தமிழில் கணினி செய்திகள்

ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது  ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும்.  இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் பைல்களை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு,  ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பைலை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும். 


குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்  சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும்.  இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.

இலவசமாக லைசன்ஸ் கீயுடன் SnowFox YouTube Downloader

♠ Posted by Kumaresan Rajendran in ,
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும் பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும். பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.


பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும்.


இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro PDF

♠ Posted by Kumaresan Rajendran in ,
பிடிஎப் பைல்கள்ளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும், சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகிறன. இவ்வாறு உருவாக்கப்படும் பிடிஎப் பைல்களையே உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி என்றால் இவ்வாறு நாம் உருவாக்கும் பிடிஎப் பைல்களுக்கு என தனியாக பூட்டு உருவாக்கினால் மட்டுமே தடுக்க முடியும். அது எதுமாதிரியாக இருந்தால் சரிவரும் என்று யோசித்தேன் அதற்கு சரியான வழி கடவுச்சொல் இடுவது மட்டுமே சரியான வழி ஆகும். நீங்கள் கூறலாம் கடவுச்சொல்லையும் உடைக்க வழிதான் இருக்கிறது என்று, அது உண்மைதான் ஆனால் அது 99% முடியாத விஷயம் ஆகும். நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே, கடவுச்சொற்களை எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் பைல்களை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன. கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைல்களை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு  ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் நீங்கள் கடவுச்சொல்லுடன் பிடிஎப் கோப்பாக உருவாக்க நினைக்கும் கோப்பினை திறக்கவும். பின் File > Print என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செயதவுடன் தோன்றும் விண்டோவில் Printer என்னும் ஆப்ஷனில் Doro PDF Writer என்பதை தேர்வு செய்து பின் OK என்னும் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encryption என்னும் டேப்பினை தேர்வு செய்து குறிப்பிட்ட கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லானது எண் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருப்பின் சிறந்தது. கூடவே பெரிய எழுத்துக்கள் இருப்பது சிறந்தது. கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Create என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது பிடிஎப் கோப்பானது கடவுச்சொல்லுடன் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த Doro PDF மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் கடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gp ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.

டுவிட்டரில் படங்களை இணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in
டுவிட்டர் இணையதளம் மூலமாக நம்முடைய தகவல்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். சோஷியல் தளங்களில் டுவிட்டர் ஒரு முக்கியமான தளம் ஆகும். அமெரிக்க அதிபர் ஒபாமாவில் தொடங்கி எங்க ஊர் ராமசாமி வரை அனைவரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அந்த அளவிற்கு டுவிட்டர் தளம் பிரபலமானது. வெளிப்படையாக சொல்ல முடியாத பல்வேறு செய்திகளை டுவிட்டர் தளத்தின் வாயிலாக சொல்ல முடியும். உதாரணமாக பிரபலமான நடிகர்கள் மிக முக்கியமான செய்திகளை நேரடியாக சொல்ல மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற சோஷியல் தளங்களில் எந்தவித தயக்கமும் இன்றி வெளியிடுவார்கள், இதனால் அதிகமாக குழப்பங்களே எழுந்துள்ளது. அந்த வகையில் டுவிட்டர் தளத்தில் இது வரை நாம் வெறும் செய்திகளை மட்டுமே நண்பர்களுடன் பகிர்ந்து வந்தோம் ஆனால் தற்போது செய்திகளுடன் சேர்த்து படங்களையும் வெளியிட முடியும். இந்த வசதி தற்போது டுவிட்டரில் இணைக்கப்பட்டுள்ளது.


நீங்கள் வழக்கம்போல உங்களுடைய கணக்கில் உள்நுழையவும், பின் Tweet பகுதிக்கு சென்று உங்களுடைய செய்தியினை தட்டச்சு செய்து பின் இமேஜ் இணைப்பதற்கான ஐகானை அழுத்தவும்.


ஐகானை அழுத்தியவுடன் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் உங்கள் கணினியில்  உள்ள படத்தினை தேர்வு செய்யவும். இந்த வசதியின் மூலம் செய்திகேற்ப சரியான விளக்கபடமும் அளிக்க முடியும்.வேண்டுமெனில் இந்த படங்களை நீக்கம் செய்து கொள்ளவும் முடியும். குறிப்பிட்ட பதிவினை தேர்வு செய்து பின் படத்தை தேர்வு செய்யவும். பின் படத்தின் அடியில் தோன்றும் Delete என்னும் பொத்தானை அழுத்தி நீக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு,  கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு Get it Now என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த இலவச கீயானது ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கிடைக்கும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இலவச கீயுடன், ஒரு மின்னஞ்சல் முகவரியும் அனுப்பபட்டிருக்கும். அதை சரியாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருடைய சந்தை மதிப்பு $59.95 ஆகும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.


