தமிழில் கணினி செய்திகள்

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் - Wondershare iMate

♠ Posted by Kumaresan R in
முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும். இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 2,ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் டேட்டாக்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். உடனே இலவச கீ பெறுவதற்கான பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அங்கு உங்களுடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு Like என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக Get Keycode பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மின்னஞ்சல் முகவரியில் உள்ள லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள ஐபேட் மற்றும் ஐபோன்கள் பட்டியலிடப்படும், பின் அதை தேர்வு செய்து வேண்டிய பைல்களை காப்பி செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் DVD க்களில் இருந்து நேரிடையாக பைல்களை மாற்றிக்கொள்ள முடியும். வேண்டுமெனில் பைல்களை பேக்அப் செய்து கொள்ள முடியும். ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான சிறந்த  மென்பொருள் Wondershare iMate ஆகும்.

Video Converter Factory மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in
வீடியோக்களை கன்வெர்ட் செய்து ஒரு பைல் பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு வீடியோ கன்வெர்ட்டரின் உதவியை நாடிச்செல்லை வேண்டும். இவ்வாறு நாம் நாடிச்செல்லும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்காது. இல்லை ஆன்லைனில் கன்வெர்ட் செய்யலாம் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே கன்வெர்ட் செய்ய முடியும். மென்பொருளின் துணையோடு இதுபோன்ற பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அவை யாவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் குறைகளுடன் மட்டுமே இருக்கும். இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி


தளத்தில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து கொண்டு. மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். இலவச லைசன்ஸ் கீயானது மென்பொருள் தரவிறக்க சுட்டியிலேயே இருக்கும். அதை காப்பி செய்து மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வேண்டிய பைலை தேர்வு செய்து பின் கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல் பார்மெட்டை தேர்வு செய்து Start பொத்தானை அழுத்தவும் சில நொடிகளில் கன்வெர்ட் செய்யப்பட்ட பைலானது சேமிக்கப்பட்டிருக்கும்.


மேலே குறிப்பிட்ட பைல் பார்மெட்டில் வீடியோக்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உண்மையான விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் 100 விதமான பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்ய முடியும்.

GIF அனிமேஷன் பைல்களை உருவாக்க DP Animation Maker

♠ Posted by Kumaresan R in ,
நாம் சாதரணமாக படங்களை எடிட் செய்து மெருகேற்ற பல மென்பொருட்களின் உதவியினை நாடிச்செல்வோம் உதாரணமாக போட்டோசாப் மென்பொருளின் மூலமாக படங்களுக்கு அழகூட்ட முடியும். மேலும் படங்களை அழகூட்ட வேண்டுமெனில் எதாவது ஒரு மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நாம் இணையத்தில் வலம் வரும்போது பார்த்தால் ஒரு சில வலைதளங்களில் மட்டும் படங்கள் மின்னும், ஒடும் ஏதோ ஒரு செயலை குறிப்பிடுவது போன்ற செய்கைகளை செய்யும் அதுபோன்ற செய்கைகளை நாம் அனைத்து படங்களிலும் காண முடியாது இதற்கு காரணம் அவ்வாறு செய்கைகளை செய்யும் படங்கள் அனைத்தும் GIF பைல் பார்மெட்டிலோ அனிமேஷன் பைல் பார்மெட்டிலோ படங்கள் இருக்கும். இந்த படங்களை நாம் எவ்வாறு உருவாக்குவது புதிய அனிமேஷன்களை எவ்வாறு படத்தில் இணைப்பது போன்ற பலவும் பலருக்கு குழப்பமாகவே இருக்கும். அனிமேஷன் பைல்களை உருவாக்க வேண்டுமெனில் அது மாயா,ப்ளாஷ் போன்ற எதாவது ஒரு மென்பொருளுடன் உதவியுடன் மட்டுமே ஆகும். இந்த மென்பொருட்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் இருக்கும் மென்பொருட்கள் ஆகும். இந்த மென்பொருளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமெனில் அதனை தனியே கற்க வேண்டும். சாதரணமாக ஒரு படத்திற்கு அனிமேஷன் உருவாக்கம் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து விருப்பமான படத்தை தேர்வு செய்துகொண்டு, உங்களுக்கு பிடித்தமான அனிமேஷன் தேர்வினை இணைக்கவும். 


இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக உருவாக்கும் அனிமேஷன் பைல்களை gif, exe மற்றும் வீடியோ பைலாகவும் கணினியில் சேமித்துக்கொள்ள முடியும். சாதரண படத்தை சரியான அனிமேஷன் படமாக உருவாக்க இந்த மென்பொருளானது மிகவும் உதவி செய்யும்.

VIPRE ஆண்டிவைரஸ் இலவசமாக 90 நாட்கள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in ,

கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல தற்போது வைபர் ஆண்டிவைரஸ் நிறுவனம் ஆண்டிவைரஸ் மென்பொருளை 90 நாட்கள் இலவசமாக வழங்குகிறனர். இந்தியாவில் இல்லை துருக்கியில் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.


இலவச லைசன்ஸ் கீ பெறுவதற்கான சுட்டி

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் கன்வெர்ட் செய்யப்பட்ட இலவச லைசன்ஸ் கீ பெறுவதற்கான  சுட்டிகூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி,மொபைல் எண் மற்றும் உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Send பொத்தானை அழுத்தவும். சிலமணி நேரங்களில் உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு இலவச லைசன்ஸ் கீயானது அனுப்பி வைக்கப்படும். மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் சுட்டியாது அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். ஈமெயிலில் உள்ள கீயினை காப்பி செய்து மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் முழுமையாக நிறுவப்பட்டிருக்கும். மென்பொருள் துருக்கியில் கிடைத்தால் என்ன ஜெர்மனியில் கிடைத்தால் என்ன வாய்ப்பு ஒருமுறை மட்டுமே, கிடைக்கும் போதே பயன்படுத்திகொள்ள வேண்டும்.

எம்.எஸ்.ஆப்பிஸ்க்கு மாற்று மென்பொருள் - LibreOffice 3.3.2

♠ Posted by Kumaresan R in
ஆப்பிஸ் தொகுப்பு என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே ஆகும். கொஞ்சம் மிஞ்சி போனால் ஒப்பன் ஆப்பிஸ், ஸ்டார் ஆப்பிஸ் போன்ற மென்பொருட்களே அனைவருக்கும் தெரிந்தவை ஆகும். இன்னும் பல சிறப்புவாய்ந்த ஆப்பிஸ் மென்பொருட்கள் பலவும் வெளியே தெரியாமல் உள்ளது. அந்த வகையில் உள்ளது தான் LibreOffice 3.3.2 இந்த ஆப்பிஸ் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது சுகந்திர மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள் இருந்தும் அவையாவும் வெளியே வராமல் சென்றுவிட்டது. எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்பை போல அனைத்து வகையிளும் சிறப்பானதொரு மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த தளத்திற்கு சென்று இணையத்தினுடைய உதவியுடன் மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் கொள்ளவும். LibreOffice மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் இயங்குமாறு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆப்பிஸ் தொகுப்புகளை ஒப்பிடுகையில் LibreOffice ஆப்பிஸ் தொகுப்பு அளவில் சிறியதே ஆகும். மேலும் இந்த LibreOffice தொகுப்பில் உரைஆவணங்கள் (Text document), அட்டவணைச்செயலி (SpreadSheets), நிகழ்த்துதல் (Presentation), தரவுத்தளம் (Database), ட்ரா (Draw) மற்றும் கணக்குகளை செய்ய Formula போன்ற பயன்பாடுகள் இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் உள்ளன. 

