்திய நாணய அடையாளம் இருப்பியல்பாகவே உள்ளது. இதனால் தற்போது வெளிவரும் கணினிகளில் மட்டுமே இந்த அடையாளத்தினை பயன்படுத்துமாறு உள்ளது.

 
பழைய மடிக்கணினிகளிலும், தட்டச்சு பலகையிலும் இந்த நாணய அடையாளத்தை கொண்டு வரவும் ஒரு வழி உள்ளது. யுனிகோட் முறையினை பயன்படுத்தி இந்த அடையாளத்தை ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட்டில் இணைக்க முடியும். 

முதலில் 20B9 என்று தட்டசு செய்து பின் Alt + X கீகளை ஒருசேர அழுத்தவும் தற்போது இந்திய நாணய அடையாளமாக மாற்றப்பட்டிருகும். அதனை கொண்டு அனைத்து கோப்புகளிலும் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இந்திய நாண்ய அடையாள்த்தை கோப்புகளில் இணைக்க இதுவும் ஒரு வழிமுறை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.


விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் முதுகெலும்பு விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி ஆகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனால் நம்முடைய இயங்குதளத்தில் பல்வேறு குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. விண்டோஸ் தொடங்குவதில் இருந்து மற்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது வரை அனைத்தும் தாமதமாகவே இருக்கும். இதுபோன்ற குறைபாடுகளை களைய வேண்டுமெனில் நம்முடைய விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரிசெய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏதேனும் மதிப்புகள் (Value) மாறியிருப்பினும் விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்சினை எழ வாய்ப்புண்டு. மேலும் இருப்பியல்பு கோப்பறைகளையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மேம்படுத்தவும், விண்டோஸ் ரிஸிட்டரியை பழைய நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவே சரிசெய்ய முடியும்.

கணினியில் பல்வேறு மென்பொருளை நிறுவி பயன்படுத்துவோம் பிடிக்கவில்லையெனில் அதனை நம்முடைய கணினியில் இருந்து அகற்றிவிடுவோம். இவ்வாறு அகற்றும் மென்பொருள்களால் விண்டோஸ் ரிஸிட்டரியில் ஏற்படும் பாதிப்புகளால் கணினியானது மந்த நிலைக்கு செல்லும், மேலும் கணினி தொடக்கத்திலும் பல குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. இதனை சரிசெய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்பியல்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில்  Refresh my Windows settings என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சிலமணி நேரங்களில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்று முடிவுகள் தெரியவரும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி இருப்புநிலைக்கு கொண்டுவரப்பட்டது, இருப்பியல்பு கோப்பறைகள் மாற்றப்பட்டு, அனைத்தும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும். இப்போது கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் முன்பு இருந்த கணிப்பொறி தொடக்கத்திற்கும், தற்போது இருக்கும் தொடக்கத்திற்கும் மாற்றம் தெரியும்.  கணினியில் இயக்கமும் வேகமடையும். பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

நெருப்புநரி உலவியில் Sessionrestore னை நாமே உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
நெருப்புநரி உலவியில் பணியாற்றும் போது எதோ ஒரு சில காரணத்தால் கிராஷ் ஆகி மீண்டும் மறுதொடக்கம் ஆகும். அப்போது முன்பு பார்த்துகொண்டிருந்த வலைப்பக்கங்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யவா இல்லை புதிய பக்கத்தை விண்டோவினை திறக்கவா போன்ற செய்திகள் தோன்றும். இந்த வசதியானது நாம் எதாவது ஒரு முக்கியமான வலைப்பக்கத்தை பார்த்து கொண்டிருப்போம். ஆனால் ஒரு சில தவறால் நெருப்புநரி உலவியானது மூடப்படும். அப்போது அந்த தளத்தை நாம் எவ்வாறு பெறுவது, இப்போதுதான் முதல்முறையாக அந்த தளத்தை பார்வையிடுகிறோம் என்றால் என்ன செய்வது, ஹிஸ்டரியில் இருக்கும் என்று சென்று பார்த்தால் அங்கும் நம்முடைய கெட்டகாலம் விட்டு வைக்காது, நாம் பார்த்த வலைப்பக்கத்திற்கான அடையாளமே இருக்காது. ஆனால் நெருப்புநரி உலவியில் உள்ள ரீஸ்டோர் ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் இழந்த வலைப்பக்கத்தை மீட்டுவிட முடியும். ஒரு சில நேரங்களில் மீண்டும் நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யும் போதே இந்த ரீஸ்டோர் ஆப்ஷன் கேட்கும், அவ்வாறு கேட்காத போது நாமே இந்த ரீஸ்டோர் ஆப்ஷனை உருவாக்கி கொள்ள முடியும்.