இந்த மென்பொருளை முழுமையாக தரவிறக்கி உங்கள் கணினியில், மின்னஞ்சலில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் விருப்பபடி Wondershare Live Boot னை உருவாக்கி கொள்ள முடியும். யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் சீடி/டிவிடி ட்ரைவினை பயன்படுத்தி, இந்த Wondershare Live Boot 2012 னை உருவாக்க முடியும். நான் தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுப்த்தி இதனை செய்யப்போகிறேன்.


தற்போது தோன்றும் விண்டோவில் How to create LiveBoot bootable USB drive? என்னும் தேர்வினை அழுத்தி, Burn USB drive Now! என்னும் பொத்தானை அழுத்தவும்.


தற்போது  யுஎஸ்பி ட்ரைவில் Wondershare LiveBoot 2012 பூட்டபிள் கோப்பாக இருக்கும். இதனை உங்கள் கணினியின் யுஎஸ்பி ட்ரைவில் இட்டு, கணினியை மறுதொடக்கம் செய்து பயாஸில் யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் பூட்டிங் அமைப்பை மட்டுமாவது யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றியமைத்துக்கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot from LiveBoot மற்றும் Boot from hard diskMicrosoft என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதில் Boot from LiveBoot என்பதை தேர்வு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


WinPE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது விண்டோஸ் பைல்களுடன் சேர்ந்து Wondershare LiveBoot 2012 பூட் ஆக தொடங்கும்.


தற்போது கணினி வழக்கம் போல் பூட் ஆகி செயல் படும், பின் நீங்கள் Wondershare Live Boot 2012 னை ஒப்பன் செய்யவும். சாதரணமாகவே Wondershare Live Boot 2012 ஒப்பன் செய்யப்பட்டிருக்கும். பின் உங்களுக்கு வேண்டிய செயல்பாடுகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும்.

இது போன்று இன்னும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் மறைந்துள்ளன. இந்த மென்பொருள் விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். கூடவே இந்த மென்பொருள் தற்போது இலவசமாகவும் கிடைக்கிறது. விண்டோஸில் உள்ள 40கும் மேற்பட்ட பயன்பாடுகளை நம்மால் எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் உங்கள் பதிலை கூறவும்.

கூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
தககல் களஞ்சியங்களில் தாய்வீடு என்றால் அது கூகுளை மட்டுமே குறிக்கும். இணையத்திற்கு சென்றால் எதாவது ஒரு வகையில் நாம் கூகுளின் உதவியை நாடி சென்றே ஆக வேண்டும். அந்த வகையில் கூகுளின் வசதிகள் இணைய உலகில் பெருகி உள்ளன. இணையத்தில் கிடைக்கும் புத்தகங்கள் பலவும் விலைக்கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில மட்டுமே இலவசமாக கிடைக்கும். ஆனால் கூகுள் புத்தகங்களை நாம் இலவசமாகவே பெற முடியும். ஆனால் இந்த புத்தகங்களை நம்மால் ஆன்லைனில் இருந்தவாறு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த புத்தகங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வசதி ஏதும் இருக்காது. இதனால் கால விரயமும், பணச்செலவு மட்டுமே ஆகும். இவ்வாறு இலவசமாக கிடைக்கும் கூகுள் புத்தகத்தினை நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியாததை நினைத்து நான் சில நேரங்களில் வருத்தப்பட்டுகூட உள்ளேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பலமொழிக்கு ஏற்ப நம்மால் இந்த கூகுள் புத்தகங்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் இதனை தவிர்க்கவும் ஒரு வழி உள்ளது. கூகுள் புத்தகங்களை தரவிறக்க நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

Greasemonkey தரவிறக்க சுட்டி


நீட்சியினை உலவியில் நிறுவுவதற்கு முன், இந்த Greasemonkey நீட்யினை உங்கள் உலவியில் நிறுவிக்கொள்ளவும். பின் Google Book Downloader நீட்சியினை உங்கள் கணினியில் நிறுவவும்.

நீட்சியினை தரவிறக்க சுட்டி


பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Google Book Downloader நீட்சியினை உங்களுடைய உலவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒரு முறை உங்களுடைய நெருப்புநரி உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது கூகுள் புத்தகத்தை நெருப்புநரி உலவியில் ஒப்பன் செய்யவும்.


தற்போது இந்த பக்கத்தில் Download this book என்னும் சுட்டி இணைக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் ஒவ்வொரு பக்கத்திற்கு தனித்தனி பதிவிறக்க சுட்டி இணைக்கப்பட்டிருக்கும், வேண்டுமெனில் அதை பயன்படுத்தியும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் என்ன குறைபாடு என்றால் பதிவிறக்கம் செய்த பின்பும் நாம் தனித்தனியாகவே சேமிக்க வேண்டும். மொத்தமாக சேமிக்க முடியாது. எனினும் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். சற்று நேரம் இழுக்கும். பயன்படுத்தி பாருங்கள் பின் உங்கள் பதிலை கூறுங்கள்.