இந்த LibreOffice ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு தொகுப்பில் இருந்தவாறே மற்றொரு தொகுப்பிற்கு மாறிக்கொள்ள முடியும். ஸ்டார் ஆப்பிஸ் போன்றே இந்த ஆப்பிஸ் தொகுப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பு இலவசம் என்பதால் இந்த தொகுப்பு தற்போது பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும். பணம் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இலவசமாக (Open Source) கிடைக்கும் மென்பொருளை பயன்படுத்தினால் நம்முடைய பணமாவது மிச்சம் ஆகும். மேலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி  உருவாக்கும் டாக்குமெண்ட்கள் அனைத்தும் இந்த மென்பொருளின் வசதி இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். என்ற அவசியம் இல்லை, நாம் போப்பினை சேமிக்கும் போதே பைல் பார்மெட்டை மாற்றி சேமித்தால் எம்.எஸ்.ஆப்பிஸ்லில் கூட கோப்பினை திறந்து பார்க்க முடியும். இதனால் இந்த ஆப்பிஸ் தொகுப்பை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

நெருப்புநரி-4 உலவியை விட்டு வெளியேறும் போது Save Tabs என்னும் வசதியை எனேபிள் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
அண்மையில் வெளியான நெருப்புநரி4 உலவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, முந்தைய பதிப்புகளுடைய இந்த பதிப்பு மிகவும் சிறப்புடையதாக உள்ளது. முந்தைய பதிப்புகளை விட மிக விரைவாக வலைப்பக்கங்களை இந்த பதிப்பில் காண முடிகிறது. ஆனால் ஒரு சில சிறப்பம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் ஒரு உலவியில் பல்வேறு டேப்களில் உலாவரும் போது, முழுவதுமாக உலவியினை மூட நினைப்போம். ஆனால் அவ்வாறு விண்டோவினை மூடும் போது டேப்கள் திறக்கப்பட்டுள்ளன அதையும் சேர்த்து மூடிவிடவா என்ற ஒரு செய்தி வரும். ஆனால் தற்போதைய நெருப்புநரி4 உலவியில் அதுபோன்ற செய்தி எதுவும் வராது. இந்த வசதியை எனேபில் செய்ய ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.


இந்த வசதியை எனேபிள் செய்ய முதலில் நெருப்புநரி உலவியை அட்ரஸ்பாரில் about:config என்று தட்டச்சு செய்து உள்ளிடவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் “I’ll be careful, I promise!” என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக filter என்பதற்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்சில் browser.showQuitWarning என்று உள்ளிட்டு ஒகே செய்யவும்.


தோன்றும் browser.showQuitWarning என்னும் தேர்வினை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் வலது கிளிக் செய்து Toggle என்பதை தேர்வு செய்யவும். value என்பதில் ture இருக்கும். இப்போது நெருப்புநரி உலவியை மறுதொடக்கம் செய்யவும். நீங்கள் தற்போது ஒரே விண்டோவில் பல டேப்களை ஒப்பன் செய்து பணியாற்றி கொண்டு இருக்கும் போது, தீடிரென மறதியாக மூடும் போது எச்சரிக்கை செய்தி வரும்.


இந்த எச்சரிக்கை செய்தியினை டிசேபிள் செய்ய வேண்டுமெனில், இதே முறையை பின்பற்றி value என்பதில் false என்று உள்ளிடவும். இதே போல பல்வேறு விதமான வசதிகள் நெருப்புநரி4 உலவியில் மறைக்கப்பட்டுள்ளது.

PDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in ,
மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டிசுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.


இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.  இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.

தண்டர்பேர்டினுள் கணக்கு உருவாக்குவது எப்படி

♠ Posted by Kumaresan R in ,
தண்டர்பேர்ட் என்பது ஈமெயில் மற்றும் செய்திகளை கையாள உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த தண்டர்பேர்ட் மென்பொருளானது மொசில்லா நிறுவனத்துடைய தொகுப்பாகும். தண்டர்பேர்ட் மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் ஈமெயில்களை எளிமையாக கையாள முடியும். இந்த மென்பொருளை அதிக போரால் பயன்படுத்த முதல் காரணமே இதனுடைய எளிமையும், இலவச மென்பொருள் என்ற ஒரு காரணம் மட்டுமே ஆகும்.  ஈமெயில்களை எளிமையாக கையாள இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுடையதாகும். வாசகர் ஒருவர் தண்டர்பேர்டினுள் கணக்கு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று ஈமெயில் மூலமாக கேட்டார். இதோ அதற்கான பதில்.

தண்டர்பேர்டை தரவிறக்க சுட்டிமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யும் போது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு கணக்கினை உருவாக்கி கொள்ள முடியும். இல்லையெனில் தண்டர்பேர்ட் அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Local Folder என்னும் டேப்பினை தேர்வு செய்து Create a New account என்னும் சுட்டியை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் பயனர்பெயர் ,மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு Continue பொத்தானை அழுத்தவும்.


