♠ Posted by Kumaresan Rajendran in Tips at March 28, 2011
ஆப்பிஸ் தொகுப்பு என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே ஆகும். கொஞ்சம் மிஞ்சி போனால் ஒப்பன் ஆப்பிஸ், ஸ்டார் ஆப்பிஸ் போன்ற மென்பொருட்களே அனைவருக்கும் தெரிந்தவை ஆகும். இன்னும் பல சிறப்புவாய்ந்த ஆப்பிஸ் மென்பொருட்கள் பலவும் வெளியே தெரியாமல் உள்ளது. அந்த வகையில் உள்ளது தான் LibreOffice 3.3.2 இந்த ஆப்பிஸ் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது சுகந்திர மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள் இருந்தும் அவையாவும் வெளியே வராமல் சென்றுவிட்டது. எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்பை போல அனைத்து வகையிளும் சிறப்பானதொரு மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த தளத்திற்கு சென்று இணையத்தினுடைய உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் கொள்ளவும். LibreOffice மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் இயங்குமாறு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆப்பிஸ் தொகுப்புகளை ஒப்பிடுகையில் LibreOffice ஆப்பிஸ் தொகுப்பு அளவில் சிறியதே ஆகும். மேலும் இந்த LibreOffice தொகுப்பில் உரைஆவணங்கள் (Text document), அட்டவணைச்செயலி (SpreadSheets), நிகழ்த்துதல் (Presentation), தரவுத்தளம் (Database), ட்ரா (Draw) மற்றும் கணக்குகளை செய்ய Formula போன்ற பயன்பாடுகள் இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் உள்ளன.
இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு தொகுப்பில் இருந்தவாறே மற்றொரு தொகுப்பிற்கு மாறிக்கொள்ள முடியும். ஸ்டார் ஆப்பிஸ் போன்றே இந்த ஆப்பிஸ் தொகுப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பு இலவசம் என்பதால் இந்த தொகுப்பு தற்போது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும். பணம் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இலவசமாக (Open Source) கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தினால் நம்முடைய பணமாவது மிச்சம் ஆகும். மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கும் டாக்குமெண்ட்கள் அனைத்தும் இந்த மென்பொருளின் வசதி இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். என்ற அவசியம் இல்லை, நாம் போப்பினை சேமிக்கும் போதே பைல் பார்மெட்டை மாற்றி சேமித்தால் எம்.எஸ்.ஆப்பிஸ்லில் கூட கோப்பினை திறந்து பார்க்க முடியும். இதனால் இந்த ஆப்பிஸ் தொகுப்பை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
7 Comments:
பயன்படுத்தி பார்க்கிறேன்
தகவலுக்கு நன்றி...
தகவலுக்கு நன்றி. நான் ஓபன் ஆபிஸ் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றை பயன் படுத்தும் பொது சாதரணமாக ஒரு டேபிள் போடுவதர்க்குக் கூட படாத பாடு படவேண்டியதாய் இருக்கிறது. சாதாரணமாகச் செய்யும் செயல்களுக்குக் கூட ரொம்ப தேட வேன்டியதாய் இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன் படுத்தி இருப்பதால், இவை அதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது, நாம் பயன்படுத்தும் வேகம் முற்றிலும் குறைந்து போய் விடுகிறது. இந்த புதிய பேக்கேஜ்களில் ஒவ்வொன்றையும் திரும்பவும் புதிதாய் கற்க வேண்டியிருக்கிறது. வெறுத்துப் போய் விட்டு விட்டேன்.
Good info...
By
http://hari11888.blogspot.com
நன்றி Farhath,
//Jayadev Das said... 2
தகவலுக்கு நன்றி. நான் ஓபன் ஆபிஸ் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இவற்றை பயன் படுத்தும் பொது சாதரணமாக ஒரு டேபிள் போடுவதர்க்குக் கூட படாத பாடு படவேண்டியதாய் இருக்கிறது. சாதாரணமாகச் செய்யும் செயல்களுக்குக் கூட ரொம்ப தேட வேன்டியதாய் இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன் படுத்தி இருப்பதால், இவை அதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது, நாம் பயன்படுத்தும் வேகம் முற்றிலும் குறைந்து போய் விடுகிறது. இந்த புதிய பேக்கேஜ்களில் ஒவ்வொன்றையும் திரும்பவும் புதிதாய் கற்க வேண்டியிருக்கிறது. வெறுத்துப் போய் விட்டு விட்டேன்//
முதலில் கணினியை கற்க்கும் போதும் கஷ்டமாகதான் இருக்கும். பின்பு பலகிவிடும். அதுபோலதான் பலகபலக ஒப்பன்ஆப்பிஸ் உங்கள் கைக்குள் வசப்படும்.
வருகைக்கு நன்றி திரு.Hari,
பயனுள்ள தகவல். மிக்க நன்றி
Post a Comment