தமிழில் கணினி செய்திகள்

Leawo 3GP கன்வெர்ட்டர் இலவசமாக

♠ Posted by Kumaresan R in ,,, at 8:09 PM
மொபைல் போன்களுக்கு ஏற்ற வீடியோ பைல் பார்மெட் 3gp ஆகும். இந்த பைல் பார்மெட் மட்டுமே அனைத்து வீடியோ பிளேயர் வசதி கொண்ட மொபைல்களில் இயங்க கூடியது ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் வீடியோ பைல் பார்மெட்கள் பலவும் FLV, AVI, MPEG போன்ற பைல் பார்மெட்டிலேயே இருக்கும். இவ்வாறு உள்ள வீடியோ பைல்களை நாம் விருப்பபடி வேண்டுமெனில் 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றிக்கொள்ள முடியும். 3gp வீடியோ பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் இதுபோன்ற மென்பொருள்களை நாம் விளை கொடுத்து மட்டுமே பெற வேண்டும். ஒரு சில நேரங்களில் இலவசமாகவும் அந்த குறிப்பிட்ட மென்பொருளை தருகிறனர். அந்த வகையில் தற்போது Leawo 3GP கன்வெர்ட்டரை இலவசமாக தருகிறனர்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் Get IT Now என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அது ஸ்பேம் மின்னஞ்சலாகவும் வர வாய்ப்புண்டு. எனக்கு வந்த மின்னஞ்சல் ஸ்பேம் அறையில் இருந்தது. பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்து லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக்கொள்ளவும். மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி லைசன்ஸ் கீயை பயன்படுத்தி கணினியில் முழுமையாக நிறுவி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் குறிப்பிட்ட வீடியோவினை உள்ளினைத்து கொண்டு, எந்த பார்மெட்டில் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அதனை தேர்வு செய்துவிட்டு பின் வீடியோ தரத்தினை தேர்வு செய்து, பின் கன்வெர்ட் செய்த பைல்கள் சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ கன்வெர்ட் செய்யப்பட்டு இருக்கும்.

4 comments:

Free Sound coverter is a nice software. i used it and i converted mp3 to ac3 Dolby Sound. It's great to hear. But windows media player 12 is compatible with ac3 format.

DEV//

விண்டோஸ் மீடியா பிளேயரானது AC3 பைல் பார்மெட்டினை சப்போர்ட் செய்யாது.

வேண்டுமெனில் நீங்கள் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி பாருங்கள் தோழி.

Post a Comment