நெருப்புநரி உலவியை திறந்து அட்ரஸ் பாரில் about:sessionrestore என்று தட்டச்சு செய்து, ஒகே செய்யவும். இப்போது நீங்கள் முன்பு திறந்து இருந்த அனைத்து விண்டோக்களை ரீஸ்டோர் செய்யவா, இல்லை புதிய விண்டோவினை திறக்கவா என்ற செய்தி தோன்றும். அதை பயன்படுத்தி மீண்டும் பழைய இணைய பக்கங்களை பெற முடியும்.


இந்த வசதியானது பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும். மிக முக்கியமான சூழ்நிலையில் கைகொடுக்கும்.

எம்.எஸ்.ஆப்பிஸ்க்கு மாற்று மென்பொருள் - LibreOffice 3.3.2

♠ Posted by Kumaresan Rajendran in
ஆப்பிஸ் தொகுப்பு என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே ஆகும். கொஞ்சம் மிஞ்சி போனால் ஒப்பன் ஆப்பிஸ், ஸ்டார் ஆப்பிஸ் போன்ற மென்பொருட்களே அனைவருக்கும் தெரிந்தவை ஆகும். இன்னும் பல சிறப்புவாய்ந்த ஆப்பிஸ் மென்பொருட்கள் பலவும் வெளியே தெரியாமல் உள்ளது. அந்த வகையில் உள்ளது தான் LibreOffice 3.3.2 இந்த ஆப்பிஸ் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது சுகந்திர மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள் இருந்தும் அவையாவும் வெளியே வராமல் சென்றுவிட்டது. எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்பை போல அனைத்து வகையிளும் சிறப்பானதொரு மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த தளத்திற்கு சென்று இணையத்தினுடைய உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் கொள்ளவும். LibreOffice மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் இயங்குமாறு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆப்பிஸ் தொகுப்புகளை ஒப்பிடுகையில் LibreOffice ஆப்பிஸ் தொகுப்பு அளவில் சிறியதே ஆகும். மேலும் இந்த LibreOffice தொகுப்பில் உரைஆவணங்கள் (Text document), அட்டவணைச்செயலி (SpreadSheets), நிகழ்த்துதல் (Presentation), தரவுத்தளம் (Database), ட்ரா (Draw) மற்றும் கணக்குகளை செய்ய Formula போன்ற பயன்பாடுகள் இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் உள்ளன. 

இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு தொகுப்பில் இருந்தவாறே மற்றொரு தொகுப்பிற்கு மாறிக்கொள்ள முடியும். ஸ்டார் ஆப்பிஸ் போன்றே இந்த ஆப்பிஸ் தொகுப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பு இலவசம் என்பதால் இந்த தொகுப்பு தற்போது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும். பணம் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இலவசமாக (Open Source) கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தினால் நம்முடைய பணமாவது மிச்சம் ஆகும். மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி  உருவாக்கும் டாக்குமெண்ட்கள் அனைத்தும் இந்த மென்பொருளின் வசதி இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். என்ற அவசியம் இல்லை, நாம் போப்பினை சேமிக்கும் போதே பைல் பார்மெட்டை மாற்றி சேமித்தால் எம்.எஸ்.ஆப்பிஸ்லில் கூட கோப்பினை திறந்து பார்க்க முடியும். இதனால் இந்த ஆப்பிஸ் தொகுப்பை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

நெருப்புநரி-4 உலவியை விட்டு வெளியேறும் போது Save Tabs என்னும் வசதியை எனேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
அண்மையில் வெளியான நெருப்புநரி4 உலவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, முந்தைய பதிப்புகளுடைய இந்த பதிப்பு மிகவும் சிறப்புடையதாக உள்ளது. முந்தைய பதிப்புகளை விட மிக விரைவாக வலைப்பக்கங்களை இந்த பதிப்பில் காண முடிகிறது. ஆனால் ஒரு சில சிறப்பம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் ஒரு உலவியில் பல்வேறு டேப்களில் உலாவரும் போது, முழுவதுமாக உலவியினை மூட நினைப்போம். ஆனால் அவ்வாறு விண்டோவினை மூடும் போது டேப்கள் திறக்கப்பட்டுள்ளன அதையும் சேர்த்து மூடிவிடவா என்ற ஒரு செய்தி வரும். ஆனால் தற்போதைய நெருப்புநரி4 உலவியில் அதுபோன்ற செய்தி எதுவும் வராது. இந்த வசதியை எனேபில் செய்ய ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.