அடுத்து Create Account என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிடும். இதே முறையை பின்பற்றி அக்கவுண்டை உருவாக்கி கொள்ள முடியும். இல்லையெனில் Tools > Accounts Setting என்னும் தேர்வினை அழுத்தி தோன்றும் விண்டோவில் அடிப்பகுதியில் தோன்றும் Accounts Action என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் Add Mail Account, Add Other Account என்பதை அழுத்தி முன் கூறியது போல புதிய கணக்கினை உருவாக்கி கொள்ளவும்.

கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி

♠ Posted by Kumaresan R in
இணையத்தில் உலா வரும் போது ஒருசில குறிப்பிட்ட தகவல்களை சேமித்து கொள்ள பயனாளர்கள் விரும்புவர். முக்கியமாக எழுத்துக்களையே அதிகமாக காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டாக சேமித்து வருவோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து வருவோம். பெரிய கோப்பாக இருந்தால் பரவாயில்லை சின்னஞ்சிறு சொற்றொடர்களை கூட இதுபோன்றே காப்பி செய்து பேஸ்ட் செய்வோம். இதனால் கால விரயம் மட்டுமே ஆகும். ஒரு சில நேரங்களில் ஒரு பகுதி சொற்றொடர்களை காப்பி செய்து விடுவோம் ஆனால் பேஸ்ட் செய்ய மறந்து விடுவோம், இல்லையெனில் இன்னொரு சொற்றொடர்களை காப்பி செய்திடுவோம் இதனால் நாம் அதற்கு முன் காப்பி செய்த சொற்றொடரானது நீக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இதற்கான வசதி இல்லை, ஆனால் இணைய உலவியான கூகுள் குரோமில் இது சாத்தியம். இந்த உலவியில் Pastey என்னும் நீட்சியின் உதவியுடன் இதுபோன்ற காப்பி,பேஸ்ட் செயல்களை மிக எளிமை செய்ய முடியும். அதற்கு முன் காப்பி, பேஸ்ட் என்ற வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள் ஆகும். இதற்கான தமிழ் அர்த்தங்கள் காப்பி - நகலெடுத்தல், பேஸ்ட் - ஒட்டுதல் , கட் - நகர்த்துதல், இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் வாசர்களுக்கு சற்று தடுமாற்றம் ஏற்படும் என்பதால் இந்த பதிவில் காப்பி, பேஸ்ட் என்ற வாத்தையினையே பயன்படுத்தி உள்ளேன். 

நீட்சியை தரவிறக்க சுட்டி


கூகுள் குரோம் உலவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரின் பக்கத்தில் ஒரு Pastey ஐகான் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். அதை ஒப்பன் செய்தும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் எந்தெந்த சொற்றொடர்களை தனியே சேமிக்க வேண்டுமோ அந்த சொற்றொடர்களை தேர்வு செய்து கொண்டு, சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Copy selected to Pastey என்பதை அழுத்தியும் சொற்றொடர்களை சேமித்துக்கொள்ள முடியும்.காப்பி செய்த சொற்றொடர்களை பேஸ்ட் செய்ய வேண்டுமெனில் Pastey ஐகானை அழுத்தி வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சியானது இணையத்தில் தகவல்களை  தேடி அலைந்து சேகரிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வலைப்பக்கத்தில் காப்பி செய்த சொற்றொடர்களை மற்ற இடங்களிலும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும்.

வன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள - FolderVisualizer

♠ Posted by Kumaresan R in ,
கணினினுடைய முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது. நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும்போதே வன்தட்டினை தனித்தனி தொகுதிகளாக (Partition) பிரித்து பயன்படுத்தி வருவோம். ஒவ்வொரு தொகுதியும் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவத்தை மட்டுமே நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் காண முடியும். மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கோப்புகள் எவைஎவை எந்த அளவு நினைவகத்தை பகிர்ந்து உள்ளது. போன்ற விரங்களை காண வேண்டுமெனில் தனித்தனியாக சென்று ஒவ்வொரு கோப்பறைகளின் நினைவத்தை காண வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தவாறே மொத்த வன்தட்டினுடைய கோப்பறைகளின் மொத்த மதிப்பை காண ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் FolderVisualizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் எந்த தொகுதியை பற்றி விவரம் அறிய வேண்டுமோ, அதனை டிக் செய்துவிட்டு Scan Now பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.


