தமிழில் கணினி செய்திகள்

போட்டோ எடுக்க - Photo Booth

♠ Posted by Kumaresan Rajendran in , at August 01, 2011
வீடியோ அரட்டைக்கு பயன்படுவது வெப்கேமிராக்கள் ஆகும். இந்த வெப் கேமிராவினை வேண்டுமெனில் படம் எடுக்கும் கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். அந்த வகையில் நமக்கு உதவும் மென்பொருள்தான் Photo Booth ஆகும். இந்த மென்பொருள் மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்தபடுவது ஆகும். மேலும் இது தற்போது ஐபேட்களிலும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இந்த Photo Booth ன் விண்டோஸ் பதிப்பு அதுவும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே இயங்க கூடியது ஆகும். இதன் மூலம் எளிமையாக போட்டோக்களை எடுக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து வகை வெப்கேமிராக்களையும் சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளது. வெப்கேமிரா கணினியுடன் சரியாக பொருத்தப்பட்டிருந்தாலே போதுமானது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மெபொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஒப்பன் செய்யவும். தற்போது வெப்கேகிராவின் மூலம் படம் எடுக்க முடியும். இதில் பல்வேறு விதமான எபக்ட்ஸ் இருக்கும். அதனை பயன்படுத்தியும். படம் எடுத்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் எடுத்த படத்தை தரவிறக்கமும் செய்து கொள்ள முடியும். இது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை பயன்படுத்த நீங்கள் கண்டிப்பாக வெப்கேமிரா மற்றும் Adobe Flash Activex உங்கள் கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். மேலும் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

1 Comments:

ALL THE BEST FRIEND i LIKE YOU THIS BLOGGER USE FULL GOD BLUES YOU

Post a Comment