தமிழில் கணினி செய்திகள்

இலவசமாக லைசன்ஸ் கீயுடன் SnowFox YouTube Downloader

♠ Posted by Kumaresan R in , at 8:04 PM
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும் பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும். பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.


பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும்.


இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

1 comments:

மிகவும் பயனுள்ள தளம் உங்களுடையது.எனது பக்கம் ஒரு முறை வந்து போங்க நண்பரே!

Post a Comment