ஆடியோ பைலை மற்றொரு ஆடியோ பார்மெட்டிற்கு மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஆடியோ பைல்கள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது mp3, mp4 பைல் பார்மெட்கள் மட்டுமே ஆகும். இன்னும் இதுதவிர பல்வேறு ஆடியோ பைல் பார்மெட்கள் உள்ளன. அவை MP3, AAC, WAV, WMA, CDA, FLAC, M4A, MID, MKA, MP2, MPA, MPC, APE, OFR, OGG, RA, WV, TTA, AC3, DTS இது போன்று இன்னும் பல்வேறு பைல் பார்மெட்கள் உள்ளன. இவையாவும் தனித்தனி ஒலி அமைப்புகளில் செயல்படக்கூடியது ஆகும். நாம் ஏன் ஒரே பைல் பார்மெட்டில் வைத்திருந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், இவ்வாறு மாற்றுவதால் என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு சந்தேகம் எழக்கூடும். நம்முடைய கணினியில் அனைத்து விதமான ஆடியோ பைல்ககளையும் நம்மால் கேட்க முடியும். ஆனால் ஐபேட், மொபைல்போன்களில் இதுபோன்ற வசதிகள் குறைவும் ஒரு சில குறிப்பிட்ட  ஆடியோ பைல் பார்மெட்களை மட்டுமே சப்போர்ட் செய்யும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அனைத்து விதமான ஆடியோ பைல்களையும் கேட்க முடியாது. இந்த நிலையை தவிர்க்க நாம் வேண்டிய ஆடியோ பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add என்னும் சுட்டியை அழுத்தி ஆடியோ பைல்களை உள்ளினைத்து கொள்ளவும். பின் Output என்ற இடத்தில் விருப்பமான ஆடியோ பைல் பார்மெட்டினை தேர்வு செய்யவும். இந்த மென்பொருள் மூலம் கன்வெர்ட் செய்யக்கூடிய ஆடியோ பைல் பார்மெட்கள் AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA ஆகியவை ஆகும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும். குறிப்பிட்ட ஆடியோ பைலில் இருந்து வேண்டிய பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுக்கவும் முடியும். இந்த மென்பொருள் மூலமாக ஆடியோ பைல்களை எளிமையாக வெட்ட முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

பயன்பாடுகளை வேகமாக திறக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினி என்றாலே வேகம் என்றுதான் பொருள், இப்படி இருக்க கணினியில் இருக்கும் பயன்பாடுகளை அணுகுவதில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று நம்மில் பலர் நினைப்பீர்கள், ஒரு சிலர் கணினியில் உள்ள பயண்பாடுகளை வேகமாக அணுகுவதற்கு டாஸ்க்பாரில் ஐகானை செட் செய்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே பெற முடியும். சிஸ்ட்டம் ட்ரேயில் இருந்தவாறு பல்வேறு விதமான பயன்பாடுகளை பெற ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் விரைவாகவும் எளிமையாவும் பயன்பாடுகளை பெற முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ட்ரேயில் ஒரு ஐகான் இணைந்திருக்கும். அந்த ஐகானை பயன்படுத்தி மிக வேகமான பயன்பாடுகளை வேகமாக திறக்க முடியும்.


பயன்பாடுகளை திறக்க வசதி இல்லையெனில் நாமலே புதிய பயன்பாடுகளை திறப்பதற்கான வழியினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும்.

போட்டோ எடுக்க - Photo Booth

♠ Posted by Kumaresan Rajendran in ,
வீடியோ அரட்டைக்கு பயன்படுவது வெப்கேமிராக்கள் ஆகும். இந்த வெப் கேமிராவினை வேண்டுமெனில் படம் எடுக்கும் கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். அந்த வகையில் நமக்கு உதவும் மென்பொருள்தான் Photo Booth ஆகும். இந்த மென்பொருள் மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்தபடுவது ஆகும். மேலும் இது தற்போது ஐபேட்களிலும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இந்த Photo Booth ன் விண்டோஸ் பதிப்பு அதுவும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே இயங்க கூடியது ஆகும். இதன் மூலம் எளிமையாக போட்டோக்களை எடுக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து வகை வெப்கேமிராக்களையும் சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது. வெப்கேமிரா கணினியுடன் சரியாக பொருத்தப்பட்டிருந்தாலே போதுமானது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மெபொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஒப்பன் செய்யவும். தற்போது வெப்கேகிராவின் மூலம் படம் எடுக்க முடியும். இதில் பல்வேறு விதமான எபக்ட்ஸ் இருக்கும். அதனை பயன்படுத்தியும். படம் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் எடுத்த படத்தை தரவிறக்கமும் செய்து கொள்ள முடியும். இது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்த நீங்கள் கண்டிப்பாக வெப்கேமிரா மற்றும் Adobe Flash Activex உங்கள் கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். மேலும் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.