இந்த வசதியை எனேபிள் செய்ய முதலில் நெருப்புநரி உலவியை அட்ரஸ்பாரில் about:config என்று தட்டச்சு செய்து உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் “I’ll be careful, I promise!” என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக filter என்பதற்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்சில் browser.showQuitWarning என்று உள்ளிட்டு ஒகே செய்யவும்.


தோன்றும் browser.showQuitWarning என்னும் தேர்வினை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் வலது கிளிக் செய்து Toggle என்பதை தேர்வு செய்யவும். value என்பதில் ture இருக்கும். இப்போது நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யவும். நீங்கள் தற்போது ஒரே விண்டோவில் பல டேப்களை ஒப்பன் செய்து பணியாற்றி கொண்டு இருக்கும் போது, தீடிரென மறதியாக மூடும் போது எச்சரிக்கை செய்தி வரும்.


இந்த எச்சரிக்கை செய்தியினை டிசேபிள் செய்ய வேண்டுமெனில், இதே முறையை பின்பற்றி value என்பதில் false என்று உள்ளிடவும். இதே போல பல்வேறு விதமான வசதிகள் நெருப்புநரி4 உலவியில் மறைக்கப்பட்டுள்ளது.

தண்டர்பேர்டினுள் கணக்கு உருவாக்குவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
தண்டர்பேர்ட் என்பது ஈமெயில் மற்றும் செய்திகளை கையாள உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த தண்டர்பேர்ட் மென்பொருளானது மொசில்லா நிறுவனத்துடைய தொகுப்பாகும். தண்டர்பேர்ட் மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் ஈமெயில்களை எளிமையாக கையாள முடியும். இந்த மென்பொருளை அதிக போரால் பயன்படுத்த முதல் காரணமே இதனுடைய எளிமையும், இலவச மென்பொருள் என்ற ஒரு காரணம் மட்டுமே ஆகும்.  ஈமெயில்களை எளிமையாக கையாள இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுடையதாகும். வாசகர் ஒருவர் தண்டர்பேர்டினுள் கணக்கு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று ஈமெயில் மூலமாக கேட்டார். இதோ அதற்கான பதில்.

தண்டர்பேர்டை தரவிறக்க சுட்டி



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யும் போது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு கணக்கினை உருவாக்கி கொள்ள முடியும். இல்லையெனில் தண்டர்பேர்ட் அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Local Folder என்னும் டேப்பினை தேர்வு செய்து Create a New account என்னும் சுட்டியை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பயனர்பெயர் ,மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு Continue பொத்தானை அழுத்தவும்.


அடுத்து Create Account என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிடும். இதே முறையை பின்பற்றி அக்கவுண்டை உருவாக்கி கொள்ள முடியும். இல்லையெனில் Tools > Accounts Setting என்னும் தேர்வினை அழுத்தி தோன்றும் விண்டோவில் அடிப்பகுதியில் தோன்றும் Accounts Action என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் Add Mail Account, Add Other Account என்பதை அழுத்தி முன் கூறியது போல புதிய கணக்கினை உருவாக்கி கொள்ளவும்.

ZIP/RAR பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in
டாக்குமெண்ட்களை சுருக்க  பயன்படும் பார்மெட்தான் ஜிப் பைல் பார்மெட் ஆகும். இதன் மூலம் அதிகமாக உள்ள பைலின் அளவை குறைக்க முடியும். நம்மிடம் ஒரு பத்து புகைப்படங்கள் உள்ளன, அவை அனைத்தையும் ஒரே பைலாக ஈமெயில் செய்ய வேண்டும் என்ன செய்வோம் உடனே அவை அனைத்தையும் பிடிஎப்,வேர்ட் அல்லது வேறொரு பைலாக மாற்றம் செய்து அனுப்ப முயற்ச்சிப்போம், ஆனால் குறிப்பிட்ட படங்கள் அனைத்து அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே பைலாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில்  ZIP/RAR பைல்களை கணினி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்குதான். சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டிட்டு ஏதோ சொல்கிறேன். சரி நான் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். வேர்ட், பிடிஎப் பைல் பார்மெட்களுக்கு எல்லாம் கடவுச்சொல் இட்டு பூட்டமுடிகிறது. அதே போல் ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு எவ்வாறு பூட்டுவது என்று ஒரு சந்தேகம் அதற்கான பதில் கீழே.

