தமிழில் கணினி செய்திகள்

முகநூல் கணக்கினை முழுவதுமாக நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in
முகநூலினை பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புகழ்பெற்றது முகநூல் தளமாகும். தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கொள்ள பயன்படுவது முகநூல் தளமாகும். தற்போது முகநூல் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது முகநூல் தளம் ஆகும். இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது இதனால் பலர் தங்களுடைய முகநூல் கணக்கினை நீக்க முடிவு செய்துள்ளனர். முகநூல் கணக்கில் இருந்து விருப்பதேர்வினை பயன்படுத்தி நீக்க முயன்றால் நம்முடைய தகவல்கள் மறைக்கபடுமே தவிற, நம்முடைய கணக்கு முழுமையாக நீக்கப்படமாட்டாது. முகநூல் கணக்கினை முழுமையாக நீக்க கீழ்காணும் வழிமுறையை பின்பற்றவும்.

முகநூல் கணக்கினை முழுமையாக நீக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும் அதில் Delete my account என்னும் பொத்தானை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் கொடுக்கப்பட்டுள்ள அடையாள சொற்களை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. ஆனால் நீங்கள் முகநூல் கணக்கினை நீக்கும் முன் அதில் உள்ள தகவல்களை நகல் எடுத்து வைத்து கொள்ளவும். நீங்கள் செய்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை குறிப்பிட்ட முகநூல் கணக்கில் உள்நுழையக்கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே முகநூல் கணக்கு நீக்கம் செய்யப்படும்.

மென்பொருள்கள் பதிவிறக்கம் - நேரடி தரவிறக்க சுட்டி (DDownloads)

♠ Posted by Kumaresan Rajendran in
சாதரணமாக் நாம் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு வலைமனையில் இருந்து பதிவிறக்கம் செய்வோம். இல்லையெனில் நேரடியாக குறிப்பிட்ட வலைமனைக்கே சென்று அந்த குறிப்பிட்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்வோம். இதனால் பல்வேறு பட்ட மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நினைப்பவர்களால் சரியாக மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. இதனால் கால விரயம் மட்டுமே ஏற்படும். இதுபோன்று ஏற்படும் கால விரயத்தை தடுக்க வேண்டுமெனில் ஒரே வழி மட்டுமே அனைத்து மென்பொருளையும் பதிவிறக்கம் செய்ய குறிப்பிட்ட ஒரு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  அவ்வாறு இருக்கும் தளத்திலும் ஒரு சில மென்பொருள்கள் கிடைக்காது. இந்த சிக்கலை தீர்க்க DDownloads என்ற மென்பொருள் மூலம் மென்பொருள்களில் நேரடி தரவிறக்க சுட்டியை இலகுவாக பெற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் அன்ஜிப் செய்துகொள்ளவும். பின் DDownloads எனும் சுருக்குவழியை பயன்படுத்தி ஒப்பன் செய்யம். பின் DDownloads சாளரப்பெட்டி ஒப்பன் ஆகும். அதில் நீங்கள் விரும்பும் மென்பொருள் பிரிவுக்கு சென்று வேண்டிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



இந்த அப்ளிகேஷன் உதவியுடன் சிறிய மென்பொருளிலில் இருந்து, இயங்குதளம் வரை நேரிடையாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் போர்ட்டபிள் மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் 400+ மேற்பட்ட மென்பொருளை இலகுவாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விண்டோஸ் டெஸ்க்டாப்பினை லாக் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,

நாம் அவ்வபோது கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது திடிரென கணினியை விட்டு செல்வோம். அப்போது நம்முடைய கணினியை நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் நம் கணினியில் உள்ள தகவல்களை பார்த்து விடுவார்களோ என்று நினைத்து நாம் பயம் கொள்வோம். ஏனெனில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்ப்பதால் சில பிரச்சினைகள் எழும். இதனால் நாம் நம்முடைய கணினியை அவசரமாக வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் அனைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் லாக் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நம்முடைய கணினியின் டெஸ்க்டாப்பினை லாக் செய்யலாம். இதனால் நம்முடைய கணினியை வேறு எவராலும் அனுக முடியாது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

   
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பின் அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் ScreenBlur என்னும் சுருக்குவிசையை பயன்படுத்தி ஒப்பன் செய்யவும். பின் விரும்பிய கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Automation டேப்பினை தேர்வு செய்து நம் விருப்பபடி தேர்வுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று Hotkeys டேப்பில் வேண்டிய சுருக்குவிசைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். டெஸ்க்டாப்பினை லாக் செய்ய , டெஸ்க்டாப்பினை மறைக்க சுருக்கு விசைகளை உருவாக்கி கொள்ள முடியும்.

ScreenBlur மென்பொருளை பயன்படுத்தி கணினியை லாக் செய்தவுடன், டெக்ஸ்க்டாப்பில் இதே போன்று தோன்றும். இந்த லாக்கினை விடுவிக்க வேண்டுமெனில் கடவுச்சொல்லை உள்ளிட்டால் மட்டுமே இந்த ScreenBlur லாக்கில் இருந்து வெளியேற முடியும். விண்டோஸ் கீ மற்றும் L கீகளை ஒருசேர அழுத்தி விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்து கொள்ளவும் முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியானது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, விண்டோஸ் இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே இருப்பது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி ஆகும். விண்டோஸ் 7 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 8 ம், விண்டோஸ் 8 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 9 ம் இருப்பியல்பாகவே உள்ளது. இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் பெயரை பயனாளர்களின் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


மேலே இருக்கும் படமானது இருப்பியல்பாக இருக்கும் பெயர் Windows Internet Explorer இதனை மாற்றம் செய்ய வழிமுறைகள்.

முதலில் ரிஸிஸ்டர்  எடிட்டரினை ஒப்பன் செய்யம். இதற்கு விண்டோஸ் பொத்தான் மற்றும் R பொத்தானை ஒரு சேர அழுத்தும் போது. Run விண்டோ ஒப்பன் ஆகும் அதில் regedit என்று டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். தற்போது ரிஸிஸ்டர்  எடிட்டர் ஒப்பன் ஆகும்.



அதில் பின் வரும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும்.  HKEY_CURRENT_USER -> Software -> Microsoft -> Internet Explorer ->Main , பின் Main பட்டையை தேர்வு செய்து. Edit -> New -> String Value என்பதை தேர்வு செய்யவும்.


பின் நீங்கள் உருவாக்கிய String Value வின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு சுட்டெலியின் உதவியுடன், வலது கிளிக் செய்து தோன்றும் Context Menu வில் Rename என்பதை தெரிவு செய்து, Window Title என்பதை உள்ளிடவும்.


தற்போது Window Title என்பதை சுட்டெலியின் உதவியுடன் இருமுறை சொடுகி, தோன்றும் விண்டோவில் Value Data என்பதில் உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும். நான் //TCINFO என்று சான்றாக உள்ளிட்டுள்ளேன். நீங்கள் விரும்பிய படி பெயரை மாற்றிக்கொள்ள முடியும். தமிழிலும் மாற்றிக்கொள்ள முடியும். 


அவ்வளவு தான் தற்போது ரிஸிஸ்டர் எடிட்டரை மூடிவிட்டு, இண்டர்நெட் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். தற்போது பெயர் மாற்றம் செய்ய பட்டு இருக்கும்.


இதே முறைமையை பயன்படுத்தி மீண்டும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் Window Title வரை சென்று அதனை நீக்கி விட்டால் போதும். மீண்டும் எக்ஸ்புளோரர் பழைய நிலைக்கு வந்துவிடும்.