இந்த மென்பொருளை பயன்படுத்தி வன்தட்டை ஸ்கேன் செய்து முழுமையான விவரத்தை அறிந்து கொள்ள முடியும். உங்கள் விருப்பபடி விவரங்கள் அனைத்தும் தனித்தனி பகுதியாக பிரித்து காட்டப்படுகிறது.இந்த மென்பொருளின் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளது, தொகுதியினுடைய முழுவிவரமும் தனி வரை படமாக  காண முடியும். மேலும் ப்ளாஷ் ட்ரைவ்களையும் ஸ்கேன் செய்து அதை பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய முதல் 100 பைல்களை தனியே காண முடியும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவும் போது மின்னஞ்சல் முகவரி மற்றும் பயனர் பெயரை உள்ளிட கோரும், நீங்கள் உள்ளிட்டு ஒகே செய்தவுடன், கீயானது உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மென்பொருனானது விண்டோஸ் எக்ஸ்பி,விஸ்டா மற்றும் 7 ஆகிய இயங்குதங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

விண்டோஸ் 7ல் போல்டர் ஐகான் மற்றும் நிறத்தை மாற்றம் செய்ய Folderico

♠ Posted by Kumaresan R in ,
அதிகமாக உள்ள கோப்புகள் அனைதையும் ஒரே போப்பறையில் (Folder) வைத்திருப்போம் சாதாரணமாக போப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான போப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் போப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது. கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில் போப்பறையில் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள் உருவாக்கும் போப்பறைகளுக்கு தனி கலர் மற்றும் அழகிய ஐகானை உருவாக்க முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டிமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த கோப்பறையை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்யது கொண்டு, Select icon என்னும் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பபடி ஐகானை மாற்றம் செய்து கொள்ள முடியும்.


இல்லையெனில் கோப்பறையின் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் வரிசையில் Folderico என்னும் தேர்வினை தேர்வு செய்து தோன்றும் வரிசையில் உங்கள் விருப்பபடி கோப்பறையை மாற்றம் செய்து கொள்ள முடியும்.


இப்படியும் கோப்பறையில் நிறத்தையும், உருவ படத்தையும் மாற்றிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

PDF to Excel கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in ,
மைக்ரோசாப்ட் எக்சல் தொகுப்பில் உருவாக்கிய எக்சல் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் எக்சல் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட எக்சல் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து எக்சல் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டிசுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். Q5NS2-XMRPV-P3F7C-G2VGK இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 20 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது எக்சல் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.


இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் எக்சல் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

Ashampoo Registry Cleaner முழுபதிப்பையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in
நாம் கணினியில் பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். பின்  ஒருசில மென்பொருட்கள் தேவையில்லையெனில் அதனை அன்இன்ஸ்டால் செய்து விடுவோம். நாம் மென்பொருள்களை அன்இன்ஸ்டால்  செய்யும்போது ஒருசில மென்பொருள்கள் முழுமையாக  அன்இன்ஸ்டால் ஆகாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கிவிடும், அதுபோன்ற பைல்களை நீக்கினால் மட்டுமே கணினியானது விரைவாக செயல்படும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் விண்டோஸ் ரிஸிஸ்டரியானது முக்கிய பகுதியாகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்டரியில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை முழுமையாக எடிட் செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும். மாறாக கணினிக்கு புதியவர்கள் விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்யவும் கிளின் செய்யவும் இணையத்தில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை, இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இல்லை. தற்போது Ashampoo Registry Cleaner ரானது தற்போது லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி லைசன்ஸ் கீயை பெற்று மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட வலைதளத்திற்கு சென்று உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Send என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈமெயிலை ஒப்பன் செய்யவும். புதியதாக ஒரு மெயிலானது உங்களுடைய கணக்கிற்கு வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து அதில் குறிப்பிட்டுள்ள லிங்கிற்கு செல்லவும். பின் ஒரு கணக்கை உங்களுக்கென தொடங்கி கொள்ளவும். கணக்கு உருவாக்கப்பட்ட பின் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது கிடைக்கும். லைசன்ஸ் கீயானது உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பபடும்.