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-

முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து, ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும். 


இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.  அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக  zip என்னும் ஐகானை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும். 


Zip பொத்தானை அழுத்தியவுடன், கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும், அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் இருக்கும் கடவுச்சொல் இணைக்கப்பட்டு. நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும். இதனுடைய முழுஅர்த்தம் என்னவெனில் நீங்கள் உருவாக்கிய ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் உருவாக்க, மீண்டும் அதே ஜிப் பைலை மற்றொரு ஜிப் பைலக உருவாக்குகிறோம்.

ரேர் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-
முதலில் கூறியவாறே ஒரு போல்டரில் டாக்குமெண்ட்களை உள்ளிட்டு கொள்ளவும். பின் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Add to Archive என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில், Advance என்னும் டேப்பை தேர்வு செய்து Set password என்னும் பொத்தானை அழுத்தவும். 


SetPassword பொத்தானை அழுத்தியவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது கடவுச்சொல் உள்ளிடப்பட்டு Rar பைலானது உருவாகியிருக்கும்.

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்

♠ Posted by Kumaresan Rajendran in
இயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை  பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.

ஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்க்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம், அதுபோல கணினியில் உள்ள படக்காட்ச்சிகளை அல்லது சில முக்கியமாக கோப்புகளை படம் பிடிக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மானிட்டர் முழுவதையுமே அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ படம் பிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம், அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.

நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும், இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும், நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

 
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும்  செய்து கொள்ள முடியும்.

உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா

♠ Posted by Kumaresan Rajendran in ,
உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, எதாவது வெளில் கம்ப்யூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல பாருங்கள் உங்கள் ஈ-மெயிலாது தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.


உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.

Torrentz.com-ன் புதிய டொமைன் பெயர்கள் Torrentz.eu மற்றும் Torrentz.me

♠ Posted by Kumaresan Rajendran in
Torrentz.com புகழ்பெற்ற  டோரன்ட் சர்ச் இன்ஞ்சின் ஆகும், இந்த சர்ச் இன்ஞ்சின் மூலமாக நமக்கு தேவையான டோரன்டினை தேடு பெற முடியும். இந்த தளத்தில் நமக்கு தேவையான டோரன்டினை டவுண்டோட் செய்வது மட்டுமள்ளாமல் சிறந்த டோரன்ட் தளத்தினையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சில தினங்களுக்கு முன் அமெரிக்க அரசு டோரன்ட் தளங்களை சர்ச் செய்து முடக்க முயற்ச்சித்தது, அதன் விளைவாக் டோரன்ட் தளங்கள் பலவும் முடக்கப்பட்டது. இதனால் Torrentz.com புதிய டொமைன் நேம்களை வெளியிட்டுள்ளது.




புதிய முகவரிகள்:
http://torrentz.me/

இந்த முகவரிகள் முலமாக தற்போது Torrentz.com தற்போது செயல்பட்டு வருகிறது, இந்த இரண்டு டொமைன் பெயர்களும் தற்போது செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு வேண்டிய டோரன்ட் பைல்களை இனி இணையத்தில் தேட வேண்டும் என்றால். இந்த இணைய தள முகவரிகளை அனுகவும்.


புதிய வளைதளத்தின் முதல்பக்கம், சரி டோரன்ட் பைல்களை டவுண்லோட் செய்ய சர்ச் இன்ஞ்சின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, மற்றப்படி அனைத்துமே ஒன்றுதான்.

அதிக அளவுடைய பைல்களை ஈ-மெயிலுக்கு அனுப்ப- Zeta Uploader

♠ Posted by Kumaresan Rajendran in
ஈ-மெயில் மூலமாக நாம் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும் உதாரணமாக ஜிமெயில் மூலமாக 25MB அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் சென்றால் தனித்தனி ஈ-மெயிலாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் நாம் கட்டண சேவையின் மூலமாக மட்டுமே அதிக அளவுடைய பைல்களை அனுப்ப முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். மேலும் நாம் அனுப்ப நினைக்கும் பைலானது முழுமையாக சேர வாய்ப்பு இருக்காது, சில நேரங்களில் ஹேக்கர்களால் திருடபடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல பல பிரச்சினைகள் உள்ளது.

