தமிழில் கணினி செய்திகள்

வீடியோ பைல்களை ஒன்றிணைக்க

♠ Posted by Kumaresan R in , at 11:55 PM
இரண்டு தினங்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் இது, அவர் தன்னிடம் ASF பைல் பார்மெட்டில் சில வீடியோ பைல்கள் இருப்பதாகவும், அந்த வீடியோ பைல்களை எவ்வாறு ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்குவது என்றும் கூறியிருந்தார். இதோ அவருக்கான பதில் கீழே. தனித்தனி வீடியோ பைல்களாக இருக்கும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் சிறப்பம்சம் என்னவெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மெட்களையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணைய்த்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add Video என்ற பொத்தானை அழுத்தி வீடியோ பைலகளை தேர்வு செய்து கொள்ளவும்.


அடுத்து Next பொத்தானை அழுத்தி எந்த பைல் பார்மெட்டில் வீடியோக்கள் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அந்த பைல் பார்மெட்டை தேர்வு செய்து கொண்டு, பைல்களை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் Join now பொத்தானை அழுத்தவும். இப்போது வீடியோ பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு, ஒரே பைலாக ஒருகிணைக்கப்படும்.


இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைல்களானது ஒருகிணைக்கப்பட்டு ஒரே வீடியோ பைலாக சேமிக்கப்பட்டு இருக்கும்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்கள்:-

இன்புட் பைல் பார்மெட்கள்:-
  • HD Video, AVI , FLV, SWF, DV AVI, MP4, WMV, 3GP, 3G2, MOV, QT, DVD, VOB, MPEG-1, 2, 4, MOD, MPG, DAT, RM, RMVB, ASF, H.263, H.264, MKV, TS மற்றும் பல வீடியோ பைல் பார்மெட்கள்

அவுட்புட் பைல் பார்மெட்கள்:-
  • AVI, MP4, FLV, SWF, MPEG, RM, WMV, MOV & 3GP

11 comments:

எல்லோருக்கும் தேவையான பதிவு.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

நன்றி தமிழ்வாசி,

மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே :)

hellow sir i need video background music changer software.u have anything like this

தேவையானவர்களுக்கு பயன்படும்.. நல்லா இருக்கு.. !

நல்ல பதிவு ஆனால் இப்படி ஒன்று இணைப்பதால் வீடியோ கோலிட்டி மாறாமல் இருக்குமா நன்றி

கண்டிப்பாக, வீடியோவில் தரம் எதுவும் குறையாது.

தங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.எனக்கு விடியோ வின் மீது எழுத்து ஒட கூடியதற்க்கு ஒரு சாஃப்ட்வற் மற்றும் video converter,video splitter,video joiner இது எல்லாம் ஒரே சாஃப்ட்வரேஇல் கிடைக்குமா Thanks Advance

Useful software.... Thanks to shared...
By
http://hari11888.blogspot.com

ஐயா யாராவது தமிழில் excel pormula சொல்லிக் கொடுங்க

I want converter software to convert tamil pdf files into tamil document files, pls help me boss!

Post a Comment