தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் தளத்திற்கேற்ற Multimedia Suite - CORE

♠ Posted by Kumaresan R in at 5:55 PM
வீடியோ மற்றும் ஆடியோவை இயக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு பிளேயர் வேண்டும். உதாரணமாக விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் பாட்டு கேட்கலாம் படமும் பார்க்கலாம். ஆனால் குறிப்பிட்ட வீடியோ மற்றும் ஆடியோ பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்ய கூடிய வகையில் உள்ளது. இந்த விண்டோஸ் பிளேயர் மட்டுமில்லை எந்த ஒரு மல்டிமீடியா பிளேயராக இருந்தாலும். அவை யாவும் குறிபிட்ட பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்ய கூடிய வகையில் உள்ளது. இவை அனைத்தையும் சரிகட்ட கூடிய வகையில் வெளிவந்துள்ள பிளேயர் தான் CORE Multimedia Suite ஆகும். இந்த மென்பொருளில் அதிகப்படியான வசதிகள் நிறைந்துள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் நீங்கள் நேரிடையாக சிடி இருந்தும் பாடலை  கேட்க முடியும். புதியதாக லிஸ்ட் ஒன்றை உருவாக்கி அதில் பாடல்களை தேர்வு செய்தும் ஆடியோ மற்றும் வீடியோவை உங்களால் இயக்க முடியும். 


இந்த மென்பொருளில் உள்ள உலவியின் உதவியுடன் இணையத்திலும் வலம்வர முடியும். இந்த CORE Multimedia Suite இருந்தவாறே நம்முடைய கணினியில் உள்ள வீடியோ,ஆடியோ மற்றும் படங்களை தேடி பெற முடியும். இந்த CORE Multimedia Suite உதவியுடன் ஆடியோ, வீடியோ மற்றும் படங்கள் போன்றவற்றை எடிட்டிங் செய்ய முடியும்.


புதியதாக நமக்கென ஒரு Play list யை உருவாக்கி கொள்ள முடியும். மேலும் புதியதாக பிளேயரையும் உருவாக்க இந்த மென்பொருளில் வழிவகை உள்ளது. மொத்தத்தில் இந்த மென்பொருள் சிறந்த Multimedia Suite மென்பொருள் ஆகும். 

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்கள்:-
 • Video Files (*.avi;*.mpeg;*.mpg;*.m1v;*.wmv;*.asf;*.asx;*.qt;*.mov;*.mpe;*.mpa;*.m2v*.mpg)
 • Audio File (*.mp1;*.mp2;*.mp3;*.ogg;*.wma;*.asf;*.wav;*.mid;*.rmi;*.mod;*.s3m;*.xm;*.it)
 • Images(*.Jpg;*.jpeg;*.Gif;*.Bmp)
  போன்ற பைல் பார்மெட்களை இந்த மென்பொருள் சப்போர்ட் செய்ய கூடிய வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  6 comments:

  சூப்பர் ! சூப்பரோ சூப்பர்!!

  //சுதந்திர மென்பொருள் பிரபு சார் கூறியது: "இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை" என்று மிகுந்த தன்னடக்கத்துடன் தன்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் இரா.குமரேசன் (தமிழ் கம்ப்யூட்டர் http://tamilcomputerinfo.blogspot.com/) இதுவரை சுமார் 160+ பதிவுகளை எழுதி தமிழ் சமூகத்திற்கு நற்பணியாற்றி வருகிறார்.//

  வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற தமிழர்கள் இந்த தழிழ் தேசிய இனத்திற்கு தேவை.உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

  நன்றி கதிர்வேல்,

  நன்றி நதியா.

  Good Software.... Try KM PLAYER....

  With Humble
  http://hari11888.blogspot.com

  Nice Player.. Thanks to shared...

  By
  http://hari11888.blogspot.com

  குமரேசன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  Post a Comment