நம்மிடம் உள்ள அதிக அளவுடைய பைலினை நம்மால் இணையம் மூலமாக அனுப்ப இயலாது, அதுபோன்ற சூழ்நிலையில் ஏதாவது ஒரு தளத்தில் நம்முடைய டாக்குமெண்ட்டையோ அல்லது மென்பொருளையோ பதிவேற்றி தரவிறக்க லிங் கொடுக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றும். அது போன்ற சூழ்நிலையில் நாம் இணையத்தில் எதாவது ஒரு தளத்தை தேடி பிடித்து பார்த்தால் இந்த சேவை குறிப்பிட்ட அளவு மட்டுமே, முழுமையாக பெற பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி வரும். இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் சமாளிக்கும் வன்னமாக உள்ளதுதான் Zeta Uploader என்னும் மென்பொருள ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவி கொள்ளவும். பின் நீங்கள் அனுப்ப நினைக்கு பைலினை தேர்வு செய்யவும், பின் ஈ-மெயில் முகவரியினை உள்ளிடவும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈ-மெயில் முகவரியினை குறிப்பிட கமா , குறிப்பிடவும், பின் எதைப்பற்றி குறிப்பிட நினைக்கிறீர்களோ அதனை Message என்ற பாக்சில் குறிப்பிடவும். பின் upload now பட்டனை அழுத்தவும் சிறிது நேரத்தில் உங்களுடைய பைலானது நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஈ-மெயில் மூலமாக அனுப்பபடும், அந்த லிங்கினை கிளிக் செய்து பைலை பதிவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பு: அவசரமான சூழ்நிலையில் மட்டும் இந்த மென்பொருளின் உதவியை நாட வேண்டும். ஏனெனில் உங்களுடைய கோப்பானது திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

அடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X

♠ Posted by Kumaresan Rajendran in ,
அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர்  X  ஆனது, மிகவும் சிறப்பாகவும். கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல் கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.


மென்பொருளை தரவிறக்கம் செய்ய:
Adobe Reader X  Offline Installer

இந்த அடோப் ரீடர் மூலமாக நம்முடைய பைல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும். ஆன்லைன் மூலமாக Pdf பைல்களை நாமே ஆன்லைன் உதவியுடன் உருவாக்க முடியும். புகழ்பெற்ற pdf  ரீடரான அடோப் ரீடர் மிகவும் சிறப்பானதாகும், அந்த வகையில் புதிதாக வெளிவந்துள்ள Adobe Reader X  சிறப்புதன்மை வாய்ந்ததாகும்.

விண்டோஸ்-7ல் அனைத்துவிதமான பைல்களையும் பார்க்க அருமையான மென்பொருள்-Universal File Viewer

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும் இதற்கு என்று உள்ளதுதான் Universal FilevViewer என்னும் மென்பொருள் ஆகும். இது ஒரு Freeware மென்பொருள் ஆகும். நாம் மைக்ரோசாப்ட் ஆப்பிஸில் உருவாக்கிய மெபொருளை பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் மென்பொருள் நம்து கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ பிளேயர் வேண்டும். MP3 பாடல்களை கேட்க வேண்டுமெனில் ஒரு ஆடியோ பிளேயர் வேண்டும். படங்களை பார்க்க போட்டோ Viewer வேண்டும் அப்படி இல்லாமல் அனைத்து வசதிகளையும் நாம் ஒரே மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் நான் போட்டோவினை ஒப்பன் செய்து, பார்க்க முடிகிறது. அதே போல வீடியோ மற்றும் ஆடியோவினை இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்ட பிறகு நீங்கள் மற்ற மென்பொருட்களின் உதவி இல்லாமல் View (பார்க்க) முடியும்.

இமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட  நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித ஐகான்கள் உள்ளன. விண்டோஸ் ஐகான்கள் அனைதும் (.ICO) என்ற பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer,
My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம் ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பைல் பார்மெட்டுகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO  பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO  பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும். இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.