தமிழில் கணினி செய்திகள்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,, at February 24, 2013
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியானது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, விண்டோஸ் இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே இருப்பது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி ஆகும். விண்டோஸ் 7 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 8 ம், விண்டோஸ் 8 ல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 9 ம் இருப்பியல்பாகவே உள்ளது. இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் பெயரை பயனாளர்களின் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


மேலே இருக்கும் படமானது இருப்பியல்பாக இருக்கும் பெயர் Windows Internet Explorer இதனை மாற்றம் செய்ய வழிமுறைகள்.

முதலில் ரிஸிஸ்டர்  எடிட்டரினை ஒப்பன் செய்யம். இதற்கு விண்டோஸ் பொத்தான் மற்றும் R பொத்தானை ஒரு சேர அழுத்தும் போது. Run விண்டோ ஒப்பன் ஆகும் அதில் regedit என்று டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். தற்போது ரிஸிஸ்டர்  எடிட்டர் ஒப்பன் ஆகும்.



அதில் பின் வரும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும்.  HKEY_CURRENT_USER -> Software -> Microsoft -> Internet Explorer ->Main , பின் Main பட்டையை தேர்வு செய்து. Edit -> New -> String Value என்பதை தேர்வு செய்யவும்.


பின் நீங்கள் உருவாக்கிய String Value வின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு சுட்டெலியின் உதவியுடன், வலது கிளிக் செய்து தோன்றும் Context Menu வில் Rename என்பதை தெரிவு செய்து, Window Title என்பதை உள்ளிடவும்.


தற்போது Window Title என்பதை சுட்டெலியின் உதவியுடன் இருமுறை சொடுகி, தோன்றும் விண்டோவில் Value Data என்பதில் உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும். நான் //TCINFO என்று சான்றாக உள்ளிட்டுள்ளேன். நீங்கள் விரும்பிய படி பெயரை மாற்றிக்கொள்ள முடியும். தமிழிலும் மாற்றிக்கொள்ள முடியும். 


அவ்வளவு தான் தற்போது ரிஸிஸ்டர் எடிட்டரை மூடிவிட்டு, இண்டர்நெட் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். தற்போது பெயர் மாற்றம் செய்ய பட்டு இருக்கும்.


இதே முறைமையை பயன்படுத்தி மீண்டும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பெயரை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் Window Title வரை சென்று அதனை நீக்கி விட்டால் போதும். மீண்டும் எக்ஸ்புளோரர் பழைய நிலைக்கு வந்துவிடும்.

1 Comments:

புதிய செய்தி.

மிக்க நன்றி.

Post a Comment