தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய - LogonStudio

♠ Posted by Kumaresan Rajendran in , at March 20, 2011
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டமானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஆகும். இந்த பதிப்பானது முந்தைய பதிப்புகளைவிட மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். இதில் புதுப்புது வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. பயனர்களை கவரும் வகையில் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டாமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் உள்ள குறைகளை மேம்படுத்தி மீண்டும் மீள்பதிப்பு (SP1) ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. சரி நாம் கூறிய தலைப்பிற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ககூடாது. ஏதோ உங்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் கூறிவிட்டேன். சரி நம்முடைய பிரச்சனைக்கு வருவோம். நான் இந்த விண்டோஸ் 7 Logon ஸ்கிரினை மாற்றம் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவிட்டுள்ளேன். ஆனால் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறை சரியாக வேலை செய்யவில்லை என வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவருக்காகவும் புதியவர்களுக்காகவும் இந்த பதிவாகும்.  இம்முறை ஒரு மென்பொருளின் துணையுடன் விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய போகிறோம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்து Logon  திரையை மாற்றம்  செய்து கொள்ள முடியும். வேண்டுமெனி திரையை பதிவிறக்கம் செய்தும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள Download என்னும் பொத்தானை அழுத்தி உங்களுக்களுக்கு விருப்பமான திரையை தரவிறக்கம் செய்து, அந்த குறிப்பிட்ட திரையை பதிவேற்றம் செய்து,  Logon  திரையாக மாற்றம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் நீங்களே இதுபோன்ற அப்ளிகேஷனை உருவாக்கி கொள்ள முடியும். இதற்கு Create என்னும் பொத்தானை அழுத்தி விருப்பமான படத்தை தேர்வு செய்து கொண்டு Save என்னும் பொத்தானை அழுத்தவும்.


இப்போது நீங்கள் குறிப்பிட்ட படமானது My Logon Screens பட்டியலில் இருக்கும். குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து, Apply  செய்து விடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட படமானது  இனி நீங்கள் குறிப்பிட்ட படமானது Logon திரையாக வரும். இந்த மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் 7,Visata,Xp போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில்  Logon  திரையை மாற்றம்  செய்து கொள்ள முடியும்.

1 Comments:

அன்புடன் குமரேசன்!

சிறந்த தளம். நல்ல கருத்துக்கள். எங்கள் மாணவர்களுக்கு எற்ற பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் வளர வாழ்த்தும்,

- தாவீது யோசெப்

Post a Comment