தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 10 இயங்குதளத்தை Activate செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,

நம்மில் பலர் விண்டோஸ் பயனாளர்களாக தான் இருப்போம். தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளத்தை எந்த வித மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆக்டிவேட் செய்ய முடியும். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

விண்டோஸ் Activation Link - https://get.msguides.com/windows-10-8.1-8-7.txt

 

windows 10 activate

 

மேலே கொடுக்கப்பட்ட link னை கிளிக் செய்து, வரும் விண்டோவில் இருக்கும் text - னை காப்பி செய்து ஒரு .bat பைலாக save செய்து கொள்ளவும். பின் அந்த பைலை ஒப்பன் செய்யவும். அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய விண்டோஸ் 10 இயங்குதளம் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.


இந்த பதிவினை வீடியோ பதிவாக காண :- https://youtu.be/D7gaeYklK0I





வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெப்சைட்டுகளை ப்ளாக் செய்தால் இதனை தடுக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்திலையே அதற்கான எளிய வழி உள்ளது.


முதலில் C:\Windows\System32\drivers\etc என்ற போல்டரினை ஒப்பன் செய்யவும். அதில் உள்ள hosts என்ற பைலினை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை உள்ளீடு செய்யவும்.

உதாரணமாக நாம் கூகுள் வெப்சைட்டினை ப்ளாக் செய்ய வேண்டுமெனில் 127.0.0.1 www.google.com என்று உள்ளீடு செய்யவும். இந்த பைலில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் இதற்கு உங்களுக்கு அட்மின் உரிமை தேவை.

விண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி?



இந்த முறையினை பின்பற்றி எளிமையாக வெப்சைட்டுகளை ப்ளாக் செய்து கொள்ள முடியும். 

வெப்சைட்டுகளை அன்ப்ளாக் செய்ய வேண்டுமெனில் மேலே கூறியுள்ள வழிமுறையினை பின்பற்றி hosts என்ற பைலினை ஒப்பன் செய்து இதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை நீக்க விரும்புகிறீர்களோ அதனை நீக்கிவிட்டு பைலினை சேமித்தி கொள்ளவும்.

Youtube சேனல் முகவரி :- 


இந்த பதிவின் வீடியோ பதிவு:- 


விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ல் வெளியீடு

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாக ப்ரிவியூ பதிப்பினை வழங்கியது. இந்த பதிப்பில் இருந்த குறைகளை நீக்கி முழு சிறந்த தொகுப்பினை விண்டோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, மிகச்சிறப்பான ஸ்டார்ட் மெனுவையும், மிக விரைவாக தொடங்குதளையும் , மறுதொடங்குதளையும் கொண்டுள்ளது. வைரஸ் தொல்லைகளிருந்து கணினியை பாதுகாக்கும் விதமாக விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இலவசமாகவே விண்டோஸ் டிபெண்ட்டர் ஆண்டி மால்வேர் மென்பொருள் வருகிறது.

விண்டோஸ் 10 சிறப்பம்சங்கள்:

  • Cortana: இந்த வசதி தற்போது விண்டோஸ் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது விண்டோஸ் இயங்குதளத்திலும் வரஉள்ளது. இதன் மூலம் எளிமையாக நினைவூட்டல் (Reminders) , தகவல்களை மிக விரைவாக தேடும் வசதியையும் பெற முடியும்.
  • Microsoft EDGE: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய உலாவி, இதுவரை வெளிவந்த இயங்குதளங்களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இருப்பியல்பாகவே இருந்து வந்தது , இனி அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி வெளிவர உள்ளது.
  • மைரோசாப்ட் ஆப்பிஸ்: விண்டோஸ் இயங்குதளங்கள் வெளியிடும் போது, ஆப்பிஸ் பதிப்புகளின் புது வெளியீடு வெளியிடப்படும்.  தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ள நிலையில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் 2016 பதிப்பும் வெளிவர உள்ளது.
  • Xbox: எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு அப்ளிகேஷன் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே வெளிவர உள்ளது. இதன் மூலம் விண்டோஸ் கணினிகளை நெட்வோர்க்கில் இணைத்து விளையாட முடியும்.
இதுபோன்று பல்வேறு விதமான வசதிகளுடன் ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ளது. தற்போது நீங்கள் வாங்கும் கணினியில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இருப்பின் அதனை நீங்கள் விண்டோஸ் 10 ஆக புதுப்பித்து கொள்ள முடியும்.