இந்த லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி Ashampoo Registry Cleaner யை முழுமையாக பதிந்து கொள்ளவும். Ashampoo Registry Cleaner மென்பொருளின் சந்தை மதிப்பு $14.95 ஆகும். Ashampoo Registry Cleaner மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்டரியை நாம் குறிப்பிட்ட தேதிக்கு பேக்அப் செய்து கொள்ள முடியும்.

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,
ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன. நானே என்னுடைய வலைப்பூவில் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய பல்வேறு விதமான இலவச மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள், இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனிமென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி மென்பொருளை நாட வேண்டிவரும். இந்த இரண்டு பணிகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் போட்டோக்களை கொண்டு Slide Show யும் உருவாக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வீடியோ மற்றும் ஆடியோவை உங்கள் விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் மற்றும் ஜாயினும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் நாம் avi, mpg, tod, mov, dv, rm,3gp, 3g2,  3gp2,flv, swf, mp4,wmv, mkv, qt, ts, mts போன்ற வீடியோ பைல்களை உள்ளினைத்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


இந்த மென்பொருளில் இருந்தவாறே டிவீடி ரைட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இதனால் இந்த மென்பொருளை சிறந்ததொரு மென்பொருள் என்று கூறமுடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தில் குறிப்பிட்டுள்ள பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது வீடியோ, ஆடியோ , மற்றும் போட்டோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். நாம் இந்த மென்பொருளில் கன்வெர்ட் செய்யும் பைல்களை நேரிடையாக டிவீடிக்களில் ரைட்டிங் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோ URL யை உள்ளிட்டு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது. DVD க்களை உள்ளிட்டு அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவையும் இந்த மென்பொருளின் துணையுடன் கன்வெர்ட் மற்றும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும். மொத்ததில் இந்த மென்பொருளை கொண்டு ஆடியோ, வீடியோவை மிக எளிதாக கன்வெர்ட் செய்யவும் எடிட் செய்யவும் இந்த மென்பொருளானது சிறந்ததாகும். இனி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வதை விட்டுவிட்டு ஒரே மென்பொருளின் துணையுடன் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.

விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய - LogonStudio

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டமானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஆகும். இந்த பதிப்பானது முந்தைய பதிப்புகளைவிட மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். இதில் புதுப்புது வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. பயனர்களை கவரும் வகையில் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டாமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் உள்ள குறைகளை மேம்படுத்தி மீண்டும் மீள்பதிப்பு (SP1) ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. சரி நாம் கூறிய தலைப்பிற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ககூடாது. ஏதோ உங்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் கூறிவிட்டேன். சரி நம்முடைய பிரச்சனைக்கு வருவோம். நான் இந்த விண்டோஸ் 7 Logon ஸ்கிரினை மாற்றம் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவிட்டுள்ளேன். ஆனால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறை சரியாக வேலை செய்யவில்லை என வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவருக்காகவும் புதியவர்களுக்காகவும் இந்த பதிவாகும்.  இம்முறை ஒரு மென்பொருளின் துணையுடன் விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய போகிறோம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்து Logon  திரையை மாற்றம்  செய்து கொள்ள முடியும். வேண்டுமெனி திரையை பதிவிறக்கம் செய்தும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள Download என்னும் பொத்தானை அழுத்தி உங்களுக்களுக்கு விருப்பமான திரையை தரவிறக்கம் செய்து, அந்த குறிப்பிட்ட திரையை பதிவேற்றம் செய்து,  Logon  திரையாக மாற்றம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் நீங்களே இதுபோன்ற அப்ளிகேஷனை உருவாக்கி கொள்ள முடியும். இதற்கு Create என்னும் பொத்தானை அழுத்தி விருப்பமான படத்தை தேர்வு செய்து கொண்டு Save என்னும் பொத்தானை அழுத்தவும்.


இப்போது நீங்கள் குறிப்பிட்ட படமானது My Logon Screens பட்டியலில் இருக்கும். குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து, Apply  செய்து விடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட படமானது  இனி நீங்கள் குறிப்பிட்ட படமானது Logon திரையாக வரும். இந்த மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் 7,Visata,Xp போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில்  Logon  திரையை மாற்றம்  செய்து கொள்ள முடியும்.

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய

♠ Posted by Kumaresan R in ,
நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம். வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது, நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட் செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை செய்தியை தடுக்க விண்டோஸ் Registry யில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். Registry யில் மாற்றங்களை செய்யும் முன்னர் Registryயை பேக்அப் செய்து கொள்ள வேண்டும். 


முதலில் ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். (Win key + R) பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். இப்போது தோன்றும் ரன் விண்டோவில் Regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.

HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer


வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New->DWORD (32 Bit) value எனபதை தேர்வு செய்யவும். இப்போது உருவாகும் DWORD பட்டிக்கு NoLowDiskSpaceChecks என்னும் பெயரை இடவும். NoLowDiskSpaceChecks என்னும் பட்டி மீது இரட்டை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்னும் பாக்சில் 1 என்று உள்ளிடவும்.


அடுத்து ஒகே செய்து விடவும். பின் Registry விண்டோவை மூடிவிடவும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியானது தோன்றாது. மீண்டும் இதை மாற்றியமைக்க வேண்டுமெனில் Value data என்னும் இடத்தில் 0 என்று உள்ளிட்டு கொள்ளவும். இதே முறையை பின்பற்றி  விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் செய்து கொள்ள முடியும்.

வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க

♠ Posted by Kumaresan R in ,
ஆடியோ மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன.  ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் இரத்து செய்து நமக்கு விருப்பமான ஆடியோவை இணைத்துகொள்ளும் மென்பொருள்கள் குறைவு, இதுபோன்ற மென்பொருட்கள் யாவும் விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து இலவசமாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் சிறப்புடையதாக இல்லை.இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் இணையத்தில் இலவசமாக ஒரு மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Add Video என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் Add Audio என்னும் பொத்தானை அழுத்தி எந்த ஆடியோ பைலை இணைக்க வேண்டுமோ அந்த ஆடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும். mp4, swf, wmv மற்றும் flv இவற்றில் எதாவது ஒரு பைல் பார்மெட் ஆகும்.

பின் கன்வெர்ட் செய்த பைலானது எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்து கொண்டு. Start பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய வீடியோவானது பிரிதொரு ஆடியோ இணைக்கப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேவ் செய்யப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வீடியோவிற்கு நீங்கள் விரும்பும் ஆடியோவை இணைத்து பாருங்கள் ஒரே காமெடியாகத்தான் உள்ளது. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் முடிவை கூறுங்கள்.

மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் தனித்தனி மென்பொருளை பயன்படுத்தி வருவோம். குறிப்பாக வீடியோ, ஆடியோ பிளேயர், கன்வெர்ட்டர், கட்டர், ஜாயினர் மற்றும் போட்டோ எடிட்டர் போன்ற வேலைகளை செய்ய தனித்தனி மென்பொருள்களை நாடி செல்வோம். அதுவும் வீடியோ, ஆடியோ பைல்களை கன்வெர்ட், கட் மற்றும் ஜாயின் செய்ய தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வோம். இவையனைத்தும் ஒரே மென்பொருளில் கிடைத்தால் எவ்வளவு ஈசியாக இருக்கும். அதுவும் இலவச மென்பொருள் என்றால் மிகப்பெரிய சந்தோஷம் தான். அப்படிப்பட்ட மென்பொருள் தான் Media Cope என்னும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை எடிட் செய்யவும். போட்டோக்களை ஒண்றினைக்கவும் பயன்படுகிறது. 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மீடியோ கோப் அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் தேர்வு  பொத்தான்களை பயன்படுத்தி நம்முடைய பணிகளை செய்து கொள்ள முடியும்.


இதன் மென்பொருளின் உதவியுடன் நெருப்புநரி மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவிகளில் இமேஜ்களை காண முடியும். மேலும் பல வசதிகளை பெற முடியும்.


ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் இந்த பிளேயருடைய உதவியுடன் mp3, aac, wma, flac, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob, dat மற்றும் பல பைல் பார்மெட்களை கையாள முடியும். மேலும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய கட் செய்ய மற்றும் ஜாயின் பன்னுவதற்கு இந்த மென்பொருளில் வழிவகை உள்ளது. மேலும் போட்டோக்களை எடிட் செய்யவும் இந்த மென்பொருளில் வழிவகை உள்ளது. உண்மையிலேயே மீடியா பைல்களை எடிட் செய்ய இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும். இந்த மென்பொருளை பற்றி மேலும் சொல்ல தேவையில்லை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் கூறுங்கள் உங்கள் முடிவை.

ஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள

♠ Posted by Kumaresan R in ,
ஈமெயில் சேவையில் உச்சத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஈமெயில் சேவையில் புதுப்புது வசதிகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் அளிக்கும் வசதிதான் ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை உள்ளினைத்து,  புகுத்தப்பட்ட ஈமெயில் கணக்கை பயன்படுத்தி அதிலிருந்து ஈமெயில்களை அனுப்பி கொள்ள முடியும். நான் முன்பே கூறியது போல ஈமெயில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். ஒரு காலத்தில் யாகூ நிறுவனத்துடைய ஈமெயில் சேவையே அதிகம் பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்போது யாகூ தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது இதற்கு காரணம் ஜிமெயில் நிறுவனம் மட்டுமே ஆகும். இந்த நிறுவனம் அளிக்கும் புதுப்புது வசதிகள் மட்டுமே ஆகும். அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் அளிக்கும் வசதிதான், ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல முகவரிகளை உள்ளினைத்து ஈமெயில் அனுப்ப முடியும். சுருங்கமாக சொல்ல வேண்டுமெனில் From அட்ரஸ்யை மாற்றிக்கொள்ளும் வசதி ஆகும். 

இந்த வசதியை உள்ளினைக்க முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் Settings பொத்தானை அழுத்தி Accounts and Import என்னும் பட்டியை கிளிக் செய்யவும்.


அதில் send mail as என்னும் பகுதியில் Send mail from another address என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்.


Name என்னும் பாக்சில் உங்களுடைய பெயரை உள்ளிடவும், அடுத்த பாக்சில் உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Next Step பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Send Verification என்னும் பொத்தானை அழுத்தவும், அடுத்ததாக உள்ளிட்ட ஈமெயில் கணக்கில் நுழைந்து Verification கோடினை காப்பி செய்து, தோன்றும் விண்டோவில் உள்ளிட்டவும்.


இல்லையெனில் Verification லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். Compose mail பட்டியை அழுத்தவும். இப்போது From அட்ரஸ் டேப் இணைக்கப்பட்டிருக்கும்.


அதை பயன்படுத்தி ஈமெயில் அனுப்பி கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை இணைத்துக்கொள்ள முடியும்.

ட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers

♠ Posted by Kumaresan R in ,,
விண்டோஸ்ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே அதனுடன் சேர்த்து ட்ரைவர்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சவுண்ட், வீடியோ, ஈதர்நெட் என அனைத்துக்கும் தனித்தனியாக ட்ரைவர்களை நிறுவ வேண்டும். அதுவும் ட்ரைவர் பேக்அப் இல்லாமல் ஒரு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய பிறகு அந்த கணினிக்கு தேவையான ட்ரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் பெரும் அவஷ்த்தைதான். புதிதாக இணையத்தில் இதற்கான ட்ரைவரை தேடிப்பிடித்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் நம்முடைய நண்பர்களிடம் இருக்கும் ட்ரைவர் சீடியை வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இது சில நேரங்களில் காலை வாரிவிடும். குறிப்பிட்ட ட்ரைவர் மட்டும் நமக்கு கிடைக்காது. இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி ஸ்கேன் செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு குறிப்பிட்ட ட்ரைவர் அப்டேட் காண்பிக்கப்படும். வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ளவும்.இந்த மென்பொருளின் உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


இப்போது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள ட்ரைவர்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.